நிவின் பாலி – நயன்தாரா காம்போவின் ‘மை டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் ரிலீஸ்!
மலையாள ஹீரோ நிவின் பாலியின் தயாரிப்பு நிறுவனமான ‘பாலி ஜூனியர் பிக்சர்ஸும் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ‘ரெளடி பிக்சர்ஸும் இணைந்து தயாரித்து விரைவில் ரிலீசாகப் போகும் படம் ‘மை டியர் ஸ்டூடண்ட்ஸ்’. அறிமுக இயக்குனர்கள் ஜார்ஜ் பிலிப்ராய் & சந்தீப்குமார் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் ஹரி என்ற இளைஞராக நிவின் பாலியும் போலீஸ் அதிகாரியாக நயனும் நடித்துள்ளனர். இவர்களுடன் லால், அஜு வர்கீஸ், ஜகதீஷ், ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், தீப்தி, கீரண் கொண்டா உட்பட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் விரைவில் வெளியாகும் ‘மை டியர் ஸ்டூடண்ட்ஸ்’-ன் டிரெய்லர் மூன்று நாட்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரிலீசாகி பெரிய ஹிட்டான ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்திற்குப் பிறகு நிவின் பாலியும் நயன் தாராவும் இந்த ‘மைடியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தில் இணைந்துள்ளனர்.
— மதுரை மாறன்