அரசு மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்காக தானமாக வழங்கப்பட்ட நிலத்தை திமுகவைச் சேர்ந்த கே.ராஜேந்திரன் என்பவர் பட்டா போட்டு விற்று அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறார்” என எஸ்.ஏ.ஹரிகிருஷ்ணா என்பவர் திருச்சி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இது குறித்து விபரமறிய திருச்சி, தென்னூர், அண்ணாநகரில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணாவை சந்தித்து பேசினோம். அப்போது அவர் கொடுத்த புகார் மனு குறித்து நம்மிடம் கூறுகையில்,
திருச்சி, கம்பரசம்பேட்டையில் எனது தந்தைN.V.S.ஆனந்தனின் ஷார் தீம் பார்க் நிறுவனத்திற்கு சொந்தமான 16.64 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் ரூ.100 கோடி. அந்த இடத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பதற்காக கே.ராஜேந்திரன் மற்றும் டி.ரமேஷ் ஆகியோருடன் 2011ல் JOINT VENTURE AGREEMENT போட்டு பவரும் கொடுத்தார் என் தந்தை. அந்த நிலங்களை 152 மனைகளாக பிரித்து லேஅவுட்டும் போட்டு அளவு கற்களையும் முறைப்படி அமைத்தோம். அத்துடன் சாலை மற்றும் பொது உபயோகத்திற்காக, ஜூன் 2012ல் பஞ்சாயத்துக்கு 2,07,000 சதுர அடி நிலம் தானமாகவும் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 2012ல், எங்களுக்கு தெரியாமலும் எவ்வித அரசு அனுமதியும் பெறாமலும், அரசுக்கு தானமாக கொடுத்த நிலத்தை, ராஜேந்திரன் தன்னிச்சையாக, சட்டத்திற்கு புறம்பாக ரத்து செய்ததோடு, அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து எங்களுடடைய நிலம் மற்றும் அரசுக்கு தானமாக வழங்கிய இடமான 15.80 ஏக்கர் நிலத்தை மோசடியாக கிரையும் செய்து உள்ளனர். இது நடந்தது 2015ல். இந்த மோசடி குறித்து அறிந்த என் தந்தை மோசடி கிரையப் பத்திரங்களை ரத்து செய்யக் கோரி தொடுத்த நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து 2018ல் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, ‘அரசு நிலம் அரசுக்கு திரும்ப கிடைக்கும் வரை எந்த பத்திரப்பதிவும் செய்ய வேண்டாம்’ என்று அதிகாரபூர்வ தடை உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் மாவட்ட வருவாய் அதிகாரி நடத்திய விசாரணையில், அரசு நிலமோசடி நடந்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். ஆனால் அரசு நிலத்தை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், 2012ல் தான பத்திரத்தில் உள்ள நில அளவுகளின்படி அரசின் பெயரில் பட்டாவை மட்டும் மாற்ற உத்தரவிட்டு 30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை சட்டப்படி மீட்காமல் மேற்படி கலெக்டர் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கினார். இதைப் பயன்படுத்திக் கொண்டு பவர் ஏஜெண்ட் ரஜேந்திரனும் அவரது கூட்டாளிகளும் மோசடியாக வளைத்த நிலங்களை அப்பாவி மக்களை ஏமாற்றி விற்க ஆரம்பித்தனர்.
மேற்குறிப்பிட்ட 16.60 ஏக்கர் நிலத்தில் எனக்கு என் தாயார் தான செட்டில் மெண்டாக கொடுத்த 1.60 ஏக்கர் நிலமும் அதில் உள்ளது. என் இடத்தை இணைத்தே அவர்கள் JOINT VENTURE AGREEMENT செய்துள்ளனர். இவர்களின் மோசடி தெரிந்து 2015 இறுதியிலேயே நான் அவர்களுக்கு கொடுத்த பவர் பத்திரத்தையும், போட்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டேன்.
