அங்குசம் சேனலில் இணைய

பழைய கட்டிடத்தில் இயங்கும் லால்குடி அரசு மருத்துவமனை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

1919 ஆம் ஆண்டில் கட்டிய பழைய கட்டிடத்தில் இயங்கும் லால்குடி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய சுகாதார மிஷனின்(NHM)மருத்துவ இயக்குநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் 75 கிரமங்களும் மற்றும் குக்கிராமங்களில் சுமார் 3.40 லட்சம் மக்களும் வசித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் தினதோறும் 750 புறநோயாளிகள் வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர்.
மேலும் 140 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் மருத்துவம் பார்த்துகொண்டு இருக்கின்றனர். இந்த மருத்துவமனையில் கட்டிட வசதிகள் இல்லாததால் மருத்துவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு 1919-20களில் கட்டிய நான்கு கட்டிடம் தற்போது எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் உள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மேலும், இந்த மருத்துவமனைக்கு மழைகாலங்களில் அதிகப்படியான புறநோயாளிகள் வருவதால் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் நோயாளிகளை தரையில் அமர வைத்து சிகிச்சை அளிக்கும் அவலநிலை இருந்து வருகின்றது. மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லால்குடி சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியில் இருந்து 24 படுக்கை வசதியுடன் ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

பல ஆண்டுகளுக்கு முன் ரூ. 50ஆயிரம் செலவில் பழைய கட்டிடம் பராமரிப்பு செய்யப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இருந்தும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க கட்டிட வசதி இல்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் மருத்துவரிடம் கோபமும் பிரச்சனைகளும் செய்து வருகின்றனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அரசு மருத்துவமனையில் கட்டிட வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனை செல்லும் அவலம் உள்ளது. மேலும் பண வசதி இல்லாமல் தனியார் மருத்துவ மனைக்கு செல்ல முடியாமல் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜாரால் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் சித்தா பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, பிணவறை, பழைய குவாட்டர்ஸ் போன்றவை 1930-ம் ஆண்டு இயங்கிவந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, உள்ள பழைய கட்டிடத்தை இடிக்க பொதுபணித்துறை மூலம் அணுகியும் பெறப்பட்ட நிலையில், பழைய கட்டிடத்தை இடித்து புதிய மருத்துவமனை கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சியர், மண்டல இணைஇயக்குநர் மற்றும் தமிழக அரசு மருத்துவ இயக்குநர் உள்ளிட்டோர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என லால்குடி பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.