அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நியோமேக்ஸ் – விசாரணை அதிகாரிக்கு நெருக்கடி !

1

திருச்சியில் அடகு நகையை விற்க

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

வெயிலுக்கு இதமாக, தர்பூசணி துண்டுகளை சுவைத்தபடியே, இன்னும் ரெண்டு மாசத்த எப்படித்தான் ஓட்டப் போறோமோ தெரியலையேனு புலம்பலோடு உள்ளே நுழைந்தார் அதியன்.

”கத்தரி வெயிலுக்கெல்லாம் வெளிய தலை காட்டிறாதீங்க. ஒர்க் ப்ரம் ஹோம், வீடியோ கான்பிரன்சிங்னு வீட்டோட இருந்துடுங்க”னு கபிலன் சொல்ல, அதுசரி நாம வீட்டோட முடங்கிகிடந்தா, நாடு என்னாகுறது? தொடர்ந்தார் அதியன்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

ஆமா, நியோமேக்ஸ் விவகாரம் சூடு பிடிச்சிருக்கு போலயே. இ.டி.யும் உள்ளே வந்துட்டாங்க போல. சீரியஸ் பிராடு இன்வெஸ்டிகேசன்தான் இந்த வழக்க விசாரிக்கணும். ஃபோரன்சிக் ஆடிட் நடத்தனும்னுலாம் கோரிக்கைக்கு மேல கோரிக்கை, வழக்குக்கு மேல வழக்குனு விவகாரம் தேசிய அளவுல போயிடும் போலயே..

உண்மைதான், அதியன். இ.டி. இப்போ இல்லை. 2023 லேயே உள்ளே வந்துட்டாங்க. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்ங்கிற கதையா, 2024 இல ஒன்னுமே இல்லை. இப்ப திடீர்னு சீனுக்குள்ள வந்திருக்காங்க. வந்தது மட்டுமில்ல, நியோமேக்ஸ் குரூப் ரியல் எஸ்டேட் கம்பெனி கிடையாது. நாட்ல ஒரு துறைய விடாம, எல்லா துறையிலயும் பெயருக்கு ஒரு கம்பெனிய தொடங்கி நல்லாவே வேட்டையாடியிருக்காங்க. எப்படி பார்த்தாலும் 8000 கோடிக்கு மோசடி நடந்திருக்குனு அவங்க போட்ட வெடிதான் இப்ப எல்லாத்தையும் அதிர வச்சிருக்கு.

நியோமேக்ஸ்

ஆமா, அங்குசம்தான். இந்த வழக்கு விவகாரம் வெளிய வந்தப்பவே 5000 கோடி மோசடினு அட்டைப்பட கட்டுரையே வெளியிட்டிருந்ததே.

வழக்க விசாரிச்சிட்டிருக்க நீதியரசர் பரதசக்ரவர்த்தி, டான்பிட் சட்டப்பிரிவுகள்ல வழக்கு போட்டுருக்கிறதால காம்பவுண்ட் அஃப்பன்ஸ்-ங்கிற ஒரு விசயத்தை வச்சி எப்படியும் பாதிக்கப்பட்டவங்களுக்கு செட்டில்மெண்ட் செஞ்சி தரதுனு ஒரு முடிவோட வழக்க நகர்த்திட்டு போறாரு.

டான்பிட் சட்டப்படி வழக்கு போட்டிருந்தாலும், இது லேசுபட்ட கம்பெனி இல்ல. ஐ.டி., ஜி.எஸ்.டி., செபி, ஆர்.பி.ஐ., இ.டி.,னு பல துறைகள் சம்பந்தபட்ட விவகாரமா மாறியிருக்கு. எவ்வளவு பேரிடம் வசூலிச்சாங்க? எவ்வளவு கோடி வசூலிச்சாங்க? வசூலிச்ச காசையெல்லாம் என்னதான் பன்னாங்கனு? இப்போ வரைக்கும் மர்மமா இருக்குனு சொல்லிக்கிறாங்க.

நீதிபதி பரதசக்ரவர்த்தி
நீதிபதி பரதசக்ரவர்த்தி

நியோமேக்ஸ் கதை பெருங்கதை. பெரும்புள்ளிகள் சம்பந்தபட்ட கதை. ராசியில்லாத முதல்வருனு பெயரெடுத்த மூன்றெழுத்துகாரர்தான் நியோமேக்ஸ் இந்த அளவுக்கு தப்பிச்சி வந்ததுக்கே காரணம்னு சொல்றாங்க. வருஷா, வருஷம் ஐ.டி. ரெய்டு நடந்துருக்கு. ஜி.எஸ்.டி. ரெய்டு நடந்திருக்கு. அப்போ, அப்போ, ஆவணங்களை அள்ளி போட்டு போயிருக்காங்க. பத்து பதினைஞ்சி நாளைக்கு கம்பெனிய மூடியெல்லாம் இருக்காங்க. சில பல டீலிங் முடிவில் மீண்டும் பழையபடி வசூல் வேட்டை நடந்திருக்கு. மதுரை ஹை கோர்ட்டுக்கு பின்னாடி இருக்கிற இடம், யாரிடமிருந்து யாருக்கெல்லாம் கைமாறி கடைசியா நியோமேக்ஸ் வசம் வந்ததுங்கிறதுக்கு த்ரில்லர் ஸ்டோரியே இருக்குனு சொல்றாங்க. அந்த இடத்தை நோண்டுனா, பழைய லாட்டரி சீட்டெல்லாம் கிடைக்க வாய்ப்பிருக்குனு சொல்றாங்க.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதுதான், வட்ட கம்பெனி சதுர கம்பெனியோட சதினுலாம் பேசுறாங்களோ?

