1000 ஆதரவற்ற, சிறப்பு குழந்தைகளுடன் சிறார் தீபாவளி – 2023 !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

1000 ஆதரவற்ற, சிறப்பு குழந்தைகளுடன் சிறார் தீபாவளி – 2023 !

தீபாவளி - பரிசு
தீபாவளி – பரிசு

திருச்சியில் கடந்த 12 வருடங்களாக செயல்பட்டு வரும் பிஎஸ்ஆர் டிரஸ்ட் கொடுத்து உண், பாத்திரம், கற்க தோள் கொடு, கல்வி காடு, 250 ஹேண்ட்ஸ் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பல மாணவர்களை படிக்க வைப்பது, அவர்களுக்கான அடிப்படை தேவைகள் முதற்கொண்டு செயல்படுத்துவது, தினமும்  ஆதரவற்ற மக்களுக்கு உணவுகள் வழங்குவது, கல்விக்கொடு திட்டங்களின் மூலம் கல்வி குறித்த பல விஷயங்கள் பெரிதளவு சென்று சேராத தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிகள் வரை சென்று சேர்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

இனிய ரமலான் வாழ்த்துகள்

இப்படி பல திட்டங்களை செய்லபடுத்தி வரும் பிஎஸ்ஆர் டிரஸ்ட் கடந்த 12 வருடங்களாக சிறார் தீபாவளி என்ற நிகழ்வை முன்னெடுத்து வருகின்றனர். இதில் பல குழந்தைகளுக்கு புத்தாடை, பலகாரங்கள், பட்டாசு மற்றும் அவர்களுக்கான சிறப்பு உணவுகள் என தீபாவளிக்கு அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குகின்றனர்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

இத்தனை வருடங்கள் கடந்து இந்த 12வது வருடத்தில் அரசு காப்பக குழந்தைகள், தொண்டு நிறுவன குழந்தைகள், குடிசை வாழ் பகுதி குழந்தைகள், குழந்தைகள் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகள் என 16 இல்லத்தில் இருந்து வந்திருந்த ஆதரவற்ற, சிறப்பு குழந்தைகளுடன் பிஎஸ்ஆர் டிரஸ்டின் ‘சிறார் தீபாவளி-2023’  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

சிறப்பு விருந்தினர் நடிகர் ஹரிஷ் கல்யாண்
சிறப்பு விருந்தினர் நடிகர் ஹரிஷ் கல்யாண்

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஹரிஷ் கல்யாண், MMM முருகானந்தம், அன்பில் பவுண்டேசன் டிரஸ்டி மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் மனைவி ஜனனி மகேஷ், தென்னக ரயில்வேயின் வணிக பிரிவு மேலாளர் செல்வி. மோகனப்ரியா IRTS, திருச்சி கிழக்கு திமுக செயலாளர் திரு.எம்.மதிவாணன், நேஷனல் கல்லூரியின் துணை முதல்வர் Dr. D. பிரசன்ன பாலாஜி, குழந்தைகள் நல கமிட்டியின் தலைவர். பி.மோகன், எங் இந்தியன்ஸ் திருச்சி சாப்டர் சேர்மேன் திரு.பி.அசோக் ராமநாதன்,  திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.பி.ராகுல் காந்தி, பிஎஸ்ஆர் டிரஸ்ட் நிதி அறங்காவலர் Dr. D. குணசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தீபாவளி பரிசினை வழங்கியதுடன் பிஎஸ்ஆர் டிரஸ்ட் முன்னெடுத்துள்ள குழந்தைங்களுக்கான இப்பெரிய நிகழ்வை ஆச்சரியத்துடன் பாராட்டினர்.

மேலும் நிகழ்ச்சி குறித்து பிஎஸ்ஆர் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஷேக் அப்துல்லா பேசுகையில் 12ஆம் வருட சிறார் தீபாவளி நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது, இந்த வருடம் 1000 குழந்தைகளின் முகத்தில் புன்னகை மத்தாப்பை பார்த்த நாம், அடுத்த வருடத்தில் இன்னும் மிக பெரிதாக 5000 குழந்தைகளின் முகத்தில் காண்போம் என்று கூறி நெகிழ வைத்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.