அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘மக்கள் செல்வன்’ பிறந்த நாள் ( ஜனவரி 16).  ‘ஏஸ் ‘( ACE)  கிளிம்ப்ஸ் ரிலீஸ்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ்’ (ACE) படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு: கரண் பகதூர் ராவத், இசை:   ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர் , கலை இயக்கம் :ஏ.கே. முத்து. கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை 7CS என்டர்டெய்ன்மென்ட் பேனரில் ஆறுமுக குமார் மெகா பட்ஜெட்டில்  தயாரித்து டைரக்ட் பண்ணி யுள்ளார்.

படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்த நிலையில் இப்போது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் பிறந்த நாளை( ஜனவரி 16) முன்னிட்டு, ‘ஏஸ்’ ( ACE)  படத்தின் பிரத்யேக காணொளியை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

இதில்  விஜய் சேதுபதி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து மலேசிய நாட்டின் விமான நிலையத்திற்குள் நடந்து செல்வதும்…பின் அங்கு பிரபலமான வணிக வளாகங்களில் அதிரடி சண்டைக் காட்சியில் ஈடுபடுவதும்…  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் உற்சாகமாக நடனமாடுவதும், காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் அவருடைய ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. அத்துடன் இந்த காணொளி மூலம் ‘ஏஸ்’ படம் நூறு சதவீதம் பொழுதுபோக்குக்கு க்யாரண்டி என்பது தெளிவாகிவிட்டது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘போல்டு கண்ணன்’ என்பதால்.. அந்த கதாபாத்திரம் குறித்த  எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

சீனாவில்’ மகாராஜா’ வின் மாஸ் ஹிட்டால் ‘ஏஸ்’ (ACE)   படத்திற்கு தமிழக ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியா, மலேசியா, சீனா உள்ளிட்ட பல நாட்டின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.