1.20 கோடி மனைவி பணத்தை கள்ளக்காதலிக்கு அள்ளிக்கொடுத்த கள்ள மத போதகர் கைது !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

1.20 கோடி மனைவி பணத்தை கள்ளக்காதலிக்கு அள்ளிக்கொடுத்த கள்ள மத போதகர் கைது !

 

கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியை சேர்ந்தவர் சிஜு கே.ஜோஸ், 52; மத போதகர். இவரது மனைவி அமெரிக்காவில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க வங்கியில், இருவர் பெயரிலும் துவங்கப்பட்ட சேமிப்பு கணக்கில், மனைவி சம்பள பணத்தை ‘டிபாசிட்’ செய்வார்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்நிலையில், வங்கி கணக்கில் இருந்து, 1.20 கோடி ரூபாய் மாயமானதை மனைவி அறிந்தார். இதுகுறித்து, கணவர் சரியான பதில் அளிக்காததால், ஆலப்புழா போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில், அவர் புகார் அளித்தார். போலீசார் வங்கி கணக்கை ஆய்வு செய்ததில், பிரியங்கா, 30, என்பவரின் கணக்கிற்கு, 1.20 கோடி ரூபாய் மாறி இருப்பது தெரியவந்தது. விசாரணையில், மனைவி வெளிநாடு சென்ற பின், சிஜு பிரியங்காவுடன் நெருக்கமானதால், பணம் கொடுத்தது உறுதியானது. போலீசார் விசாரணை குறித்து அறிந்த இருவரும், சமீபத்தில் மாயமாகினர்.

 

இதையடுத்து, போலீசார் அவர்களை தேடப்படும் நபர்கள் என அறிவித்தனர். இந்நிலையில், அண்டை நாடான நேபாளத்தில் தங்கியிருந்த இருவரும், சமீபத்தில் டில்லி வந்தனர். டில்லி விமான நிலைய போலீசாரின் தகவலை அடுத்து, அங்கு சென்ற ஆலப்புழா போலீசார், இருவரையும் கைது செய்தனர்.மத போதகர் தன் மனைவியின் சம்பளத்தில் இருந்து, 1.20 கோடி ரூபாயை காதலிக்கு தந்த சம்பவம், கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3
கள்ள காதலியுடன் மத போதகர் கைது
கள்ள காதலியுடன் மத போதகர் கைது

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.