அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“மந்தாரா”- அழகிய பிரம்மாண்ட நகைகளுக்கான புதிய கிளை துவக்கம்!    

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஃபைன் கோல்ட் வெர்மெயில் என்னும் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளுக்கான இந்தியாவின் முதல் பிரீமியம் பிராண்டாக திகழும் மந்தாரா, பாரம்பரிய இந்திய நகைகளின் கலெக்ஷன்களை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. இதன் புதிய கிளை கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் திறக்கப்பட்டது. இந்த புதிய கிளையினை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் M.கிருஷ்ணன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்ததார். மேலும் கோவை விமான நிலையத்தில் இதன் ஒரு கிளை ஏற்கனவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2027ம் ஆண்டில் பல்வேறு இடங்களில் மேலும் பல புதிய கிளைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். 

மந்தாரா நகை கடை திறப்பு விழாநகை தயாரிப்பில் 26 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள மந்தாராவின் திறமையான கைவினைஞர்கள், 925 ஸ்டெர்லிங் வெள்ளியைப் பயன்படுத்தி ஒவ்வொரு நகையையும் மிக நுணுக்கமாக கையால் வடிவமைக்கிறார்கள். மேலும் இதற்கு பிரம்மாண்டமான, தூய்மையான 24 காரட் தங்க முலாம் பூசப்படுகிறது. மந்தாராவின் நகைகள், வாழ்க்கையின் சிறப்புத் தருணங்களைக் கொண்டாடும் வகையிலும், தலைமுறைகள் கடந்து போற்றத்தக்க வகையிலும் சிந்தனையுடன் வடிவமைக்கப்படுகின்றன. இளம்பெண்கள், இல்லத்தரசிகள், பெரியவர்கள் என அனைவரையும் கவரும் வகையிலான 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட அழகிய நெக்லஸ்கள், வளையல்கள், மோதிரங்கள், கம்மல்கள், ஜிமிக்கிகள், பிரேஸ்லட்டுகள், திருமண நகைகள், ஃபேஷன் நகைகள் உள்ளிட்ட கலெக்ஷன்கள் இங்கு ஏராளமாக உள்ளன. மேலும் வெள்ளி நகைகள், அழகிய முத்துக்களை கொண்டு நேர்த்தியாக உருவாக்கப்பட்ட மாடர்ன் நகைகளையும் இங்கு வாங்கலாம். மேலும் அழகிய பரிசுப்பொருட்கள், பூஜை அறையில் வைப்பதற்கான தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் உள்ளிட்டவையும் இங்கு கிடைக்கின்றன. 

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஒவ்வொரு சிறந்த பிராண்டிற்கும் பின்னாலும் ஒரு நோக்கம் இருக்கும். மந்தாராவின் பயணம், தீர்வு தேவைப்பட்ட ஒரு பிரச்சினையிலிருந்துதான் தொடங்கியது. மந்தாராவின் நிறுவனர் திரு.பினு குமார், நகைத்துறையில் 26 ஆண்டுகளை அர்ப்பணித்தவர். இந்த பயணத்தின் போது, அவர் உற்பத்தி, தயாரிப்பு மேம்பாடு, விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய பிரிவுகளில் பணியாற்றி, வாடிக்கையாளர்கள் உண்மையிலேயே என்ன விரும்புகிறார்கள் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டார். பல வாடிக்கையாளர்கள் அழகான தங்க நகைகளை சொந்தமாக்க வேண்டும் என்று கனவு கண்டனர். ஆனால் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை அதை கடினமாக்கியது. வேறு சிலரோ, சீக்கிரமே பொலிவிழந்து போகும். தோலில் அரிப்பை ஏற்படுத்தும் அல்லது நீடித்த தரத்தை வழங்காத கவரிங் நகைகளால் ஏமாற்றமடைந்தனர்.

மந்தாரா நகை கடை திறப்பு விழாபல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் இந்த கவலைகளைக் கேட்டு, கற்று, புரிந்து கொண்ட பிறகு, இந்நிறுவனத்தின் உரிமையாளர் திரு.பினு குமார் அவர்கள் சந்தைக்கு மற்றொரு நகை பிராண்ட் மட்டும் தேவையில்லை ஒரு சிறந்த தீர்வுதான் தேவை என்பதை உணர்ந்தார். அந்த தொலைநோக்குப் பார்வைதான் மந்தாரா உருவாகக் காரணமாக அமைந்தது. அவரது மனைவியும் இணை நிறுவனருமான திருமதி.ஸ்ருதி பினுகுமார் உடன் இது, பிரீமியம் கைவினைத்திறன், புதுமை மற்றும் மலிவு விலை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு பிராண்டை உருவாக்க அவர் முனைந்தார். அவர்களின் நோக்கம் எளிமையானதாக இருந்தது. தரம் அல்லது நம்பிக்கையில் சமரசம் செய்யாமல், நேர்த்தியான, பிரம்மாண்டமான நகைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது. மந்தாரா என்பது ஒரு நகை பிராண்ட் மட்டுமல்ல. இது 26 ஆண்டுகால அனுபவம். மேலும் விபரங்களுக்கு www.madarajewels.com இணையதளத்தினை பார்வையிடவும். 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.