அடுத்தடுத்து பல உச்சங்களை காணும் தமிழனாக … திருச்சி எம்.எம்.எம். முருகானந்தம் !

திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், எம்.எம்.எம். குழுமத்தின் தலைவரும், ரோட்டரி இன்டர்நேஷனல் 2026-27 ஆம் ஆண்டிற்கான துணைத் தலைவருமான, ரோட்டேரியன் AKS பொறியாளர் முருகானந்தம் M (MMM), 2026-27 ஆம் ஆண்டிற்கான பால் & ஜீன் ஹாரிஸ் லெகசி சொசைட்டி (Paul & Jean Harris Legacy Society)யின் கௌரவப் பிரச்சாரத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ரோட்டரியின் நிறுவனர் பால் ஹாரிஸ் மற்றும் அவரது மனைவி ஜீன் ஹாரிஸின் நினைவாக, அறக்கட்டளைக்கு மரபுவழிப் பங்களிப்பு (legacy contribution) மூலம் நீண்ட கால ஆதரவு அளிப்பவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக இந்த பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, பால் மற்றும் ஜீன் ஹாரிஸ் இல்லத்தைப் புதுப்பிக்க எம்.எம்.எம். முருகானந்தம் நிதி உதவி அளித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அங்குசம் சார்பில் நாமும் வாழ்த்தி மகிழ்கிறோம்!

—   கலிங்கா இளவழகன்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.