நான் மேற்குறிப்பிடும் இடமானது குடமுருட்டி ஆற்றை தாண்டி உள்ளதால் அங்கு செல்வதற்கு 2007ம் ஆண்டே தமிழக அரசின் பொதுப் பணித்துறையிடம் உரிய அனுமதி பெற்று ஆற்றின் குறுக்கே எங்கள் செலவில் பாலம் அமைத்தோம். பாலத்திற்கென பொதுப் பணித்துறைக்கு வாடகையும் தொடர்ந்து செலுத்தி வருகிறோம். பாலத்தின் இறங்குதளம் எங்களது சொந்த இடமாகும். அந்த பாலம் மற்றும் இறங்குதளப் பாதை முழுவதும் கான்கிரீட்டினால் அமைக்கப்பட்டு ஒரே பாதை போல் தெரிவதால் அந்த பாதை முழுவதும் பொதுப் பணித்துறை பாலம் என்று கூறியே ராஜேந்திரன் மேற்குறிப்பிடும் மனைகளை அப்பாவி மக்களிடம் ஏமாற்றி விற்று வருகிறார்.
அதாவது, அவர் விற்கும் இடத்திற்கு செல்ல சொந்தமாக பாதையும் இல்லை. விற்கும் இடத்தின் மீது நீதிமன்ற வழக்கும் உள்ளது. ஆனால் இவ்விரண்டையும் மறைத்து, அதாவது, இல்லாத பாதையை இருப்பதாகவும், இருக்கும் நீதிமன்ற வழக்குகளை இல்லை என்றும் கூறி மனையை விற்று வருகின்றனர்.
நிலத்தை கிரையம் செய்யும் அப்பாவி மக்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக உண்மையை விளக்கி வாட்ஸ்அப்பில் பல பதிவினை வெளியிட்டுள்ளோம். அத்துடன் நாளிதழில் பொது அறிவிப்பும் வெளியிட்டோம். மேலும் தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவிற்கும், திருச்சி காவல் ஆணையர், டிஐஜிக்கும் புகார் கொடுத்துள்ளோம்” என்றார்.
உங்களது புகார் மனுவில் குறிப் பிட்டுள்ள வினோத் என்பவர் யார் என்று நாம் கேட்க, “திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மறைந்த ராமஜெயம் மனைவியின் அக்கா மகன் தான் வினோத். வினோத்தின் மாமனார் தான் எங்கள் நிலத்தை ஏமாற்றி விற்று வரும் ராஜேந்திரன். இப்பிரச்சனை குறித்து நாங்கள் செய்தி வெளியிட்டதால், கட்சி பின்புலத்தில் இருந்து கொண்டு எங்களை பல விதங்களில மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகின்றனர்.
எங்களது இப்போதைய ஒரே நோக்கம், ராஜேந்திரனுக்கு உரிமையில்லாத இடங்களை அவர் விற்பதால், வாங்குபவர்கள் ஏமாறக் கூடாது என்பதால் தான் நாங்கள் இது குறித்து பொது வெளியில் பேசுகிறோம். மேலும் அரசு நிலம் மீட்கப்பட வேண்டும். எங்களுக்குரிய இடம் எங்களுக்கு சொந்தமாக திரும்பக் கிடைக்க வேண்டும்” என்றார்.
புகார் குறித்து ராஜேந்திரன் தரப்பினர் நம்மிடம் கூறுகையில், ஆனந்தன் ராஜேந்திரனுக்கு உறவினர் தான். ஆரம்பத்தில் ஆனந்தன் தான் ராஜேந்திரனை சந்தித்து, “நான் கடனில் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னிடம் இடம் இருக்கிறது. இப்போதைக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கொடுங்கள்” என்று கேட்டுள்ளார். அதன்பின்பு தான்Joint Venture-ல் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்கலாம் எனக் கூறி, “நிலம், கட்டுமானத்திற்கு ஏற்ற நிலங்களாக வகைமாற்றம் செய்யப்பட்டுவிட்டதா என ராஜேந்திரன் கேட்டுள்ளார். அதற்கு ஆனந்தமும், ‘தீம்பார்க்கிற்காக நான் அப்ரூவல் பெற்றுள்ளேன்” என்று சொன்னதும் அதை நம்பி அங்கு 9 அடி பள்ளத்தில் இருந்த அந்த இடத்தில் மண்அடித்து நிலத்தை சமன் செய்யும் வேலையை ராஜேந்திரன் தனது சொந்த செலவில் செய்தார்.
