அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பிரதமர் கொண்டு வந்த மசோதா “வெளியில் ஆட்டுத்தோல், உள்ளே நரி” – எம்.பி கனிமொழி

திருச்சியில் அடகு நகையை விற்க

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் வேட்பாளருமான கீதா ஜீவனை ஆதரித்து, தூத்துக்குடி சிதம்பரநகர் மெயின் ரோடு பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.; நான் எப்பொழுதும் சொல்லுவது போல, கீதா ஜீவன் இந்த தொகுதியிலே இருக்கக்கூடிய ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சகோதர சகோதரிகளை பெயர் சொல்லி அழைக்கக்கூடிய அளவிற்கு மக்களோடு நெருக்கமாக பழகியவர். யார் எந்த நேரத்தில் அழைத்தாலும் உடனே ஓடி வந்து அவர்களுடைய தேவைகளை கேட்டுத் தீர்வு வழங்கக்கூடியவர் கீதா ஜீவன். அது மட்டுமல்லாமல், அமைச்சராகவும் பல முக்கிய திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்களின் நம்பிக்கைக்குரியவராக சிறப்பாக செயல்படுத்தி தந்திருக்கிறார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரம்பரியத்தில் வந்துள்ள ஒரு சகோதரி. அவருடைய தந்தை தலைவர் கலைஞர் அவர்களின் உறுதியான ஆதரவாளரான மரியாதைக்குரிய பெரியசாமி அவர்கள். அவருடைய மகளுக்கு மீண்டும்  உங்கள் தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் வழங்கியிருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நேரத்தில், வெற்றி பெற்ற உணர்வு எனக்குள் ஏற்கனவே வந்துவிட்டது. நம்முடைய அமைச்சர் கீதா ஜீவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். உங்களுக்கெல்லாம் இப்போது வாழ்த்து இல்லை; ஏனெனில் நீங்கள் இன்னும் வேலை செய்ய வேண்டும். தேர்தல் முடியும் வரை ஒழுங்காக, கவனமாக, ஒற்றுமையாக அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

காலை உணவு திட்டம் தற்போது ஐந்தாம் வகுப்பு வரை வழங்கப்படுகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தி, மேலும் பல மாணவர்களுக்கு பயன் அளிக்கப்படும். இந்த மாதிரி, உங்களுக்காக பல திட்டங்களை தொடர்ந்து உருவாக்கி செயல்படுத்தி வருகிறார் நம்முடைய முதலமைச்சர். அவருடைய ஆட்சி தமிழ்நாட்டிற்கு ஒரு பலமாக தொடர்ந்து இருக்க வேண்டும்.

நிறைய தொழிற்சாலைகள், முதலீடுகள் தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. வென்பாஸ்ட் போன்ற பெரிய தொழிற்சாலைகள் குறுகிய காலத்திலேயே நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் பல முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன.

இதனால், “தொழிற்சாலைகள் வந்தால் நம்ம பிள்ளைகளுக்கு வேலை கிடைக்குமா?” என்ற சந்தேகம் தேவையில்லை. “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம், எந்த தொழிற்சாலை எந்த பகுதியில் வருகிறதோ, அதற்கேற்ற பயிற்சிகள் அப்பகுதி இளைஞர்களுக்கு வழங்கப்படும். இதனால் இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இப்போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி அதிகரித்துள்ளது. நம்முடைய முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் இந்தியாவில் முதன்முதலில் ஐடி கொள்கையை கொண்டு வந்தவர். அதனால் தான் இன்று நம்முடைய மாணவர்கள் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகளை பெறுகின்றனர்.

அதேபோல், அடுத்த கட்ட வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவில் (AI) நம்ம பிள்ளைகளை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக, இனிமேல் அனைத்து கல்லூரிகளிலும், அனைத்து துறைகளிலும் இந்த AI தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிலிருந்து போதுமான நிதி வராத நிலையிலும், புயல், மழை போன்ற பேரிடர்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலையிலும், தமிழ்நாட்டை முன்னோடியான மாநிலமாக வளர்த்த பெருமை நம்முடைய முதலமைச்சருக்கே சேரும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

எதிரணியில் இருப்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்ற பெயரில் ஒரு மசோதா கொண்டு வந்தனர். உண்மையாகவே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், தற்போது உள்ள 543 இடங்களிலேயே 33% வழங்கலாம்.

