கலைஞருக்கே பூஜையா?

0

திராவிட இயக்கத் தமிழ் பேரவையின் இளைஞரணி சார்பில், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா ஜனவரி 5 ஆம் தேதி சென்னை அன்பகத்தில் நடந்தது. இதில் திராவிட இயக்கத் தமிழ் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப வீரபாண்டியன், கவிஞர் யுகபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய கனிமொழி, “ இளைஞர்கள் சமூக தளங்கள் மூலம் மாற்றங்களை, செய்திகளை மக்களுக்கு எவ்வளவு தூரம் எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் எடுத்துச் செல்ல வேண்டும். இன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றங்களை மக்களிடம் விதைக்கும் பொறுப்பு இளைஞர்களான உங்களிடம்தான் இருக்கிறது. ஆனால் இதை செய்யும்போது நம்மை அவமானப்படுத்துவார்கள், வெட்டி வேலை என்பார்கள்.
பெரியார் தனக்கு ஏற்பட்ட அவமானம் பற்றி கவலைப்பட்டது கிடையாது.

 

https://businesstrichy.com/the-royal-mahal/

அடுத்தது… நாம் எந்த நிலையிலும் சலிப்படைந்துவிடக் கூடாது. அண்ணன் சுபவீ அவர்கள் தொடர்ந்து காலை வேளைகளில் ஒரு நிமிடச் செய்தி என்று எல்லாருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் செய்திகளுக்கு மேல் அனுப்பியிருப்பார்கள். ஆனால் யார் மாறுகிறார்கள், யார் மாறவில்லை என்ற சலிப்புக்குள் போகாமல் தொடர்ந்து செயலாற்றி வருகிறார். இதைத்தான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் செய்துகொண்டிருந்தார்கள்.
‘நீங்க சொல்லி எத்தனை பேர் மாறியிருக்காங்க? எத்தனை பேர் கோயிலுக்கு போறத விட்டுட்டாங்க. எத்தனை பேர் சாதியை விட்டுட்டாங்க?’ என நீங்கள் கேட்கலாம். ஆனால் நியாயம், நீதி கிடைக்காதவர்கள் இன்னும் இருந்துகொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரை இது தொடரும்” என்று பேசிய கனிமொழி அதையடுத்து கலைஞரின் வாழ்வில் இருந்தே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

 

“பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் நாங்கள் இவ்வளவு உழைத்தோம் என்று ஒரு நாளும் சலிப்படைந்ததில்லை. தலைவர் கலைஞர் தனது வாழ்வில் இருந்தே இதற்கு உதாரணம் சொல்லியிருக்கிறார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தலைவரின் தந்தை தனது பெற்றோருக்கு செய்யக் கூடிய பூஜைகளை தவறாமல் செய்வாராம். அப்போதெல்லாம் சிறுவனான தலைவர் கலைஞர், ‘இதனால எல்லாம் ஒரு பயனும் இல்லை’ என்று சொல்வாராம்.

ஒரு நாள் தலைவரின் தந்தை தன் பெற்றோருக்கு பூஜை செய்யும்போது அந்த பூஜையை செய்து வைக்கும் அய்யர் வாய் நிறைய வெற்றிலை பாக்கு போட்டபடி வந்தாராம். அவர் என்ன மந்திரம் சொல்கிறார் என்று அவருக்கும் புரியவில்லை, கேட்பவர்களுக்கும் புரியவில்லை. ஆசாரம் என்று அவர் சொல்பவற்றை அவரே பின்பற்றவில்லை என்று தெரிந்துகொண்ட தலைவரின் தந்தை, ‘இதெல்லாம் செய்யாதே இதனால ஒரு பயனும் இல்லை’னு என் பையன் (கலைஞர்) சொல்லிக்கிட்டிருப்பான். இப்ப உன்னை பார்த்ததும்தான் அது சரினு தோணுது’ என்று சொன்னாராம். அதனால நாம் சொல்வதை சொல்லிக் கொண்டே இருப்போம்.

மாற்றங்கள் தானாக வரும். ஒவ்வொரு மனிதனும் தான் அந்த இடத்துக்கு வரும்போது அந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டே ஆக வேண்டும்” என்று பேசினார். அப்போது அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.
கனிமொழியின் இந்தப் பேச்சு பெரியாரிய வாதிகள் மத்தியிலும், திமுகவிலுள்ள பெரியாரிஸ்டுகள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

“கனிமொழி பல மேடைகளில் பேசியிருக்காங்க. ஆனா கலைஞரின் பெற்றோர் பற்றிய இந்த விஷயத்தை இப்பதான் சொல்றாங்க. இதுக்கு ஒரு பின்னணி இருக்கு. கலைஞர் சமாதியில தயிர் வடை வைத்து பூஜை பண்றாங்கன்னும், துர்கா ஸ்டாலின் காசி போய் கலைஞருக்கு மரணத்துக்குப் பிறகான பூஜைகள் செஞ்சாங்கன்னும் சர்ச்சைகள் கிளம்புச்சு. இந்த நிலையிலதான் கலைஞருக்கு இதுபோன்ற விஷயங்கள்ல எல்லாம் நம்பிக்கையே இல்லைங்குறதை திராவிட இயக்கத் தமிழர் பேரவை மூலமா கனிமொழி வெளிப்படையாக சொல்லியிருக்காங்க. கனிமொழி பொதுவாகப் பேசினாலும் இது துர்கா ஸ்டாலினுக்கான பதில் மாதிரிதான் இருக்கு” என்கிறார்கள் அவர்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.