அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் பார்வையில் ‘நறுவீ’  

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ஏ.அழகு பாண்டியன், டைரக்‌ஷன் : சுபாரக் எம்., ஆர்ட்டிஸ்ட் : டாக்டர். ஹரிஷ், விஷ்ணு, விஜே பப்பு, பாடினி குமார், பிரவீனா, ஜீவா ரவி, முருகானந்தம், பிரதீப், சாரதா நந்தகோபால். ஒளிப்பதிவு : ஆனந்த் ராஜேந்திரன், இசை : அஷ்வந்த், ஆர்ட் டைரக்டர் : சி.கே.சக்திவேல், தயாரிப்பு நிர்வாகம் : வினோத்குமார், பி.ஆர்.ஓ. : மணிமதன்.

நறுவீசென்னையில் இருக்கும் அஜால்குஜால் பேர்வழியான காபி எஸ்டேட் ஓனர் ஒருவர் குன்னூரில் தனக்குச் சொந்தமாக இருக்கும் காபி எஸ்டேட்டில் புதிய பிளாண்ட் ஒன்றை தொடங்குவதற்கு தனது டீமிலிருந்து இரண்டு இளம் ஆண்களையும் பெண்களையும் குன்னூருக்கு அனுப்புகிறார். அங்கே போனதும் வழக்கம் போல் நைட் சீன் வருகிறது. அமானுஷய் சக்தி ஒன்றின் குரல் கேட்கிறது. இந்த டீமுடன் இணையும் லோக்கல் இளம் பெண் ஒருத்தி, “என்னோட மாமா இந்தக் காட்டுல தான் காணமாப் போனாரு. நிச்சயம் திரும்ப வருவாரு” என திடீர் திடீரென முகத்தை மாற்றிக் கொண்டு பயமுறுத்துகிறார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அவரது மாமன் தான் ஹீரோ ஹரிஷ். குன்னூர் மலைப்பகுதியிலிருந்தும் ஒதுங்கியிருக்கும் நெடுங்காடு கிராமத்திற்கு பல கிலோமீட்டர் பைக்கில் பயணித்து, பின்பு நடந்து போய் அங்கிருக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்.

நறுவீஅதே மலைகிராமத்தில் உடல்முழுவதையும் [ முகத்தையும் சேர்த்து] கலர்கலர் துணிகளால் மறைத்துக் கொண்டு ஒருவர் சாமியாடுகிறார். மாதவி என்ற பள்ளிச் சிறுமிக்கு காலில் சின்ன சலங்கையைக் கட்டிவிடுகிறார். அந்தச் சிறுமியோ காட்டைக் காவல் காக்கும் தெய்வமான மாதவனை அழைத்து அழைத்து பினாத்துகிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

படத்துல என்ன தாண்டா நடக்குதுன்னு நாம நினைக்குறதுக்குள்ள இடைவேளை விட்டுட்டாய்ங்க. அதுக்குப் பிறகு என்ன நடக்குதுன்னு புரியுறதுக்குள்ள படம் முடிஞ்சு போச்சு.

ஏதோ பொழுது போகாம மலை கிராமங்களுக்கு ட்ரிப் போய்ட்டு வந்திருக்காரு டைரக்டரு சுபாரக். கூடவே நான்கைந்து நடிகர்களும் போய் வந்திருக்கிறார்கள். ஹீரோ ஹரிஷோ பேந்த பேந்த முழிச்சு நம்மை பாடாய்படுத்துறாரு.

’நறுவீ’ன்னா நல்ல வாசனை, அதாவது நறுமணம்னு அர்த்தமாம். டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு தெரியல.

 

 —   மதுரை மாறன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.