திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 100 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு ! அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் பகுதியை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

 

திருச்சி உய்யக்கொண்டான் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

 

தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே...

அதில், “திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, உய்யகொண்டான் திருமலை பகுதியில் சுமார் 51 சென்ட் நிலத்தில் 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இந்த குடியிருப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது சுமார் 54 சதவீதம் விதிமுறைகளை மீறி உள்ளது. இந்த முறைகேடு குறித்து திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

எனவே, விதிமுறைகளை மீறிகட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டும். இந்த முறைகேட்டை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணபிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களை முறைப்படுத்துவது மற்றும் இடிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது ஆனால் அதிகாரிகள் இதனை முறையாக பின்பற்றுவது இல்லை என கூறிய நீதிபதிகள்.

 

Apply for Admission

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

 

* ஒரு கட்டிடத்தை அங்கீகாரம் இன்றி கட்டலாம். பின்னர் அதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை அதிகாரிகள் ஊக்குவிக்கக்கூடாது.

* அனுமதியின்றி கட்டிடம் கட்டினால், அதை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சட்டமாகும்.

* கட்டிடம் முறையாக கட்டப்பட்டு உள்ளது என்பதை ஆய்வு செய்து, நிறைவுச்சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், நீர், பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

* நகரத்தில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனாலும் சட்ட விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவது தடையில்லாமல் நடக்கிறது.

* விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் பின்பற்றவில்லை.

திருச்சி
திருச்சி

* எனவே அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை 2 வாரத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை வருகிற 10-ந்தேதிக்குள் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

Leave A Reply

Your email address will not be published.