அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘லவ் ஓ லவ்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: தினேஷ் ராஜ் & ஜி.தனஞ்செயன், டைரக்டர்: மகேஷ் ராஜேந்திரன், ஆர்டிஸ்ட்: பவிஷ், நாக துர்கா, கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன், அஸ்வத் ஸ்ரீனிவாஸ், செளந்தர்யா பிரியன், அனுஸ்ரீவேலன், வனிதா விஜயகுமார், ஆதித்யா கதிர், ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா, இசை:  ஃபாக்ஸ் என், எடிட்டிங்: என்.பி.ஸ்ரீகாந்த், பிஆர்ஓ: ரேகா

”சார்…. எனக்கும் அவந்திகாவுக்கும் [நாகதுர்கா] இடையே இருக்கும் லவ்வை கட் பண்ணிவிடுங்க சார்….  அவகிட்ட இருந்து ’எல்-3’ [ லவ் லீவிங் லெட்டர்] யில் கையெழுத்து வாங்கிக் கொடுங்க சார்”னு இன்ஸ்பெக்டர் செல்வராகவனிடம் பஞ்சாயத்துக்கு வருகிறார் ரகுவரன் [ பவிஷ்]. “ஏண்டா ஏன்…என்னாச்சு?” என்கிறார் செல்வராகவன்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஃப்ளாஷ்பேக் ஓப்பனிங்…

தமிழ் சினிமாவின் கட்டாய வழக்கப்படி, யாரு, எவருன்னு தெரியாமலேயே  நாகதுர்காவைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே லவ்வில் ஸ்லிப்பாகிறார் பவிஷ். அதே கட்டாய வழக்கப்படி, லவ் பண்றவன் யாரு? எப்படிப்பட்டவன்னு தெரியாமலேயே லவ்வில் விழுகிறார் நாகதுர்கா. ஆளு பார்க்க ஸ்மார்ட்டா இருந்தா போதும், அவன்கிட்ட  காசு கொட்டிக்கிடக்கும்னு நினைச்சு லவ் பண்ணி, ஷாப்பிங் டேட்டிங், மால், தியேட்டர், ஸ்டார்பக்ஸ் காபி, ஊட்டில ரூம் போட்டு அஜால்குஜால்னு   பசங்களோட காசை காலி பண்ணி, அவனை கடன்காரனாக்கி, பைத்தியமாக்கும் ஜென் ஸி லேடீஸ்களின் ஆட்டத்தைச் சொல்வது தான் இந்த ‘லவ் ஓ லவ்’. டைரக்டர் மகேஷ் ராஜேந்திரனின் இந்த ஒன் லைன் நல்லாத்தான் இருக்கு.

யாவரும் கேளீர்

நடுத்தரக் குடும்பத்தின் இளைஞனாக பவிஷ். அப்பா கே.எஸ்.ரவிக்குமார், அம்மா செளந்தர்யா பிரியன், ஒரு தங்கை. மாத சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்துவிட்டு, நிம்மதியாக பவிஷ் வாழும் போது தான் நாகதுர்கா எண்ட்ரியாகிறார். இவரின் ஆசையே ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஊர் சுற்றி, லக்‌ஷுரியாக வாழ வேண்டும் என்பது தான். இவரின் ஆசையால் கிரெடிட் கார்டு வாங்கி, அதனால் கடனாளியாகிறார் பவிஷ். ஒரு கட்டத்தில் அப்பாவும் அம்மாவும் தன்னை ஒதுக்கிவிட்டு ஊருக்குப் போய்விடுவதால் கடுப்பாகி, இன்ஸ்பெக்டர் செல்வராகவனிடம் பஞ்சாயத்துக்கு வருகிறார். நான் இவளுக்கு வாரி வழங்கி செலவு பண்ணின மாதிரி, எனக்கு இவ நாலு மாசம் செலவு பண்ணிட்டு விலகிப் போகட்டும் என்பது தான் பவிஷின் கண்டிஷன்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

அதன் பின் நாகதுர்கா பவிஷிடம் படும்பாடு தான் செம கலகலப்பு. லவ் பண்ணும் பசங்களை பணத்திற்காக பாடாய்படுத்தும் இளம் பெண்களுக்கு எதிராக கரெக்டா லைன் பிடிச்சிருக்காரே டைரக்டர் மகேஷ் ராஜேந்திரன்.  அடடா…சபாஷ்னு தப்பானமுடிவுக்கு நீங்க வந்திர வேண்டாம். தமிழ் சினிமாவின் கட்டாய வழக்கப்படி, இடைவேளைக்குப் பிறகு, பெண்களின் உண்மையான மன உணர்வு, பசங்க மீது நிஜமான  டீப்பான லவ், பிரிவின் வலி என டிசைன் டிசைனாக உருட்டு உருட்டி  லேடீஸ் பக்கம் தீர்ப்பு எழுதி நம்மை…அதாங்க ஆண் வர்க்கத்தை டென்ஷனாக்கிட்டார் டைரக்டர்.

பவிஷுக்கு ரொமான்ஸும் நல்லா வருது. காமெடியும் செமத்தியா ஒர்க்-அவுட்டாகியிருக்கு. தெலங்கானாவிலிருந்து இம்போர்ட் ஆகியிருக்கும் ஹீரோயின் நாகதுர்காவின் நடிப்பில் ஒரு துடிப்பு, ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது. பவிஷின் அப்பாவி அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார். “காசு சேர்த்து பொருளை வாங்கலாம். பொருளை வாங்கிட்டு இ.எம்.ஐ.யை வாங்கக்கூடாது. நம்மள மாதிரி நடுத்தர வர்க்கத்திற்கு அது ஆபத்து” வலியுடன் ரவிக்குமார் பேசும் வசனம் நிதர்சனம்.

மாதர் சங்கத் தலைவியாக வனிதா விஜயகுமாரைப் பார்த்தாலே வாந்தி வருது. இதுல அவருக்கு வசனம் வேற, கொடுமைடா சாமீ…., எப்ப பார்த்தாலும் டமுக்கு டிப்பான், டப்பாங்குத்து பாடல் தான் , பேக்ரவுண்ட் ஸ்கோரும் அதே டைப்பில் தான். மியூசிக் டைரக்டர் ஃபாக்ஸ் என்.

இரண்டு மணி நேரம் பட்டிமன்றம் பார்த்த ஃபீலிங் தான் இந்த ‘லவ் ஓ லவ்’.

அங்குசம் பார்வையில் ‘ லவ் ஓ லவ்’ 44/100

—   ஆண்டவர்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.