அங்குசம் பார்வையில் ‘லேபில்’ (வெப் சீரிஸ்) 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘லேபில்’ (வெப் சீரிஸ்) 

லேபில்' (வெப் சீரிஸ்)
லேபில்’ (வெப் சீரிஸ்)

தயாரிப்பு: ‘முத்தமிழ் படைப்பகம்’ பிரபாகரன். ரிலீஸ்: டிஸ்னி ஹாட் ஸ்டார் (ஓடிடி) டைரக்டர்: அருண் ராஜா காமராஜ், ஆர்ட்டிஸ்ட்: ஜெய், தான்யா ஹோப், சரண் ராஜ், ரமா, இளவரசு, சுரேஷ் சக்கரவர்த்தி,ஸ்ரீமன்,மாஸ்டர் மகேந்திரன், ஸ்ரீஜா, ஹரி சங்கர், நாராயணன். ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன், இசை: சாம் சி.எஸ்., எடிட்டிங்: ராஜா ஆறுமுகம், ஸ்டண்ட்: சக்தி சரவணன். பிஆர்ஓ: சதீஷ் –சிவா(Aim)

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

வடசென்னை வாலி நகர். ஃபுட்பால் விளையாடும் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், ஒருவரை சுற்றி வளைத்து கத்தியால் குத்திக் குதறி கொலை செய்கிறார்கள். இந்த ‘லேபில்’ வெப் சீரிஸின் முதல் அத்தியாயத்தில் முதல் காட்சியே இப்படித்தான் ஆரம்பமாகுது. சரிதான், இதுவும் மத்த வெப் சீரிஸ் லிஸ்ட்டில் இருக்குற மாதிரி தான். வன்முறை தான், வெட்டுக் குத்து கொலை தான் என நாம் நினைக்க ஆரம்பிக்கும் முன்பே, அப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவு பண்ணீராதீக, நான் வேற மாதிரி என்பதை கொலைக்குப் பிறகு வரும் பள்ளி வகுப்பறை சீனில் பளீரென நிரூபிக்கிறார் நம்ம அருண் ராஜா காமராஜ்.

அந்த கொலை நடந்த இடத்தில் இருந்ததாலேயே, சிறுவன் பிரபாகரனும் கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுகிறான். அங்கும் வார்டனின் துணையுடன் எஸ்.எஸ்.எல்.சி.பரிட்சைக்கு படிக்கிறான். சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்து பரிட்சை எழுதி முதல் மாணவனாக தேர்ச்சி பெறுகிறான். ” மேல் படிப்பு முடித்து நீ என்னவாகப் போற” என்று வகுப்பாசிரியை கேட்கிறார். ” வாலி நகர் பசங்கன்னா லே கேவலமமா பாக்குறாங்க. இந்த அசிங்கமான லேபிலை மாத்தணும். அதனால் நான் என்னவாகணும்னு நீங்களே சொல்லுங்க டீச்சர்” ஆத்திரமும் ஆற்றாமையும் பொங்கி வெடித்து அழுகிறான் பிரபாகரன்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

லேபில்' (வெப் சீரிஸ்)
லேபில்’ (வெப் சீரிஸ்)

“ஒருத்தன்ட்ட இருக்கும் பணம், அவன் தோல் நிறம், வசிக்கிற ஏரியா, வீடு இதவச்சுத்தான்டா முடிவு பண்ணுது உலகம். அதை மாற்றும் இடத்துக்கு நீ வந்து நிமிர்ந்து நில் ” என கம்பீர தைரியம் சொல்கிறார் டீச்சர். அடடா இதான்டா நம்ம அருண் ராஜா காமராஜ். லேபிலுக்கு கரெக்டா கனெக் ஷன் கொடுத்துருக்காரு என்ற உற்சாகத்துடன் நாமும் நிமிர்ந்து உட்காருகிறோம்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

ஆனால் இரண்டாவது எபிசோடில் வழக்கம் போல வடசென்னையின் ரவுடிகள், தாதாக்கள், கூலிக்கு கொலை செய்யும் இளைஞர்கள் என பலப்பல சினிமாக்களில் பார்த்து சலித்த வழித்தடத்தில் தனது திரைக்கதை வண்டியை ஓட்ட ஆரம்பிக்கிறார் நம்ம அண்ணன் அருண் ராஜா காமராஜ். நான்கு எபிசோடுகள் வரை தான் நாம் பார்த்தோம். அதற்குப் பிறகான எபிசோடுகளை எப்படி கொண்டு போகப் போறார், க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்னு யூகிக்க முடியாததால் சடக்குன்னு ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.

இருந்தாலும் ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ படைப்பாளியான அருண் ராஜா காமராஜ், வெப் சீரிஸ் என்பதாலேயே வெட்டுக் குத்து, ரத்தம் பீச்சி அடிக்கும் கொடூரம், மிக சரளமான ஆபாச வார்த்தைகள் என்ற சாக்கடைக்குள் இறங்க வேண்டிய தேவை என்ன? வக்கீல் பிரபாகரன் கேரக்டரில் ஜெய், டி.வி.யின் டிஆர்பி ரேட்டிங்கிற்காக கண்ட கேவலத்தை மும் ஷூட் பண்ணும் ரிப்போர்ட் ட்ராக தான்யா ஹோப் வருகிறார்கள்.

லேபில்' (வெப் சீரிஸ்)
லேபில்’ (வெப் சீரிஸ்)

” லேடி ரிப்போர்ட்டர்னா அட்ஜெஸ்ட்மெண்ட்னு ஒருத்தன் சொன்னானே அது உண்மையா? உங்களுக்கு பிடிச்சத மக்கள்ட்ட திணிக்காதீக. வடசென்னையின் வளமான ஏரியா பக்கமும் உங்க கேமராவை திருப்புங்க” என தான்யா ஹோப்பிடம் ஜெய் சொல்லும் சீன் அருண் ராஜா காமராஜ் பிராண்ட் புராடெக்ட். ஜெய்யின் அம்மா -அப்பாவாக சரண் ராஜ், ரமா, இன்ஸ்பெக்டராக இளவரசு, கிரிமினல்களின் வக்கீலாக சுரேஷ் சக்கரவர்த்தி என எல்லா கேரக்டர்களுமே கச்சிதம். சாம் சி.எஸ்.ஸின்டெரர் கூட்டும் பேக்ரவுண்ட் ஸ்கோர் லேபிலுக்கு மேட்ச்சா இருக்கு.

ஆங்காங்கே சில சீன்களில் பெரியார், அம்பேத்கர், புத்தர், மார்க்ஸ் படங்கள் பளிச்சிடுவது ஓ.கே. ஆனால் ஜெய் வீட்டில் அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் போட்டோக்களுடன் எம்.ஜி.ஆர். போட்டோ எதுக்குண்ணே? ஓ… வக்கீல் வடசென்னைக்காரர், அவரு பேரு பிரபாகரன் அப்படிங்கிற தாலயா?

– மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.