காமராஜர் 124-வது பிறந்தநாள் முன்னிட்டு கல்வி திருவிழா நாடார் பேரவை அறிவிப்பு !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

இந்திய நாடார் பேரவை மற்றும்  நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஜெ.டி.ஆர். சுரேஷ் வெளியிட்டுள்ள  அறிக்கையில், முன்னாள் முதல்-அமைச்சரான பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாளையொட்டி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், உறவுகள், சொந்தங்கள், நண்பர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் திரளாக ஒன்று கூடி சிறப்பித்தனர். மேலும் காமராஜர் பிறந்த நாளையொட்டி வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் உள்ள சுவார்ட்ஸ் அரங்கில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி திருவிழாவாக நடைபெறவிருக்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் இணைந்து செய்து வருகிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.