“குஷ்பு ஒரு சகலகலாவல்லவர்” -அரண்மனை-4′ விழாவில் தமன்னா தடாலடி

தமன்னா  அட்டகாசமாக நடித்துள்ளார். அவர் கேரியரில் இப்படம், அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். ராஷிகண்ணா எனக்கு மிகவும் கம்ஃபர்ட்டான ஆர்டிஸ்ட்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“குஷ்பு ஒரு சகலகலாவல்லவர்” -அரண்மனை-4′ விழாவில் தமன்னா தடாலடி!

Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அரண்மனை 4’. இந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

இந்நிகழ்வினில்..நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு பேசியதாவது,

“இப்படத்தின் நான்கு பாகங்கள் வரை வெற்றிகரமாக வருவதற்கு முக்கிய காரணம் சுந்தர் சி தான். அவருடன் 30 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு படத்திலும் எப்படி வித்தியாசமாக ரசிகர்களை மகிழ்விக்கலாம் என எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பார்.  திரையரங்கில் குடும்பத்தோடு ரசிக்கும் ரசிகர்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம். அவர்களுக்கு நன்றி. மேலும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஏசிஎஸ் அருண் குமாருக்கும் அவரது குடும்பத்திற்கும் நன்றி “.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது,”

சுந்தர் சி சார் படத்தில் வேலை பார்ப்பது, நமது அப்பா அண்ணனுடன் வேலை செய்வது மாதிரி தான். அவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொள்வார். அவருக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லிவிடுவார். ஷூட்டிங் ஸ்பாட் எப்போதும் ஜாலியாக இருக்கும். இப்படத்தில் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்”.

நடிகர் யோகிபாபு பேசியதாவது,”

இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த சுந்தர் சி.க்கு நன்றி. அவரின்  கலகலப்பு படத்தில் வேலை பார்த்த போது என்னை அழைத்து நீங்க நடந்து வரும்போது உங்க தலைக்குப் பின்னாடி ஒரு சக்கரம் சுத்துது என வாழ்த்தினார். அவரது ஆசிர்வாதத்தால் இன்னும் திரையுலகில் என் வாழ்க்கை சக்கரம் சுத்த வேண்டும். அவர் நிறைய வாய்ப்பு தர வேண்டும். எல்லோருக்கும் என் நன்றிகள்”.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நடிகை ராஷி கண்ணா பேசியது, “இதற்கு முந்தைய அரண்மனை படத்தை விடவும் இந்த படத்தின் டிரெய்லர் அட்டகாசமாக இருக்கிறது. இந்தப் படம் கண்டிப்பாக  பிரம்மாண்டமாக இருக்கும். சுந்தர் சி அத்தனை அழகாக படத்தை எடுத்துள்ளார். அவர் இந்த மாதிரி கமர்ஷியல் படங்களை எடுப்பதில் வல்லவர். நடிகை தமன்னாவுடன் இணைந்து தெலுங்கு படத்தில் வேலை செய்துள்ளேன். இப்போது தமிழில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி”.

நடிகை தமன்னா பேசியதாவது, “சுந்தர் சி, குஷ்பூ மேடம் எனது ஃபேமிலி மாதிரி. பணம், வாய்ப்பு எல்லாம் அப்புறம் தான். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சுந்தர் சி சார் உடன் என்றால் ஓகே ‌அவரை அவ்வளவு நம்புகிறேன். மிகத் திறமையான இயக்குநர். அவர் நினைத்தால் ஹீரோக்களை வைத்து என்ன மாதிரி படங்கள் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் பெண்களை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும் படி கதை செய்துள்ளார், அவருக்கு நன்றி. குஷ்பூ மேடத்தால் முடியாதது எதுவுமே இல்லை. ராஷி கண்ணாவும் நானும் ஏற்கனவே தெலுங்கு படம் செய்துள்ளோம். மிகச்சிறந்த கோ ஆர்டிஸ்ட், மிக உண்மையானவர். என்னை அதிகம் நேசிப்பவர்.

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி பேசியது “அரண்மனை 4 சுந்தர் சி அண்ணாவுடன் ஆறாவது படம். என்னை இசையமைப்பாளராக, ஹீரோவாக அறிமுகப்படுத்தி என் மீது மிகப்பெரும் அன்பையும், நம்பிக்கையையும் வைத்திருக்கும் அண்ணாவிற்கு நன்றி”.

இயக்குநர் சுந்தர் சி பேசியது,”அரண்மனை முதல் மூன்று பாகங்களை விட இப்படத்தில் எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கும். இப்படத்தில் இரண்டு ஹீரோயின், ஒரு ஹீரோயின் ஒரே நேரத்தில் அவரைப் பார்த்தால் பயமாகவும் இருக்கணும், பரிதாபமும் வரணும். மேலும் குழந்தைக்குஅம்மாவாகவும் வரணும். இதை தமன்னா  அட்டகாசமாக நடித்துள்ளார். அவர் கேரியரில் இப்படம், அவரது வித்தியாசமான முகத்தைக் காட்டும். இப்படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். ராஷிகண்ணா எனக்கு மிகவும் கம்ஃபர்ட்டான ஆர்டிஸ்ட். என்னை முழுமையாக நம்புவார். இப்படத்தில் நன்றாகச் செய்துள்ளார். அரண்மனை படத்தில் காமெடி முக்கியம். என் படத்திற்கு ரசிகர்கள் வரக்காரணம் காமெடி தான், அதை நிறைவேற்றனும். பேப்பரில் நாங்கள் எழுதுவது பாதி தான், ஆர்டிஸ்ட் தான் அதை முழுதாக மாற்ற வேண்டும். மொத்தத்தில் அரண்மனை 4 மனதிற்கு மிகப்பிடித்த படமாக வந்துள்ளது. பின்னணி இசையில் வழக்கமான பேய் படம் போல இல்லாமல் வித்தியாசமாகச் செய்துள்ளார் ஆதி. எனக்கு எப்போதும் சப்போர்ட்டாக இருக்கும் என் மனைவிக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் ஏப்ரலில் வருகிறது ஆதரவு தாருங்கள் நன்றி.

இப்படத்தில் சுந்தர் சி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கே ஜி எஃப் ராம், VTV கணேஷ், சேசு, ஜேபி, டெல்லி கணேஷ், சந்தோஷ்பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக் குழு

தயாரிப்பு – Avni Cinemax (P) Ltd & Benz Media PVT LTD :எழுத்து இயக்கம் – சுந்தர் சி வசனம் – வெங்கடேஷ் ;இசை : ஹிப்ஹாப் தமிழா ;ஒளிப்பதிவு – இசக்கி கிருஷ்ணசாமி ;  படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர் ;கலை இயக்கம் -பொன்ராஜ் ; சண்டைப்பயிற்சி – ராஜசேகர் ; ஸ்டில்ஸ் – V.ராஜன் மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.