வாங்க எல்லாம் ஒன்ணா செயல்படுவோம் –  அமைச்சர் அன்பில் மகேஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வாங்க எல்லாம் ஒன்ணா செயல்படுவோம் –  அமைச்சர் அன்பில் மகேஸ் !

மகேஷ் பொய்யமொழி செல்லமாய் அன்பில் மகேஷ். பாரம்பரிய குடும்பத்தின் திருச்சியின் மகுடம் என்றே சொல்லலாம். சின்ன வயதில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பெயர் சொல்லும் பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

ஒரு காலத்தில் திருச்சியில் திமுகவின் அஸ்திவாரங்களில் ஒருவராக இருந்தவர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியின் தாத்தா தர்மலிங்கம். அன்பில் தர்மலிங்கம் என்றாலே கலைஞரின் ஒரு கரமாகவே செயல்பட்டவர். அடுத்து மகேஷ் பொய்யாமொழியின் அப்பா அன்பில் பொய்யாமொழி, பெரியப்பா அன்பில் பெரியசாமி. ஒரே வார்த்தையில் சொல்லி முடிக்க வேண்டும் என்றால் திருச்சியில் திமுகவின் பாரம்பரிய மிக்க குடும்பத்தின் உழைப்பாளி. எல்லாமே இருக்கிறது என்று ஒதுங்கி விடாமல் தன் பாரம்பரியத்தின் உச்சத்தை தக்க வைத்தவர் தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்றால் அது மிகையல்ல.

Anbil Magesh_2
Anbil Magesh_2

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

பாரம்பரியம், அந்த உழைப்பின் பயனாக முன்னாள் முதல்வர் கலைஞர், இன்னாள் முதல்வர் முக.ஸ்டாலின் ஆகியோரின் செல்லப்பிள்ளையாகவும், இளைஞரணியின் உச்சம், வருங்கால… உதயநிதியின் நெருங்கிய நண்பரும், ஒரு கூட்டு பறவையாக இருந்து வருபவர் மகேஷ் பொய்யாமொழி. 3 வது தலைமுறையின் பெயர் சொல்லும் பிள்ளையான இவருக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களின் ஒருவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

எல்லோரும் எதிர்பார்த்தப்படி திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தகுதி பெற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக தற்போது வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் ஒன்றை சொல்லியாக வேண்டும். அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி ஏற்ற போது, உதயநிதி ஆனந்த கண்ணீர் வடித்தாரே அந்த நட்பின் ஆழமே… நண்பேண்டா என்பது போல இருந்தது. இது தான் தலைமுறை கடந்த நட்பின் அடையாளம் அல்லவா?

அன்பில் - உதயநிதி நட்பு
அன்பில் – உதயநிதி நட்பு

 

மகேஷ் தந்தை அன்பில் பொய்யாமொழி மறைவிற்கு பிறகு, அவரது மகனான மகேஷ் ஸ்டாலின் குடும்பத்தின் இன்னொரு பிள்ளையாகவே மாறி போனார்.

ஆரம்பத்தில் நட்பின் அடிப்படையில் உதயநிதியின் ரசிகர் மன்றத்தை கவனித்து வந்த மகேஷ் பொய்யாமொழிக்கு திமுகவின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

தற்போது திமுகவின் திருச்சி மாவட்ட செயலாளராக செயல்பட்டு வரும் அவர், 1977ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாளில் பிறந்தவர். எம்சிஏ பட்டதாரி. திமுக அரசியல் ரத்தத்திலே கலந்த ஒன்று.

கடந்த 2016ம் ஆண்டு திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கிய அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கலைச்செல்வன் என்பவரை 16,695 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

2021 தேர்தலில் அதே தொகுதியில் 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற சாதனையாளர் அல்லவா மகேஷ் பொய்யாமொழி. அவரது அணுகுமுறை, செயல்பாடு, மனம் திறந்த நட்பு,நினைவு கூர்மை போன்றவை அவரது வெற்றியின் மூலதனதாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.

