விமர்சனங்கள் தீவிரப்படும் போது நான் வளர்ந்து கொண்டே இருக்கிறேன்! சீமான் பேச்சு….
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் எலைட் மகாலிங்கவில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் சீமான்,மதுரை காளவாசல் பகுதியில் உள்ள ஹோட்டல் தங்கம் கிராண்டில் இருந்தும் புறப்பட்டபோது செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது…
ஆதாரமில்லாத அவதூறு வழக்கு இது …..
நீண்ட நாட்களாக இருந்து வரக்கூடிய ஒரு தொல்லை இது. 14 ஆண்டு வருடமாக நீடித்து வருகிறது. இந்த இடைக்காலர் தடையை நான் வரவேற்கின்றேன்.
சட்டரீதியாக எதிர்கொள்ள தயார் அது குறித்து பேச விரும்பவில்லை வாய்ப்பு இல்லை ….
கம்யூனிஸ்ட் கட்சி என்பது தற்போது கார்ப்பரேட் ஆக மாறிவிட்டது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு ,பள்ளி மாணவி மரணம் வழக்கு உள்ளிட்டவைகள் குறித்து பேசாத கம்யூனிஸ்ட் கட்சி 20க்கும் மேற்பட்ட பாலியல் பிரச்சனைகள் குறித்து பேசாத கம்யூனிஸ்ட் கட்சி …
ஐயா சண்முகம் மீது எங்களுக்கு மதிப்பு இருக்கிறது. எனக்கு அவப்பேரு ஏற்படுத்தி என்னை இழிவை சுமத்த வேண்டும் என்கின்ற நோக்கம்தான் உங்களது நோக்கம்.
குஷ்பூ ,சௌமியா அன்புமணி உள்ளிட்டவர்கள் போராடும்போது அவர்களை போராட்டத்திற்கே அனுமதி வழங்காமல் கைது செய்த நிலை இருக்கும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்ன செய்தார்கள்….
தாத்தா ஜீவானந்தம் சங்கர் ஐயாவோடு கம்யூனிஸ்ட் செத்துப் போச்சு. எம்ஜிஆர் ,ஜெயலலிதா கருணாநிதி இருந்தபோது பெற்ற விழுக்காடை விட தற்போது ஆறு இடங்களில் தான் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளனர்.
கம்யூனிஸ்ட் தலைவர்களை எனக்கு பிடிக்கும் ஆனால் தற்போது அவர்களுடைய செயல்பாடுகள் தான் பிடிக்கவில்லை….
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மும்மொழிக் கொள்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உடைய நிலைப்பாடுதான் என்ன? மலைகளை கற்களாக வெட்டப்படுவதில் உங்களுடன் நிலைப்பாடுதான் என்ன ?.?.
விமர்சனங்கள் தீவிரப்படும் போது நான் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறேன். தீவிரமாக இருக்கக்கூடிய இந்த பிரச்சனையை தீர்க்க போகிறேன்.
தடித்த வார்த்தையை நான் ஒருபோதும் பேசவில்லை. எனது தாயாரை குறிப்பாக 15 ஆண்டுகளாக எனது குடும்பப் பெண்களை, அவர் திட்டும்போது நான் தாங்கிக் கொண்டுதான் வந்து கொண்டிருக்கிறேன்.
எவ்வளவு நாள் தான் இந்த அழுக்கை சுமந்து கொண்டிருப்பது அதற்கு ஒரு முடிவு கொண்டு வர வேண்டும் என்று தான் நினைக்கின்றேன்.
என்னை திட்டும் போதெல்லாம் எனது தாயை இழுத்து இழுத்து பேசுகிறார்.
அவர் மட்டும்தான் பெண்ணா எனது பெற்ற தாய் பெண் கிடையாதா ??
நாங்கள் அறம் மீறுபவர்கள் கிடையாது?
அது குறித்து பேசுவதற்கு திமுகவினருக்கு தகுதி கிடையாது.

15 ஆண்டுகளாக இழுத்து இழுத்துக் கொண்டு வந்து பேசி விட்டதால் நானும் விலகி விலகிச் சென்று அமைதி காத்து தற்காத்து கொண்டே இருந்தாலும், வேறு வழி இல்லாமல் தான் வழக்கு தொடுத்தேன். இந்த நிலத்தில் மக்களுக்காக எவ்வளவோ போராடிய வழக்குகளை சந்தித்த சிறைக்கு என் குறித்த செய்திகளை எடுத்துச் செல்லவில்லை.
நீண்ட நாட்களாக திட்டமிட்டு பல நபர்களை பணியில் அமர்த்தி அதிகாரிகளை நியமித்து பரப்பி வருகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் பிரச்சனைகள் போராட்டங்களும் நடந்து இருக்கிறது ….
அனைத்து கட்சி கூட்டம் குறித்த கேள்விக்கு ….மதியாதார் தலைவாசல் மிதியாரே நான் மதியாத தலைவாசல் மிதிக்க மாட்டேன் என்று செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.