சாதுர்யத்தின் மறுபெயர் : சேகர்  ஐ.பி.எஸ்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

மாநகர கமிஷனர் என்றாலே மக்கள் மனதில் பட்டென்று நினைவுக்கு வருபவர் சேகர். குற்றங்களை கட்டுப்படுத்துவதிலும் சவாலான குற்ற வழக்குகளை துப்பு துலக்குவதிலும் , சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலும் கைதேர்ந்தவர் சேகர். கை சுத்தமானவர்கள்,  மென்மையானவர் , காவலர் நலனில் கடுமையான ஈடுபாடு கொண்டவர் போன்ற சிறப்பு முத்திரையும் உண்டு சேகருக்கு.

சென்னை  கமிஷனரேட்டில் ஆணையராக  அடியெடுத்து வைத்தவர் சேகர். பாரம்பரிமிக்க பச்சையப்பன் கல்லூரியில் GOLD மெடலிஸ்ட். அலட்டல், ஆர்ப்பாட்டம், ஆணவம், தான் என்ற தலைக்கனம் இவர்களின் தாக்கம் எதுவுமே இல்லாத,  எளிதில் அணுகக் கூடிய ஓர் இனிய மனிதர் சேகர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

எவரானாலும் சட்டத்திற்கு உட்பட்டே எதையும் செய்து கொடுக்கும் சாணக்கியத்தனம் இருந்தது சேகரிடம். தலைமை டிஜிபியாக

( HOPF )அமர அத்தனை தகுதிகள் இருந்தும் , அரசியல் முத்திரை கடந்த ஆட்சியில் இவரது அபார திறமைகளை அநியாயத்திற்கும் முடக்கி வைத்து விட்டது.

சென்னை சாலைப் போக்குவரத்தில் சரித்திரத்தையே மாற்றி எழுதிய பெருமை இவருக்கு உண்டு.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அன்று  புதிதாக வடிவமைக்கப்பட்ட Press Room மை நிருபர்களுக்காக அர்ப்பணித்தவர் முன்னாள் கமிஷனர் விஜயகுமார். இவரையடுத்து வந்த நடராஜனை  தவிர  எந்த கமிஷனரும் பிரஸ் ரூமுக்குள்  முகம் காட்டியதில்லை. பதவி ஏற்ற முதல் நாள் பத்திரிகையாளர்கள் சந்திப்பை Press Room முக்குள் வைத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார் சேகர்.

சேகர்  ஐ.பி.எஸ்
சேகர்  ஐ.பி.எஸ்

குற்றங்களை குறைப்பேன்; ரவுடிகளை கதி கலக்குவேன்  என்று எந்த வீர வசனம் வெளிப்படவில்லை. ” மீடியாக்களின் ஆதரவு மட்டுமே போலீசாரின் பெர்பார்மன்சை ஊக்குவிக்கும்  ” என்று சென்டிமெண்டாக நிருபர்களின் நெஞ்சங்களை  கிள்ளிவிட்டார்.

இங்கிருந்து வெளியேறிய கமிஷனர்கள் எல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சைக்குள் சிக்கி , சீர்குலைந்து கவிழ்ந்த தலையோடுதான்  இந்த கமிஷனரேட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.சேகரையும் விட்டு வைக்கவில்லை அந்த விதி. PRO AC-க்கும் ,  பத்திரிகையாளருக்கும் இடையே விஜயகாந்த் வருகையை முன்னிட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமானது  கமிஷனரேட். கொதிப்புடன் கமிஷனரின் கேபினுக்குள் சென்றவர்கள் கூலாகி கலகலப்புடன் வெளிப்பட்டதை கண்டதும் தான் போன உயிர் திரும்பி வந்தது PRO AC –க்கு.

கோர்ட் வளாகத்தில் அரங்கேறிய ( பத்து வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அப்பாவியை அடித்து துவைத்தது ) ஒரு அராஜக செயலை கண்டு கொதிப்படைந்தும் கைபிசைந்து , நீதியரசரின் ஆணைக்காக   பொறுமை காத்தார்  சேகர். ” வன்முறையாளர்களை விரட்டி அடிக்காமல் வேடிக்கை பார்த்தாயா ? என்று   இந்த விவேகமான கமிஷனரை வீசியெறிந்து விட்டார் நீதி அரசர்.

இந்திரஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.