அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சூரியின் ‘மாமன்’  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்’ படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜி. துரை ராஜ் கவனிக்கிறார். தாய் மாமன் உறவைப் பற்றி மண் மணம் மாறாத  இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

சூரியின் 'மாமன்'
சூரியின் ‘மாமன்’

இப்படம் குறித்து இயக்குநர் பேசுகையில், ” ஆறு வயது சிறுவனுக்கும், அவனுடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுப்பூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு  வந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘மாமன்’ உருவாகி வருகிறது” என்றார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 17-ஆம் தேதிவெளியிடப்பட்டுள்ளது. இதில் சூரியின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.  இந்தப்படத்தை வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

‘கருடன்’  வெற்றிப் படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் சூரி- தயாரிப்பாளர் கே. குமார் ஆகியோர் இணைந்திருப்பதால், ‘மாமன்’ படத்திற்கு ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.