சென்னை உத்சவ் 2025: இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா !
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 15 இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழாவை ‘லேர்னர் சர்க்கிள்’ பெருமையுடன் கொண்டாடியது. 10 ஆயி ஆயிரம் இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் மாபெரும் உன்னத திட்டத்தின் ஒரு பகுதியாக இளம் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பாற்றல், கற்பனை வளம் மற்றும் கதை சொல்லல் திறனை உலகிற்கு அறிமுகப்படுத்தும் விழாவாக இது அமைந்தது.
லேர்னர் சர்க்கிள் இதுவரை 125க்கும் மேற்பட்ட இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் முதல் புத்தக வெளியீட்டு விழா கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துபாயில் நடைபெற்றது. அங்கு 42 இளம் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெளியிட்டனர். குழந்தைகளின் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கும் விதமாக சென்னை உத்சவ் 2025 என்னும் இத்திட்டம் தொடர்கிறது.
இந்த விழாவில் கல்வி மற்றும் இலக்கியத் துறையிலிருந்து பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பி. சரவணராஜா – நிலா காமிக்ஸ் நிறுவனர், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை காமிக்ஸ் வடிவில் மாற்றியமைத்ததிற்காக பிரபலமானவர்.
ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணா ரெட்டி – JS Global School முதல்வர். ஒருங்கிணைந்த கற்றல் அணுகுமுறை ஆதரவாளர். Rev Sister லிட்வின் மேரி ஃபாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர், மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க உறுதியாக பணிபுரியும் கல்வியாளர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவர்கள் அனைவரும் இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரை வழங்கினார்கள். விழாவில் புத்தகங்கள் வெளியிட்ட 15 இளம் எழுத்தாளர்கள், விழாவில் எங்கள் இளம் எழுத்தாளர்கள் பதினைந்து இளம் எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை வெவ்வேறு இலக்கியம் மற்றும் கற்பனை வளத்துடன் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அவற்றில் முக்கியமான புத்தகங்கள் சில..
அத்வைதா டி.-Journey of Being Small (படப்புத்தகம்)
அம்ருதா ஜி. – Empty Pages (வளர்பிறை கதைகள்)
அக்ஷரா ஆர்.- Twisted Destinies and Dreaded Prophecies (கற்பனை)
ஆத்யா சூரியநாராயணன் Mystics (கற்பனை)
முகிலன் பாலசுந்தரம் – Code Cholera (அறிவியல் திரில்லர்)
– Sparks, Spice, and a Touch of Ice ()
வைஷ்ணவி சதீஷ் குமார் – A War to Win (வரலாற்று புதினம்)
– A Boy’s Quest for the Magical Remedy ()
இந்த இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து பயணத்தையும், அவர்களுக்கு கிடைத்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
Eyes of Wonder: கூட்டு சாதனை
Learner Circle ஆனது “Eyes of Wonder” என்ற தொகுப்பு புத்தகத்தையும் வெளியிட்டது. இதில் எட்டு இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பு. இளம் எழுத்தாளர்களின் பல்துறை திறமையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான முயற்சி ஆகும்.
Learner Circle-ன் குறிக்கோள்: இளம் மனங்களை ஊக்குவித்தல்
10 ஆயிரம் இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் திட்டம், குழந்தைகளின் படைப்பாற்றலை சிறப்பாக வளர்க்க உதவுகிறது. எழுத்து முதல் தொகுப்பு. பிரிண்டிங், வெளியீடு அமேசான் போன்ற தளங்களில் பட்டியலிடுதல் ஆகிய னத்தும் இந்த திட்டத்தின் மூலம் நடைபெறுகிறது. இது குழந்தைகளின் அனைத்தும் கதை சொல்லும் திறனை மட்டுமல்ல, அவர்களின் தன்னம்பிக்கையையும், விமர்சன சிந்தனைத் திறனையும் மேம்படுத்துகிறது.
இலக்கிய கொண்டாட்டம் விரிவடைகிறது: துபாய் & லண்டன் உத்சவ்
2020ல் தொடங்கி, Learner Circle 20,000-க்கும் மேற்பட்ட உலகெங்கும் பரவிக்கிடக்கும் இந்தியக் குழந்தைகளுக்கு அவர்களின் ஆர்வங்களை ஆராய்ந்து, அதனை அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட உதவியுள்ளது.
சென்னையில் முடிவடைந்த இவ்விழாவினைத் தொடரந்து, விரைவில் துபாய் உத்சவ் மற்றும் லண்டன் உத்சவ் என மற்ற உலக நகரங்ளிலும் நடக்கவுள்ளன. Learner Circle இளம் எழுத்தாளர்களுக்கு உலகளாவிய மேடைகளை வழங்குவதன் மூலம், அவர்களின் இலக்கிய கனவுகளை நனவாக்குகிறது.
பங்குபெறுங்கள்!
இளம் எழுத்தாளர்களின் பயணத்தில் பங்கேற்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் குழந்தைகளை Learner Circle அழைக்கிறது. உங்கள் குழந்தைக்கு எழுத்தில் ஆர்வமா? www.learnercircle.in என்ற இணையதளத்தில் விவரங்களை தொிந்து கொள்ளவும் .
— மதுரை மாறன்.