கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் !
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர், காமராஜபுரத்தை சேர்ந்த 1) சுரேஷ் 32/20 த.பெ நடராஜன், 2) பிரபாகரன் 19/25 த.பெ முருகேசன், 3) குமரேசன் 27/20 த.பெ நடராஜன், 4) சேகர் 38/20 த.பெ நடராஜன், 5) லக்ஷ்மி 50/20 க.பெ நடராஜன், 6) சுகன்யா 26/20 த.பெ நடராஜன் ஆகியோர் சேர்ந்து, குடும்ப பிரச்சனையின் முன்விரோதம் காரணமாக, கடந்த 06.03.2020-ம் தேதி 1) செல்வராஜ் 45/20 த.பெ மாரிமுத்து, 2) அபினேஷ் 17/20 த.பெ செல்வராஜ், 3) சுமித்ரா 20/20 த.பெ செல்வராஜ் (வாய்பேச முடியாதவர்) ஆகியோரை கத்தி மற்றும் அரிவாள் கொண்டு தாக்கியதில், அனைவருக்கும் காயம் ஏற்பட்டு, மேற்படி செல்வராஜ் 45/20 த.பெ மாரிமுத்து என்பவர் மட்டும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக இறந்த செல்வராஜின் மகன் மகேஷ்வரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்படி எதிரிகள் மீது ஜீயபுரம் காவல் நிலைய குற்ற எண். 75/20, U/s 147, 148, 294(b), 323, 324, 302 IPC -TL திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (01.07.2025) இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் மேற்படி வழக்கின் எதிரி 1) சுரேஷ் 32/20 த.பெ நடராஜன் என்பவருக்கு ஆயுள் தண்டனையும். எதிரி 3) குமரேசன் 27/20 த.பெ நடராஜன் என்பவருக்கு ரூ.20,000/- அபராதமும், மீதமுள்ள எதிரிகள் 2) பிரபாகரன் 19/25, 4) சேகர் 38/20, 5) லக்ஷ்மி 50/20, 6) சுகன்யா 26/20 ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார்.
இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக ஜீயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஜீயபுரம் காவல் நிலைய நீதிமன்ற காவலர் லக்ஷ்மி ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.