அங்குசம் பார்வையில் ‘மாமன்’  

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ‘லார்க் ஸ்டுடியோஸ்’ கே.குமார். எழுத்து—இயக்கம் : பிரசாந்த் பாண்டியராஜ். கதை : சூரி. நடிகர்-நடிகைகள் : சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா விஜய், ராஜ்கிரண், பாபா பாஸ்கர், மாஸ்டர் பிரகீத் சிவன்,  ஜெயப்பிரகாஷ், , விஜி சந்திரசேகர், பாலசரவணன், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர். ஒளிப்பதிவு : தினேஷ் புருஷோத்தமன், இசை : ஹேசம் அப்துல் வஹாப், எடிட்டிங் : கணேஷ் சிவா, ஆர்ட் டைரக்டர் : ஜி.துரைராஜ், நடனம் : பாபா பாஸ்கர், ஸ்டண்ட் மேத்யூ மகேஷ். தமிழ்நாடு ரிலீஸ் : ஸ்ரீகுமரன் பிலிம்ஸ். பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

தனது அக்கா சுவாசிகாவுக்கு கல்யாணமாகி பத்து வருடம் கழித்து ஆண் குழந்தை பிறந்தததும் அதீத மகிழ்ச்சியாகி, பிஞ்சுக் குழந்தையிலிருந்து அவனது ஐந்து வயது வரை அவனுக்கு எல்லாமுமாக இருக்கிறார் தாய்மாமன் சூரி. ”லட்டு…லட்டு…”[ பிரகீத் சிவன் ] என மருமகன் மீது அதிக அன்பு செலுத்துகிறார். தனது அக்கா கர்ப்பமாக இருக்கும் போது கவனித்துக் கொண்ட டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமியை கல்யாணம் செய்த பிறகும் கூட மருமகனைவிட்டுப் பிரிய மறுக்கிறார் சூரி.  இதனால் மனம் வெதும்பும் ஐஸ்வர்யா லட்சுமி குடும்பத்தாருக்கும் சூரி குடும்பத்தாருக்கும் இடையே புகைச்சல் அதிகமாகி, உறவில் பெரும் விரிசல் ஏற்படுகிறது. லட்டுவால் மனக்கசப்பில் பிரிந்த குடும்பம் இணைந்ததா? என்பதை இரண்டரை மணி நேரம் சொல்லும் குடும்பக் கண்ணீர்க் காவியம் தான் இந்த ‘மாமன்’.

Kauvery Cancer Institute App

‘மாமன்’தாய்மாமன்  இன்பாவாக சூரியின் உடல்மொழி, முகபாவனை, வசன உச்சரிப்பு இவற்றில் பல சீன்களில் நுட்பமாக கவனம் செலுத்தி, கதையின் நாயகனிலிருந்து கதாநாயகனாக புரமோஷன் ஆகியுள்ளார். அக்கா வயிற்றுக்குள் இருக்கும் மருமகனுக்கு காது மடல் முளைத்ததும் “நான் உனக்கு மாமன் இல்ல, தகப்பன் “ என மெல்லிய குரலில் பேசும் காட்சியில் ஆண்களின் மனசுக்குள் இறங்குகிறார். குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டதும்  மருமகனை பிரியமுடியாமலும் மனைவி ஐஸ்வர்யா லட்சுமியை சமாதானப்படுத்த முடியாமலும்  தவிக்கும் காட்சிகளில் பெண்களின் அமோக ஆதரவைப் பெறுகிறார் சூரி. என்ன ஒண்ணு கதாநாயகனாகவிட்டதாலோ என்னவோ பள்ளிக்கூடத்தில் நடக்கும் ஸ்டண்ட் சீனில் ‘ராஜாதி ராஜா’ ரஜினி போல, பாடியில் ஒரு அடிகூட படாமல் ஆக்‌ஷனில் இறங்கியிருப்பது லைட்டா ஓவர் தான்.

