கல்விக்கு இல்லையா ”மேட் இன் இந்தியா” ?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

“தமிழ்நாட்டில் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்கள் செயல்பட அனுமதி வழங்கக்கூடாது ” என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச்செயலாளர் பெரியதம்பி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளின் தரம் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்தியாவின் உயர்கல்வி அமைப்பையே பலவீனப்படுத்தும் வகையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நாட்டில் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் செயல்படுவதற்கும் வாய்ப்பளிப்பது கவலைக்குரியதாக உள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

உலகளவில் இந்தியர்களின் அறிவாற்றலும் தொழில்நுட்பத் திறனும் பாராட்டப்படும் நிலையில், நமது பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தையே குறைத்து மதிப்பிடுவது ஏன்?

நமது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதுமான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், நவீன ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்துதல், நூலகங்களை மேம்படுத்துதல், ஆராய்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்குதல், ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டை உறுதி செய்தல் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய மத்திய மற்றும் மாநில அரசுகள், அதற்குப் பதிலாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நாட்டின் கல்வித் துறையின் கதவுகளைத் திறப்பது ஏன்?

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

“ஸ்வதேசி” என்றும் “மேக் இன் இந்தியா” என்றும் பெருமையாகப் பேசப்படும் நிலையில், “மேட் இன் இந்தியா” என்ற எண்ணத்தை கல்வித் துறையிலும் நடைமுறைப்படுத்த வேண்டாமா? நமது நாட்டின் அறிவு வளங்களையும், கல்வி நிறுவனங்களையும், திறமையான ஆசிரியர்களையும் வலுப்படுத்தாமல், வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருப்பது எந்த வகையில் தன்னிறைவு இந்தியாவை உருவாக்கும்?

இன்றைய Gen Z தலைமுறை அறிவையும் வாய்ப்புகளையும் உலகளவில் தேடும் தலைமுறையாகும். அவர்களுக்கு உலகத் தரமான கல்வி இந்தியாவிலேயே கிடைக்கச் செய்வதே அரசின் பொறுப்பு. இல்லையெனில், நாளைய தலைமுறை “நமது நாட்டில் உலகத் தரமான கல்வி நிறுவனங்களை ஏன் உருவாக்கவில்லை?” என்ற கேள்வியை எழுப்பும்.

இந்தியப் பல்கலைக்கழகங்களின் கதவுகளை உலகத்திற்கே திறக்கும் வகையில் அவற்றை வலுப்படுத்துவோம். அதுவே உண்மையான தன்னிறைவு இந்தியாவிற்கான பாதையாகும்.” என்பதாக வலியுறுத்துகிறார், பேராசிரியர் பெரியதம்பி.

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.