அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாரிஸ் ரயில்வே மேம்பால பணிகள் – மேயர் அன்பழகன் ஆய்வு

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாநகராட்சி சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலை இணைக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் மாநகராட்சி பொறியாளர்களுடன் இன்று ஆய்வு செய்து 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்து உள்ளது என தெரிவித்தார் .

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

திருச்சி மாநகராட்சி சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலையினை இணைக்கும் வகையில் லும்,எதிர்கால போக்குவரத்தினை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி இருவழி பாதையாக பாலத்தினை புதிதாக கட்டுவதற்கு மதிப்பீடு தொகை ரூபாய் 34.10 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மேயர் மு. அன்பழகன் செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பரமணியன் மற்றும் மாமன்ற உறுப்பினர் விஜயா ஜெயராஜ் ஆகியோருடன் கட்டுமான பணிகளின் வரைபடத்தை பார்வையிட்டு அதன் விவரங்களை பொறியாளர்களிடம் கேட்டு அறிந்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.
மேயர் அன்பழகன் தெரிவித்ததாவது,
மாரிஸ் பாலம் மாநகராட்சி மூலம் இருபுறமும் பணிகள் நடைபெற்று வருகிறது 70 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது . இப்பணி முடிவடைந்த பின் மாநகராட்சிகள் பணிகள் இருபுறமும் பணிகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
ரயில்வே துறையில் பாலம் கட்டப்பட்டு 157 வருடங்கள் ஆகின்றதால் கனரக வாகனத்திற்கு ஏற்ற வகையில் இல்லாததாலும் இப்பாலும் பழுதடைந்துள்ள காரணத்தினாலும் ரயில்வே மேம்பாலத்தினை உயரப்படுத்தி மற்றும் அகலப்படுத்தியும் கட்டப்பட்டு வருகிறது.
புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தின் நீளம் 31.39 மீட்டர் அகலம் 20.70 மீட்டர் ஆகிறது, ரயில்வே பாலத்தின் கிழக்கு பகுதி 223.75 மீட்டர் நீளமும் ,15.61 மீட்டர் அகலமும் உடையதாகும் மேற்கு பகுதி 225 மீட்டர் நீளமும் ,15.61 மீட்டர் அகலம் உடையதாகும் சாலையினை தடுப்பு சுவர்களுடன் விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பாலத்தினை இருவழி பாதையாக கட்டப்படுவதினால் மெயின் கார்ட் கேட் பகுதியில் இருந்து தில்லைநகர் தென்னூர் புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறு இன்றி சுலபமாக செல்ல இயலும் என மேயர் தெரிவித்தார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.