அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘மொய் விருந்து’ டைட்டில் பின்னணி!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘எஸ்.கே.பிலிம் இண்டெர்நேஷனல்’ எஸ். கமலக்கண்ணன் தயாரிப்பில், உருவாகியுள்ள ‘மொய் விருந்து’ படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்  வெளியாகியுள்ளது.

‘மஞ்சப்பை’, ‘கடம்பன்’, ‘மைடியர் பூதம்’ படங்களில் பணியாற்றிய  சி.ஆர். மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் தலைப்புக்கான பின்னணி குறித்து  டைரக்டர் மணிகண்டன்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

“தஞ்சை மாவட்டம் பேராவூரணி க்கு நான் சென்றபோது, ‘மொய்விருந்து’ நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்த பழக்கம் மூலம் ஊரே ஒழுக்கமாக இருக்கும், அனைவருக்கும் உதவி கிடைக்கும். இது எனக்கு பெரிய ஆச்சரியம் தந்தது. இதை மையமாக  வைத்து உருவாக்கியது தான் இந்தப்படம்,  அதனால் தான் இந்தப்படத்திற்கு ‘மொய் விருந்து’ என்று தலைப்பு வைத்துள்ளோம், இது அனைவருக்கும் பிடிக்கும்படியான எளிமையான அழகான ஃபேமிலி டிராமா”  என்கிறார்.

அர்ச்சனா,  விஜய் டிவி புகழ்  ரக்‌ஷன் ,   ஆயிஷா, அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, லொள்ளு சபா மாறன், கிச்சா ரவி, முருகானந்தம், கொட்டச்சி  உட்பட பலர் நடித்துள்ளனர்.

யாவரும் கேளீர்

முழு படப்பிடிப்பும் கொடைக்கானலின் பண்ணைக்காடு பகுதியில் நடந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள், பரபரப்பாக நடந்து வருகிறது.

விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு

கிரியேட்டிவ் புரொடியூசர் – விஜய் பாரதி,

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இசை:   டி. இமான்

ஒளிப்பதிவு : எம்.சுகுமார்

எடிட்டர்: புவன்

ஆர்ட் டைரக்டர்: ஏ.ஆர். மோகன்,

நடனம் : ஸ்ரீதர், ரகு தாபா, லீலாவதி.

ஸ்டண்ட்: கலை கிங்சன்

பி.ஆர்.ஓ:  சதீஷ் (எய்ம்)

—  ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.