‘இருமுடி கட்டு’ இது ஒரு தினுசான பிரஸ்மீட்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பொதுவாக ஒரு சினிமா ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்போ, நான்கு நாட்களுக்கு முன்போ, அப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் விழாவோ, பிரஸ்மீட்டோ நடக்கும். ரிலீசுக்கு முதல் நாளோ, அல்லது ரிலீசன்றோ பிரஸ்ஷோ போடுவார்கள்.  ஆனால் தெலுங்கில் தயாராகி, தமிழில் டப் செய்யப்பட்டுள்ள ‘இருமுடிகட்டு’ என்ற படம் கடந்த 21-ஆம் தேதி தமிழ்நாட்டில் ரிலீசானதையொட்டி,   அதே 21-ஆம் தேதி மதியம் பிரஸ்ஷோ போடப்பட்டது.

படம் ஆந்திராவில் நேரடியாக தெலுங்கில் ரிலீஸ் ஆவதையொட்டி, படத்தின் ஹீரோ ரவிதேஜா உட்பட அனைவரும் அங்கே புரமோஷன் பணிகளில் பிஸியாக இருந்ததால், இங்கே 22-ஆம் தேதி ‘இருமுடிகட்டு’ பிரஸ்மீட் நடந்தது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இதில் ஹீரோ ரவிதேஜா, டைரக்டர் ஷிவா நிர்வானா, தயாரிப்பாளர் ஒய்.ரவிசங்கர்,  ஹீரோயின் பிரியா பவானி சங்கர், ரவிதேஜாவின் மகளாக நடித்த பேபி நட்சத்திரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், தமிழ் வசனம் எழுதிய விஜய் பாலாஜி, பாடல் எழுதிய பாலாஜி வேணுகோபால், ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசியவர்கள்…

ஒய்.ரவிசங்கர், “அந்த ஐயப்ப சாமி தான் ஷிவாவின் இந்தக் கதையை நாங்கள் தேர்வு செய்ய வைத்துள்ளார். நேற்று ரிலீசான இந்தப் படத்திற்கு ஆந்திராவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது”.

பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

வசனகர்த்தா விஜய் பாலாஜியும் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலும் படத்திற்கு தமிழர்கள் கொடுக்கும் ஆதரவு குறித்து சிலாகித்துப் பேசினார்கள்.

பிரியா பவானி சங்கர், பேபி நட்சத்திரா, ஜி.வி.பிரகாஷ்குமார், விஷ்ணு சர்மா ஆகியோர் ”நல்ல கண்டெண்ட் உள்ள படங்களுக்கு மொழி ஒரு தடையல்ல” என்றனர்.

ரவிதேஜா
ரவிதேஜா

ஷிவா நிர்வானா, “தமிழில் பாரதிராஜா சார், பாக்யராஜ் சார் படங்கள் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். படம் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே போகும்  மக்கள் தங்களுடன் அந்தப் படத்திலிருந்து நல்ல விஷயத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் எனது எண்ணம். அந்த வகையில் இந்தப் படம் அப்பாக்களின் அன்பை, மகளின் பாசத்தை, மனைவியின் காதலை உங்களுக்குக் கொடுக்கும்”.

ரவி தேஜா, “ தமிழ்மக்களை மீடியாக்கள் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இயக்குனர் ஷிவாவின் ஆழமான கதையும் ஜி.வி.பிரகாஷின் இசையும் தான் இந்தப் படத்தின் ஆன்மா. இந்த இருமுடிகட்டுவின் வெற்றியால எனது அடுத்த படங்கள் தொடர்ந்து தமிழிலும்  வெளியாகும்”.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.