சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பட்டை நாமம் இட்டு மடிப்பிச்சை ஏந்தி போராட்டம் …..
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் கால வாக்குறுதிக்கிணங்க சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6750 வழங்கப்பட வேண்டும் என்றும், சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின்படி 2.57 காரணியை அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் திருத்தப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களும் பட்டை நாமம் இட்டு, மடிப்பிச்சை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சங்க நிர்வாகிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.