பணம் பண்றதுக்காக படம் பண்றீங்களா ?
“நீங்க படம் பண்றதுக்காக, படம் பண்றீங்களா? இல்ல பணம் பண்றதுக்காக படம் பண்றீங்களா?” கேள்வி ஒரு மாதிரி Confusing’ஆ இருக்குல்ல. இந்தக் கேள்வியை Red chilli’s Entertainment’ஓட பிசினஸ் ஹெட் Karuna Badwal ஒரு இன்வெஸ்டர்ஸ் மீட்டிங்ல கேட்டாரு. அந்தக் கேள்விதான் இன்னைக்கு பல இன்வெஸ்டர்ஸோட பல கேள்விகளுக்கு Mother Question’ஆ இருக்கும்.
நான் ஒரு OTT நிறுவனத்துல ஒர்க் பண்ணும் போது எனக்கு assigned பண்ணப்பட்டது தெலுங்கு திரைப்படங்களுக்கான மார்க்கெட்டிங் அண்ட் டிஜிட்டல் டீம். அந்த சமயத்துல எனக்கு தெலுங்கு ஓரளவுக்கு’த்தான் தெரியும். ஆனா நம்ம பேசப்போறது எல்லாமே பெரிய இன்வெஸ்டர்ஸ் கூட, பெரிய மார்க்கெட்டிங் டீம் கூட. அதனால அந்த மொழி கண்டிப்பா தெரிஞ்சாகணும் அப்படிங்கறதுக்காக அந்த மொழியை எழுத படிக்க முதற்கொண்டு கத்துக்க ஆரம்பிச்சேன்.
அவங்ககிட்ட பேசி பழகும் போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது. இண்டஸ்ட்ரில இருக்க மிகப்பெரிய இன்வெஸ்டர்ஸ் எல்லாருமே தெலுங்கு, அண்ட் ஹிந்திலதான் இருக்காங்க. தமிழ் பேசுற இன்வெஸ்டர்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி. கிட்டத்தட்ட இல்லைன்னே கூட சொல்லலாம். சில கார்ப்பரேட் இன்வெஸ்ட்டர்ஸ் மலையாளிகளா கூட இருக்காங்க. After Hombale Films production’s Entry, கன்னடத்துல கூட இன்னைக்கு பெரிய இன்வெஸ்டர்ஸ் இருக்காங்க.
ஏன் தமிழுக்கான இன்வெஸ்டர்ஸ் கம்மியா இருக்காங்க? அப்படின்னு நிறைய பேர்கிட்ட பேசும்போதுதான் ஒரு சில விஷயத்தை புரிஞ்சிக்க முடிஞ்சது. அவங்க சொல்றதெல்லாம் பக்கா பிசினஸ் ஸ்ட்ராட்டர்ஜி. உதாரணத்துக்கு லோக்கா திரைப்படம் 30 கோடியில எடுத்து 300 கோடி வரைக்கும் கலெக்ட் பண்ணுது. 20 கோடியில எடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் 200 கோடிக்கு மேல கலெக்ட் பண்ணுது. பிரேமலு அப்படிதான். பெத்லகேம் குடும்ப யூனிட் அசால்ட்டா 300 கோடி அடிக்குது. Vaazha 2 – 200 கோடிக்கு மேல அடிக்குது. இந்தப் பக்கம் இருமுடி மாதிரி ஒரு சின்ன பட்ஜெட்ல எடுக்கப்பட்ட படம், 200 கோடிக்கு மேல கலெக்ட் பண்ணுது. அட ஹிந்தியில ரெண்டு கோடியில எடுக்கப்பட்ட Hanuman Ansh 400 கோடி கலெக்ட் பண்ணுது.
ஆனா, நம்மளோட தமிழ் திரைப்படங்கள் எவ்ளோ சூப்பர் டூப்பர் ஹிட் ஆனாலும் 150 கோடிக்கு மேல கலெக்ட் பண்ணவே இல்ல. நான் சொல்றது சின்ன பட்ஜெட்ல 20 கோடிக்குள்ள எடுக்கப்பட்ட படங்கள். டாப் ஹீரோக்கள் படங்களை விட்டுடுங்க, இந்த உதாரணங்கள் முழுக்கவே 20 கோடிக்குள்ள எடுக்கப்படுற படங்கள். சூர்யா அவர்களோட கருப்பு, விஸ்வநாதன்&சன்ஸ், அமரன்’லாம் ஹை பட்ஜெட் படங்கள்.
உதாரணத்துக்கு ‘யூத்’ அவ்ளோ பெரிய ஹிட் படம். ஆனா 75 கோடி கிட்டத்தான் கலெக்ட் பண்ணுது. டூரிஸ் பேமிலி அவ்ளோ பெரிய ஹிட் படம். அதுவும் 100 கோடிதான் கலெக்ட் பண்ணுது. மண்டாடி கிட்டத்தட்ட 50, 60 கோடி பட்ஜெட்ல எடுக்கப்பட்டு அதுவும் 100 கோடிதான் கலெக்ட் பண்ணுது. தாய்கிழவியும் அப்படித்தான். தலைவன் தலைவியும் அப்படித்தான், மகாராஜா’வும் அப்படித்தான். டியூட், டிராகன், லவ் டுடே, ப்ளாஸ்ட், டிசி எல்லாமே.
மொத ராத்திரி ஒரு ஹிட் படம்தான். ஆனாலும் பத்து கோடியே தாண்டல. டோரத்திக்கு சோஷியல் மீடியா முழுக்க எழுதப்பட்ட ரிவ்யூல, ஒரு ரிவ்யூக்கு ஒரு ரூபாய்னு வெச்சிருந்தாக் கூட அந்தப் படம் ஈஸியா 100 கோடி கலெக்ட் பண்ணிருக்கணும்.
இப்படி தமிழ்ல எடுக்கப்பட்ட எல்லா சின்ன பட்ஜெட் படங்களும் 100 கோடி அப்படிங்கற மைல் ஸ்டோனை மட்டும்தான் அச்சீவ் பண்ணுது. ஏன் 150 கோடி, 200 ன்னு மூவ் ஆகலை. ஆனா மலையாளத்துலையும், ஹிந்திலயும், தெலுங்குலயும் எடுக்கப்படுற சின்ன பட்ஜெட் படங்கள், அசால்டா 200 கோடிக்கு மேல கலெக்ட் பண்ணுது.
தமிழ்ல நடக்காத இந்த விஷயம், ஏன் தெலுங்குல, ஹிந்தில, மலையாளத்துல நடக்குது அப்படிங்கறது பின்னாடி ஒரு Strategy இருக்கு. பிசினஸ் ரிப்போர்ட் இருக்கு. டெரைட்டிரி வாரியா எடுக்கப்பட்ட டேட்டா அனலைஸ் ரிப்போர்ட் இருக்கு. இந்த ரிப்போர்ட்படிதான் இன்வெஸ்டர்ஸ் அவங்களோட ஃபண்டிங்கை ஒவ்வொரு மொழிக்கும் கொடுப்பாங்க. அந்த டேட்டா ரிப்போட்டை முடிஞ்ச வரைக்கும் நெக்ஸ்ட் எளிமையா தமிழ்படுத்தி கொடுக்கறேன்.
— ஆரவ்






Comments are closed, but trackbacks and pingbacks are open.