‘சிறை’ பஃர்ஸ்ட் சிங்கிள் “மன்னிச்சிரு” ரிலீஸ்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு & எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி டிசம்பர் 25- ல் ரிலீஸ் ஆகிறது ‘சிறை’. இப்படத்தை வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக இருந்த சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். படத்தின் கதையை ‘டாணாக்காரன்’ இயக்குனர் தமிழ் எழுதியுள்ளார். சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படத்தில் “மன்னிச்சிரு” என்று தொடங்கும் பாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. பாடல் காட்சிகள் வேலூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் நாயகன் விக்ரம் பிரபு நாயகி அனந்தாவும் நடித்துள்ளார்கள்.
படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்த பாடலையும் எழுதியுள்ளார்.
சத்ய பிரகாஷ் & ஆனந்தி ஜோஷி இப்பாடலை பாடியிருக்கிறார்கள்.
— ஜெ.டி.ஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.