“மாமன்னனு”க்கு தேவைப்பட்ட “தேவர்மகனும்” ! மாரி செல்வராஜின் “கைடு”ம் !
“மாமன்னனு”க்கு தேவைப்பட்ட “தேவர்மகனும்” ! மாரி செல்வராஜின் “கைடு”ம் !
மாமன்னனாக வரும் ”வைகைப்புயல்” வடிவேலுவின் கதாபாத்திர வடிவமைப்பை உன்னிப்பாகக் கவனித்தால் ”தேவர் மகன்” இசக்கியின் முதிர்ச்சியான அனுபவம் தான் என்பது தெரியும். அந்தக் கேரக்டர்கள் சார்ந்திருந்த சமூகம் தான் வேறு வேறாகத் தெரியும். முப்பது வருடங்களுக்கு முன்பு இசக்கி எப்படி பேசப்பட்டாரோ, அதைவிடப் பலநூறு மடங்கு உன்னதமாக பேசப்படுகிறார் இந்த ”மாமன்னன்” சரி, ”மாமன்னன்” மூலம் மாரி செல்வராஜ் பேசியுள்ள அரசியல், சமூகநீதி, என பெரும்பாலோர் சிலாகிப்பதை போலவே, நாமும் சிலாகிக்கிறோம் என்பதைச் சொல்வதில் நமக்குத் தயக்கமோ, தடுமாற்றமோ இல்லை. ஆனால், மாரி செல்வராஜீக்கு தயக்கமோ தயக்கம் அப்படி ஒரு தயக்கம் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ”மாமன்னன்” வீட்டில் அம்பேத்கர் இருக்கிறார்,. புத்தர் இருக்கிறார், இறக்கை முளைத்த பன்றி கூட இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் சமூகநீதி போர்க்களத்தின் முன்களப் போராளிகளான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரெல்லாம் மாரி செல்வராஜீக்கு தெரியாதா?
சேகிவேரா மாபெரும் புரட்சியாளர், பொதுவுமைச் சிந்தனையாளர் தான். ஆனால் தமிழ்நாட்டின் சமூக நீதிக்கும் அவருக்கும் என்ன சம்பங்கம்? சகோகரர் மாரிசெல்வராஜிக்குத் தான் வெளிச்சம். படத்தில் மாமன்னன சார்ந்த சமூகத்தின் குறியீடாக பன்றியைக் காட்டியிருப்பது கூட,மாரி செல்வராஜின் பிற்போக்குத் தனத்தைக் தான் காட்டுகிறது. அடிமுறைக் கலையைக் கற்றுக் கொடுக்கும் ஹுரோ அதிவீரனை, கோழிப் பண்ணையின் முதலாளியாக காட்டியிருக்கலாமே? நீங்கள் கையில் எடுத்திருக்கும் கதைக்களமான கொங்கு மண்டலத்தில் கோழிப்பண்ணை யும் மிகப் பெரிய தொழில் தானே. இதையெல்லாம் உதயநிதி கவனிக்கவில்லையே.? பராசக்தி, மனோகரா, அபிமன்யு வீரன், வேலுத்தம்பி, பாலைவன ரோஜாக்கள் மூலம் அனைத்து அரசியலையும் பேசிவிட்டார் கலைஞர். ஆனால் மாமன்னனில் உட்காரச் சொல்லும் அரசியலை உக்கிரமாகவும் ஆக்ரோஷமாகவும் உணர்ச்சியைக் தூண்டும் வகையிலும் காட்டியதைத் தவிர வேறொன்றும் புதிதில்லை, மாரி செல்வராஜூக்கு அரசியல் புரிதலில்லை.
மாரிசெல்வராஜூம் அவரது குரு பா. இரஞ்சித்தும் தங்களுக்கென கைடு’ [ guide] வைத்திருக்கிறார்கள். எல்லாவகையான ஒரு கேள்விகளுக்கும் இந்த கைடில் ஒரே விடைதான் இருக்கும். அது தான் சரியான விடை, சமூக நீதிக்கான விடை என்பதை திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டே இருப்பார்கள் மாரி செல்வராஜீம் பா. இரஞ்சித்தும்.
– மதுரை மாறன்