அமலா பாலுடன் திருமணம்! தனுஷ் ‘பிளாக்மெயில் ப்ளான்’
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவைக் காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டவர் தனுஷ். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து வளர்ந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு தனுஷ்-ஐஸ்வர்யா இருவருக்குமிடையே விரிசலாகி, விலகிவிட்டனர். இப்போது வரை இருவருமே தனித்தனியாகத் தான் வசிக்கின்றனர். இருந்தாலும் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான சீனியர் டைரக்டர் ஒருவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
மேற்படி தம்பதிகளுக்குள் விரிசல் ஏற்பட்டு வில்லங்கம் வரக்காரணமே, டைரக்டர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த அமலாபாலுடன் தனுஷ் காட்டிய நெருக்கம் தான். அதன் பின் பஞ்சாப் பாடகர் ஒருவரை கல்யாணம் செய்தார் அமலாபால். “அட அது கல்யாணம் இல்லங்க, ஒரு ஆல்பத்துக்காக எடுத்த போட்டோ ஷூட்” என்ற ரேஞ்சுக்கு விளக்கம் சொல்லி, பஞ்சாப் சிங்கருடன் ‘சிங்க்’காக இருந்தை கட் பண்ணினார் அமலாபால்.

அதன் பின், “நான் இப்ப ஆன்மீகத்துல இறங்கிட்டேன், இமய மலைக்குப் போறேன், தாய்லாந்து ஆசிரமத்துல இருக்கேன்” என்றபடி கையில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கும் செல்ஃபிகளை ரிலீஸ் பண்ணிக் கொண்டிருந்தார். இந்த நேரம் பார்த்துத் தான்……

கணவனை இழந்த நடிகை மீனாவை இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக, சில மாதங்களுக்கு முன்பு ஒரு பகீர் நியூஸை ப்ளான் பண்ணிக் கசியவிட்டார் தனுஷ். ரஜினி சைடிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லாததால், இப்போது அமலாபாலை ‘செகண்ட் மேரேஜ்’ செய்யப் போவதாக ’பிளாக்மெயில் ப்ளான்’ நியூஸை ரொம்பவே ‘ஸ்ட்ராங்’காக பரப்பி வருகிறாராம் தனுஷ். நடந்தாலும் நடக்கும், நமக்கு என்ன தெரியும்?
-மதுரை மாறன்