கண்டுகொள்ளாத விஜய்சேதுபதி! கவலைப்படாத காயத்ரி!

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

சொந்த ஊரு பெங்களூரு என்றாலும் ’18 வயசு’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி சங்கர். அந்தப் படம் ரிலீசான அதே 2012-ஆம் ஆண்டில் ரிலீசான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி போட்டு, படமும் ஹிட்டானதால், தொடர்ந்தும் அப்பப்ப ‘கேப்’ விட்டும் தனது படங்களில் ( போன வருசம் ரிலீசான ‘மாமனிதன்’ வரை) சான்ஸ் கொடுத்து வந்தார் விஜய்சேதுபதி.

தனக்கு நன்கு பழக்கமான டைரக்டர்களின் படங்களில் நடிக்கவும் ரெகமெண்ட் பண்ணினார் வி.சே. காயத்ரிக்கு அப்படிக் கிடைத்த சான்ஸ் தான் கமல்-லோகேஷ்கனகராஜ் காம்பினேஷனில் செம ஹிட்டான ‘விக்ரம்’ படத்தில் ஃபஹத்பாசிலின் ஜோடி போட்ட சான்ஸ். கோலிவுட்டில் என்ட்ரியாகி பத்து வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை 20 படங்களில் தான் நடித்துள்ளார் காயத்ரி. அதில் நாலைந்து படங்கள் தான் ஹிட் லிஸ்ட்டில் இருக்கு. இதனால் கேரளக் கரை யோரம் ஒதுங்கிய காயத்ரிக்கு கடந்த ஆண்டு ரிலீசான ‘நான் தான் கேஸ் கொடு’ என்ற மலையாளப்பட சான்ஸ் கிடைத்து, படமும் ஹிட்டா னது. இந்த ஹிட் ஹேப்பியால் மேலும் சில மலையாளப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

காயத்ரி
காயத்ரி
5

பருமனாகவும் இல்லாமல், ஒல்லியாகவும் இல்லாமல் உடல்வாகு, தேவையான அளவுக்கு க்ளாமர், நிறைவான நடிப்பு என எல்லாமும் காயத்ரிக்கு அமைந்திருந்தாலும் முகத்தில் கொஞ்சம் முதிர்ச்சி தெரிவதால் கன்டினியூவாக சான்ஸ் கிடைப்பதில்ல்லை. இப்போது விஜய்சேதுபதியும் ரெகமெண்டேஷன் பண்ணுவதில்லை.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

ஆனாலும் கவலைப்படாத காயத்ரி, இதெல்லாம் சரிப்பட்டு வராது, நாமளும் க்ளாமரில் தரை லோக்கலாக அடித்தால் தான் சினிமாவில் காலம் தள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்துட்டாரோ என்னவோ? மாலத்தீவுக்கு ரெஸ்ட் எடுக்கப் போன போது எடுத்த ’டூ பீஸ்’ காஸ்ட்யூம்ஸ் போட்டோஸ்களை ரிலீஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

”இதுக்கே ஷாக்காயிட்டா எப்படி? இன்னும் நிறைய ‘ஸ்டாக்’ இருக்கு. அப்பப்ப ரிலீஸ் பண்ணுவேன். அதிரடி ஆட்டத்தை கன்டினியூ பண்ணுவேன்” என்கிறாராம் காயத்ரி சங்கர்.

-மதுரை மாறன்

6
Leave A Reply

Your email address will not be published.