அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கல்லூரி பேருந்து கல்வீசி தாக்குதல் ! அச்சத்தில் மாணவா்கள் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை வலையங்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை  ஏற்றிக்கொண்டு வலையபட்டி, ஆலங்குளம் விடத்த குளம் , திருமங்கலம் வழியாக கள்ளிக்குடிவரை செல்லும் இந்நிலையில் இன்று மாலை கல்லூரி பேருந்தினை திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டைய சேர்ந்த போஸ் என்பவரின் மகன் டிரைவர் கருத்த பாண்டி என்பவர் மாலை  4மணியளவில் கல்லூரியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு வழக்கம் போல் வளையபட்டி ஆலங்குளம் வழியாக சென்றது. அப்போது ஆலங்குளம் பகுதியில் இறந்தவரின் உடலை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

அதில் முன்னே செல்ல தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனர் கருத்த பாண்டி  ஹாரன் அடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரை தாக்கி மற்றும் கல்லூரி பேருந்தின் கண்ணாடியை கல் வீசி தாக்கியுள்ளனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

college vanஅதனை தொடர்ந்து தனியார் கல்லூரி பேருந்தில் இருந்த மாணவ மாணவிகள் அலறி அடித்து கூச்சலிட்டனர். மேலும் பஸ் தாக்கப்படுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரி பேருந்து தாக்கியது பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் கல்லூரி பேருந்தை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடங்களில் உள்ள சிசி டிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.