நாங்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அனைவரும் அதற்கு ஆதரவு தர தயாராக இருந்தோம். ஆனால் அவர்கள் தற்போதைய தொகையை மாற்றாமல், அதை 850 ஆக உயர்த்தி, வட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்து, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள்.

அரசியலமைப்பு சட்டத்தை அவர்கள் நினைத்தபடி மாற்றிக்கொள்ளும் ஒரு நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அதற்குள் 33% இடஒதுக்கீடு தருகிறோம் என்று சொல்வது சரியான நோக்கம் அல்ல. மாநில உரிமைகளை காப்பது எங்களுடைய கடமை. அதனால் அந்த முயற்சியை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை; அதைத் தோற்கடித்தோம்.

பிரதமர் கொண்டு வந்த அந்த மசோதா வெளியில் நல்லதாய் தோன்றினாலும், உள்ளே வேறு நோக்கம் கொண்டது. “உள்ளே நரி, வெளியே ஆட்டுத்தோல்” என்று சொல்வது போல அது இருந்தது. அதை நாங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தோம். ஒரு பிரதமர் என்பதைக் மறந்து, ஒரு கட்சி தலைவரைப் போல பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் கொண்டு வந்த மசோதா தோல்வியடைந்ததால் வருத்தப்படுகிறார்.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர் தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவது வருத்தமளிக்கிறது. இந்த நிலைமையை மக்கள் புரிந்துகொள்வார்கள். இந்த தேர்தலில் இப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் சரியான பதிலை அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நம்முடைய மாவட்டத்தில் மட்டும் மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகள் 3,24,000க்கும் மேல் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் 1000, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 2000 ரூபாயாக உயர்த்தப்படும். இந்த மாவட்டத்தில் மட்டும் 58,469 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் பட்டா தேவைப்படுகிறவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிக்கை நண்பர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் பலவற்றை தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். மீதமுள்ள கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.

தூத்துக்குடியில் வின்பாஸ்ட் போன்ற பெரிய தொழிற்சாலைகள் நம்முடைய ஆட்சியில்தான் வந்துள்ளன. புதிய ESI மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் நிலையில் உள்ளது.

மேலும், ரூபாய் 29 கோடி செலவில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 136 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த தொகுதியில் மட்டும் ரூபாய் 120 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு, மழைநீர் தேங்காத நகரமாக மாற்றப்பட்டுள்ளது.தென் தமிழ்நாட்டில் முதல்முறையாக முத்தையாபுரத்தில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் கேட்ட தேவைகளை நிறைவேற்றி, தூத்துக்குடியை ஒரு பெரிய தொழில் நகரமாக மாற்ற தொடர்ந்து முயற்சி செய்து வரும் நம்முடைய முதலமைச்சரின் கரத்தை நாம் பலப்படுத்த வேண்டும்.

மீன்பிடி தடைக்கால நிவாரணம் 8,000-லிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மீன்பிடி குறைவுகால நிவாரணம் 6,000-லிருந்து 9,000 ரூபாயாக  உயர்த்தப்படும். கடலோர நீர்வாழ் உயிரின வளர்ச்சிக்காக தனிப்பட்ட அக்குவா மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மீன் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

மீன்வளத் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள் நீண்ட நாட்களாக தனி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும். மேலும், அந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முக்கிய நகரங்களில் நவீன விற்பனை கூடங்கள் அமைக்கப்படும். இவை அனைத்தும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிகள். அவை கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

அவற்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை நீங்கள் எங்களுக்கு வழங்க வேண்டும். நம்முடைய அமைச்சர் மற்றும் வேட்பாளர் கீதா ஜீவன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, ஒரு மிகப்பெரிய வெற்றியை உருவாக்கி தர வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.