அவர் பொறுப்பெற்று இருக்கும் பள்ளிக்கல்வித் துறையில் பல புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் புதுமைப்பெண் திட்டமாகும். தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறையில் கற்றல் இடைவெளி உள்ள இடங்களில் புதுமைப்பெண் திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்கின்ற மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது என்பது புரட்சிகரமான திட்டமாகும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

Anbil Magesh
Anbil Magesh

 

அரசு பள்ளிகளில் கழிவறை என்பது மிக முக்கியமானதாகும். அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வுக்கு செல்லும் பொழுது தலைமை ஆசிரியர் அறைக்கு செல்வதற்கு முன்பாக முதலில் கழிவறைக்கு தான் சென்று ஆய்வு செய்கிறார்.  திடீர் ஆய்வு செய்யும் பொழுது தான் உண்மை நிலவரம் தெரியும் என்கிறார்.

இதே போன்று பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அனைத்து பள்ளிகளிலும்  கழிவறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதற்காக அடுத்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். அதில் இந்த ஆண்டுக்கு 1300 கோடி ரூபாயும், 18,000 வகுப்பறைகள் கட்டுவது மட்டுமல்ல, கழிவறைகள் எங்கெங்கு தேவைப்படுகிறது. அங்கு அனைத்திலும் கழிவறைகள் கட்டப்படும் சி எஸ் ஆர் ஆக்டிவிட்டி மூலமாக, தொண்டு நிறுவனங்கள் மூலமாக செய்து  கொண்டு இருக்கிறார்கள் என்பது மிகமுக்கிய விசயம்..

இதே போன்று நபார்டு மூலமாக ரூபாய் 750 கோடி பள்ளி கல்வி துறைக்கு டார்கெட். இது மட்டுமல்லாமல் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு 500 கோடி ரூபாய்  பராமரிப்புக்காக 400 கோடி ரூபாய், ஊரக வளர்ச்சி மூலமாக  எல்லாம் சேர்த்து 1300 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் கொண்டு செல்வதற்காக பள்ளிகளில் உள்ள பசுமை படை மூலமாக மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டு, அதன் மூலம் பழங்கள், காய்களை சத்துணவில் பயன்படுத்த ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.

அதேப்போல் உடற்பயிற்சிகளில் பள்ளி குழந்தைகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களின் தனி திறனை வெளிப்படுத்த அரசு தனி கவனம் செலுத்தி அதற்கு உண்டான கட்டணத்தையும் விளையாட்டு போட்டிகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்கின்ற கட்டணத்தையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது எல்லோருக்கும் எல்லாம் என்ற கருத்தாக பள்ளிக் கல்வித் துறை உள்ளது” சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இதற்கிடையில், தற்போது மகேஷ்பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு தலைவர் அவர்களின் வாழ்த்துக்களுடன், திருச்சி தெற்கு மாவட்ட கழக அனைத்து நிர்வாகிகளுடன் ஆதரவோடு மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்ற பின் நிர்வாகிகளை அறிமுகப்படுத்துகின்ற முதல் பொது உறுப்பினர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி காலை 9.30 மணிக்கு திருச்சி இபி,ரோடு ஆனந்தா அவென்யூ, சந்தான வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர் கே.என்,நேரு சிறப்புரையாற்றுகிறார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு கழகத்தின் கட்டளையை தொடர்ந்து செயல்படுத்துவோம். இணைந்து பணியாற்றுவோம். இதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

கிட்டதட்ட 10,000 தொண்டர்களுக்கு மேல் ஒருங்கிணைத்து  பெரும் விருந்து, பயிற்சி உற்சாகம் என பெரிய கொண்டாட்டத்திற்கே தயார் ஆகி வருகிறார்கள் திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர்..

 

ஆதிசிவன்

  – அரசு

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.