டாக்டர் ரேகாவாக ஐஸ்வர்யா லட்சுமி, சூரிக்கு செம ஜோடிப் பொருத்தமாக ஸ்கிரீனில் தெரிகிறார். சூரியின் அக்காவுக்கு குழந்தை பிறக்கும் போதே மாலை சுத்தியிருப்பதால் தாய்மாமனுக்கு ஆகாது என சொந்தங்கள் சொல்லியதும் கதறியழும் சூரியிடம், “தாய்மாமனுக்கு ஆகாதுன்னா நான் தானே கவலைப்படணும்” என சொல்லும் சீனிலும் சரி, தனது அப்பா ஜெயப்பிரகாஷுடன் சூரியை ஒப்பிட்டுச் சொல்லும் சீனிலும் பளிச்சிடுகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

‘மாமன்’சூரியின் அக்காவாக வரும் சுவாசிகா தான் படத்தின் செகண்ட் ஹீரோயின்னே சொல்லலாம். “நீ எனக்கு தம்பியில்லடா தகப்பன்” என சூரியிடம் அன்பைக் கொட்டுவது, தனது கணவர் பாபா பாஸ்கரிடம் சீறுவது, “என் தம்பிக்காக யார் காலில் வேணும்னாலும் விழுவேன்” என க்ளைமாக்ஸில் உருகுவது என மாமனுக்கு தூணாக இருக்கிறார் சுவாசிகா. எல்லாம் ஓகே தான் டைரக்டரே… ’மாமன் சாமிகிட்ட போய்ட்டான்னு லட்டுவிடம் சொல்லி, சூரியின் போட்டோவுக்கு மாலை போட்டு, விளக்கேத்துனதெல்லாம் நியூ ஐடியான்னு நினைச்சுட்டீக போல. அதான் படத்தின் உணர்வுப்பூர்வமான ட்ராக்கை தடம் புரளச் செய்த ‘நான்சென்ஸ்’ ஐடியா.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால்.. குளக்கரையில் அமர்ந்தபடி சூரியிடம்  ஜெயப்பிரகாஷ் பேசும் சீனும் சீனியர் நடிகர் ராஜ்கிரண், “பொஞ்சாதின்றவ சாமிக்கும் மேலடா” எனச் சொல்லும் சீனும் தான் மாமனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் க்ரிப் சீன்கள். அதே போல்  க்ளைமாக்ஸில் தொட்டிலில் கிடக்கும் சூரியின் இரட்டைக் குழந்தைகளைப் பார்த்து பிரகீத் சிவன்,  “நான் உனக்கு மாமன் இல்லடா..தகப்பன்” என சூரி சொன்னதையே ”மேட்ச்’ பண்ணி சுபமாக்கியதற்கு சபாஷ் டைரக்டரே..

‘மாமன்’

தமிழ் சினிமாவுக்கு புதுவரவான இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல்வஹாப் பின்னணி இசையிலும் பாடல்களிலும் கவனம் ஈர்க்கிறார். படத்தில் பெரும்பாலான சீன்கள் கண்ணீர்க் காட்சிகளாக  இருப்பதால் ஒரே ட்ராக் போல ஃபீலிங் வருவதை தவிர்க்க முடியவில்லை.

இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்தில் அம்மா-அப்பாவுடன் டூவிலரில் போகும் போது, ஆக்சிடெண்டாகி ஆஸ்பத்திரி ஐசியூ வார்டில் இருக்கிறான் மாஸ்டர் பிரகீத் சிவன். அப்ப ஆரம்பிக்குது பெரும் கூட்டத்தின் கண்ணீரும் கம்பலையும் . அதன் பின் ராஜ்கிரண் மனைவி விஜி சந்திரசேகர் சாவு, அதுக்குப் பிறகு ராஜ்கிரண் சாவு, என க்ளைமாக்ஸ் வரைக்கும் கண்ணீர் ஆறு பெருக்கெடுத்து ஓடி… டிவி சீரியல் என்ற கடலில் கலந்துவிட்டது.

 

—   மதுரை மாறன்.  

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.