இந்த பணி நடந்து கொண்டிருந்த போது ஆட்சியரத்திலிருந்து வந்தவர்கள் பார்த்து, “இந்த வேலை செய்ய யாரிடம் அனுமதி பெற்றீர்கள்” என கேட்ட போது தான் ஆனந்தன் அனுமதி பெறாமலேயே ராஜேந்திரனிடம் பொய் சொல்லி இருக்கிறார் எனத் தெரிந்தது. என்றாலும் பணத்தை முடக்கியாச்சி.. என்ற முடிவுடன் ராஜேந்திரன் அவரது முயற்சியில் அப்ரூவல் பெற்றுள்ளார். இது நடந்தது 2015ல். அப்போதே இடத்திற்காக பல கோடி ரூபாய் வரை ஆனந்தன் பெற்றுக் கொண்டார். கடன் வாங்கித் தான் இந்த தொகையை ராஜேந்திரன் கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் பவர் கொடுத்துவிட்டு, தேவையான அப்ரூவல் பெற்ற பின்பு அந்த இடம் என்னுடையது என பேசத் தொடங்கினார். ஆனால் பல ராஜேந்திரன் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த இடத்திற்கு செல்வதற்கு பாலமும் ராஜேந்திரன் தான் அவருடைய சொந்த செலவில் கட்டியுள்ளார் நிலத்தை தெரிந்தவர்களுக்கு விற்றார். எல்லாமே சட்டப்படி தான் நடந்தது. எதுவும் முறைதவறி நடக்கவில்லை. இது நடந்தெல்லாம் அதிமுக ஆட்சியின் போது தான்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேல் பல கோடிக்கு ராஜேந்திரன் வட்டி கட்டி வந்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த அந்த தொகைக்குறிய மதிப்பில் அந்த இடம் இல்லை. எவரையும் ஆலோசிக்காமல் 20 கோடி மதிப்புள்ள தன்னுடைய சொத்தை விற்று தப்பான ஒரு இடத்திற்கு பெரிய தொகையை கொடுத்து ராஜேந்திரன் ஏமாந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட அந்த இடத்திற்காக பல கோடி ரூபாய்க்கு மேல் அவர் செலவும் செய்துவிட்டார்.
முதலில் அவர் யிஷீவீஸீt க்ஷிமீஸீtuக்ஷீமீ அக்ரிமெண்ட் தான் போடுகிறார். பின்னர் இரண்டாவதாக ராஜேந்திரனுக்கு திuறீறீ றிஷீஷ்மீக்ஷீ கொடுத்து அக்ரிமெண்ட் போடுகிறார். ஆனால் பின்னர் அதை யாரிடமும் அவர்கள் காண்பிப்பதில்லை. முதலில் போட்ட அக்ரிமெண்ட்டை தான் எல்லாரிடமும் காண்பிக்கிறார். நீதிமன்றத்திலும் அவர்கள் அதே போல் இரண்டாவது அக்ரி மெண்டை காட்டாமல் மறைத்து வழக்கு நடத்திய போது, 2வது அக்ரிமெண்டை நீதிமன்றத்தில் காண்பித்ததும், நீதிபதியே ஆனந்தன் தரப்பினரை கண்டித்து, அபராதம் கட்டச் சொன்னார்.ரெட்டியார் சங்கத்திலும் இது குறித்து பேசிய போது, ஆனந்தன் மீது தான் தவறு இருக்கிறது என அவரிடம் கூறிய பின்னரும் அவர் அதை பொருட்படுத்தாமல் பிரச்சனை செய்து வருகிறார்” என்றனர்