“எல்.ஐ.கே. ரிலீசானதே பெரிய வெற்றி தான்” – விக்னேஷ் சிவன் ஓப்பன் ஸ்பீச்!
‘செவன் ஸ்க்ரீஷ் ஸ்டுடியோ’ லலித்குமார், ‘ரெளடி பிக்சர்ஸ்’ நயன்தாரா இணைந்து தயாரித்து விக்னேஷ் சிவன் டைரக்ஷனில் உருவாகி, கடந்த 10-ஆம் தேதி ரிலீசானது ‘எல்.ஐ.கே’. மூன்று வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்து, மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, ரத்தாகி, அறிவிக்கப்பட்டு என பல சிக்கல்கள், தடைகளைத் தாண்டி ரிலீசான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர்ஹிட்டாகி, இரண்டாவது வாரத்தை நோக்கி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்காக மக்களுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் 15-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
இதில் டைரக்டர் விக்னேஷ் சிவன், ஹீரோ பிரதீப் ரங்கநாதன், ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி, செகண்ட் ஹீரோயின் கெளரி கிஷன், வில்லன் எஸ்.ஜே.சூர்யா, படத்தில் நடித்த டைரக்டர் கே.பி.ஜெகன், சீமானின் மகள் தமிழ்செல்வியாக நடித்த தீபிகா வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தல் நேர பரபரப்பு என்பதால், நாதக சீமானின் வாழ்த்துச் செய்தி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு திரையில் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் பேசியவர்கள்.
கெளரி கிஷன்,
“இந்தப் படத்தின் தரத்திற்காக அனைவராலும் பாராட்டப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. நம் தலைமுறையில் கொஞ்சம் கவனிக்கப்படாமல் இருக்கும் நட்பு பற்றி இப்படம் பேசியிருப்பது முக்கியமான அம்சம்”.
தீபிகா வெங்கடாசலம்,
“நான் படத்தில் நடித்தவள் என்பதைத் தாண்டி ஒரு பார்வையாளராக இப்படத்தை மிகவும் ரசித்தேன். சினிமாவில் வாய்ப்புக்காக போராடும் என்னைப் போன்ற இளம் கலைஞர்களுக்கு நம்பிக்கை தந்திருக்கிறார் டைரக்டர் விக்னேஷ் சிவன் சார்’.
“இன்றைய உலகில் நாம் அனைவருமே செல்போனுக்குள் மூழ்கி, நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்து விலகிவிட்ட சூழ்நிலையில் இந்தப் படம் வந்திருப்பது மிகவும் ஆறுதலாக உள்ளது. இந்த மாதிரியான நல்ல கருத்துள்ள படத்தில் நானும் இருப்பது பெருமை. டைரக்டர் விக்னேஷ் சிவனின் விஷன் ரொம்பவே பரந்துபட்டது”.
“விக்னேஷ் சிவன் ஒரு நாள் போன் பண்ணி, நாளைக்கு மலேசியாவில் ஷூட்டிங் இருக்கு, வரமுடியுமான்னு கேட்டார். நானும் ஓகேன்னுட்டேன். இந்த மாதிரி இனிமையான அழுத்தம் கொடுத்தாலும் அது படத்துக்காகவும் ரசிகர்களுக்காகவும் தான். பல சிரமங்கள், வலிகளை நாங்கள் கடந்திருந்தாலும் அதெல்லாம் எங்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் திறமைசாலி தான் சிவன். தொடர்பில் இல்லாத நண்பர்கள் கூட இப்போது என்னைத் தொடர்பு கொண்டு இப்படத்தின் சிறப்பை பேசுவதிலிருந்தே இதன் வெற்றி தெரிகிறது. மிக சாதாரண நிலையிலிருந்து இந்த உயரத்திற்கு வந்துள்ள பிரதீப் ரங்கநாதன், மக்கள் மனங்களை வென்றுள்ளார்”.
“தயாரிக்கும் போது பல சிக்கல்கள், அதன் பின் ரிலீஸ் தேதியை பலமுறை அறிவித்து கேன்சலாகி, இப்படி இடைவெளி அதிகமாகி ரிலீசாகிறதே படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எனக்கிருந்தது. ஆனால் எல்லா சந்தேகத்தையும் உடைத்து இந்த எல்.ஐ.கே.வெற்றி பெற்றதற்கு விக்னேஷ் சிவன் சாரின் அசாத்திய உழைப்பும் நம்பிக்கையும் தான் காரணம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. மக்களின் அன்பும் ஆதரவும் திக்குமுக்காட வைத்தது. இரண்டாவது வாரம் கடந்தும் ஓடி, இன்னும் சூப்பர்ஹிட்டாவது மீடியாக்களின் கைகளில்தான் உள்ளது”.
டைரக்டர் விக்னேஷ் சிவன்,
“எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து என்னை நான் சேலஞ்ச் பண்ணிக்கிட்டது தான் இந்தப் படம். இரண்டாவது வாரத்தையும் கடந்து ஓடி 100 கோடி க்ளப்பில் எல்.ஐ.கே.சேரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. என்னைப் பொறுத்த வரை இந்தப் படம் ரிலீசானதே பெரிய வெற்றி தான் என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. ஏன்னா அவ்வளவு சிக்கல்கள், சிரமங்கள், தடைகள் எல்லாவற்றையும் கடந்து இந்தப் படம் ரிலீசாவதில் பெரும் துணையாக நின்றவர் லலித்குமார் சார் தான்.
மீடியா நண்பர்கள் உங்க வீட்டுப் பிள்ளையா என்னை நினைச்சு இந்தப் படத்தின் பாஸிடிவ் விசயங்களை எழுதி இன்னும் ஆதரவு தாருங்கள். நெகடிவ் இருந்தா என்னைத் தனியா கூப்பிட்டு சொல்லுங்க. வீடியோவுல போட்டு என்னைக் கதறவிட்ராதீங்க. ஏன்னா நிறைய பேருக்கு இன்னும் பேமெண்ட் பேலன்ஸ் இருக்கு நண்பர்களே” என உண்மையை ஓப்பனாகவும் ஜாலியாகவும் பேசினார் விக்னேஷ் சிவன்.
— ஆண்டவர்











Comments are closed, but trackbacks and pingbacks are open.