கோபாலபுரம் டூ சிஐடி காலனி- மிஸ்டர் ஸ்பை – 3 (அங்குசம் இதழ் ஏப்.10-24)
பொதுவாக திமுக அமைச்சர்கள், பிரமுகர்கள் எவரும் கோபாலபுரம் தாண்டி செல்லமாட்டார்கள். ஸ்டாலினிற்கு தலைவர் பதவி கொடுத்த பின்பே ஸ்டாலின் வீடான வேளச்சேரிக்கு சென்று வந்தனர். ஆனால் தற்போது அமைச்சர்கள், திமுக முக்கிய பிரமுகர்கள் ஏன்.. ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட பலரும் இப்போது சிஐடி காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு சென்று வருகின்றனர். விவாதிக்கின்றனர். காரணம் தென்மாநிலங்களில் கோலோச்சும் நாடார் பிரிவினரை குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மை நாடார் பிரிவினரிடம் இணக்கம் கொள்ள செய்யப்பட்டுள்ள திட்டம் தான் இந்த படையெடுப்பாம். தமிழகத்தில் பா.ஜ.க. பெரும்பான்மை உள்ள மாவட்டங்கள் கன்னியாகுமரி, தூத்துக்குடி என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்