ஆமா, ஆமா. அவங்க ஆட்சியில இருந்த அந்த பத்து வருஷ காலம் நியோமேக்ஸ்க்கு பொற்காலம்தான். தமிழ்நாடு முழுக்க ரியல் எஸ்டேட் பன்றவங்க, மினிஸ்டர பாக்கனுங்கிற பார்முலா பவர்ஃபுல்லா இருந்த காலம்ல அது. அந்த மினிஸ்டரே ஒன் ஆஃப் த சைலன்ட் பார்ட்னராதான் இருந்திருக்காரு. ஆட்சி மாறும்போது, பார்ட்னர் டீலிங்கை கழட்டிவிட்டு அதுக்கு பதிலா லம்ப்பா லிக்யூட் கேஷை  ஸ்வாகா பன்னிட்டு போனதுதான், நியோமேக்ஸ் இந்த அளவுக்கு தடுமாறுனதுக்கும் காரணம்னும் சொல்றாங்க.

சரி, சரி இந்த கதைய இப்போ ஆரம்பிச்சாலும். இன்னும் ரெண்டு வருஷத்துக்கு பேசிட்டு போலாம். இப்போதைக்கு ஒன்ன மட்டும் சொல்லிட்டு போறேன். சமீபத்துல கோர்ட் உத்தரவு போட்டுச்சுனு சொல்லி, ஏஜெண்டுனு ஒருத்தர இ.ஓ.டபிள்யூ போலீசார் அரெஸ்ட் பன்ன முயற்சி செஞ்சாங்க. அது சர்ச்சையாகி கிடக்குது. அவருதான், இ.டி. ரெய்டுக்கு காரணம்னு நியோமேக்ஸ் கட்டம் கட்டி வழக்கு போட்டு, இ.ஓ.டபிள்யூ போலீசு மூலமா நெருக்கடி கொடுத்து அவர கைது செய்ய முயற்சி பன்னாங்கனு நீதியரசர் பரதசக்ரவர்த்திகிட்டேயே கடுமையா முறையிட்டாங்க.

டி.எஸ்.பி. மனிஷா
டி.எஸ்.பி. மனிஷா

அந்த விவகாரத்துல என்ன நடந்துச்சு? யார் நெருக்கடி கொடுத்தாங்கனுலாம் மர்மமாதான் இருக்குது. ஆனா, இந்த வழக்கோட விசாரணை அதிகாரியோட விருப்பமே இல்லாம, அவசரகதியில எங்கிருந்தோ வந்த அழுத்தத்துலதான் இந்த நடவடிக்கையே எடுக்க வேண்டியதாச்சுனு பேசிக்கிறாங்க. பாவம், இந்த விவகாரத்துல, விசாரணை அதிகாரிய பலிகடா ஆக்குறதுக்கும் வேலை நடந்துகிட்டு இருக்குனும் பேசிக்கிறாங்க.

அவரோட கல்யாணத்துக்கு கூட கம்பெனி ஸ்பான்சர் பன்னிருக்குனு எல்லாம் பேசுறாங்கனு வழக்கு விசாரணையில கோர்ட்லயே வக்கீல் ஒருத்தங்க பேசியிருந்தாங்களே…

ஆமா… “ போட்டி போட்டுகிட்டு நாங்க வேலையே செய்யலைனு இத்தனை வழக்கு போடுறாங்களே, அதுல ஒரு வழக்காச்சும் இ.ஓ.டபிள்யூ. போலீசுக்கு போதுமான ஸ்ட்ரென்த் இல்லை. கம்ப்யூட்டர் வசதி இல்லை. டைப் அடிக்க ஆள் இல்லைனு ஒரு வழக்காச்சும் போட்ருக்காங்களா? 25 வயசுல அந்த அம்மா எவ்வளவு மெனக்கெட்டிருக்காங்கனு தெரியுமா? பாலாவையும், கமலக்கண்ணனையும் தொரத்திகிட்டு எங்கெங்கே எல்லாம் எத்தனை கிலோமீட்டர் அலைஞ்சிருக்காங்கனு தெரியுமா? இந்த வயசுல முதுகு தண்டுவட பிரச்சினையோட, அவ்ளோ எஃபோர்ட் போட்ருக்காங்க. இ.டி. அட்டாச் பன்றதுக்கும் இ.ஓ.டபிள்யூ. அட்டாச் பன்றதுக்கும் எவ்ளோ டிப்ரன்ஸ் இருக்குனு தெரியுமா? பிராக்டிக்கலா பார்த்தாதான் தெரியும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இ.டி.க்கு இருக்கிற அதிகாரத்த கொடுத்து பாருங்க. யார் எது சொன்னாலும் அத பத்தி கண்டுக்காம, அவங்க வேலையில அவங்க கருத்தா இருந்தாங்க. எல்லாத்தையும் ஆவணப்படுத்தியிருக்காங்க. அடுத்து எந்த அதிகாரி வந்தாலும் அத ஒன்னும் செய்ய முடியாதபடிக்கு, அஸ்திவாரத்தை போட்டிருக்காங்க. இப்போ, அவங்க வேலையே செய்யலை. கம்பெனிகிட்ட காசு வாங்கிட்டாங்கனு கூசாம பேசுறாங்க. அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே ரிட்டயர்டு அரசு அதிகாரிங்க. வெல்செட்டில்டு பேமிலி. இவங்களும் நல்ல சம்பளம் வாங்குற அதிகாரி.

கம்பெனிகிட்ட காசு வாங்குறவங்க, ஏன் கல்யாணத்துக்குனு பெர்சனல் லோன் வாங்கனும் சொல்லுங்க? அவங்கள அவமானப்படுத்தி வெளியேத்துறதுக்கு முயற்சி நடக்குற மாதிரி இருக்கு. கம்பெனி ஆளுங்க சொல்ற மாதிரி வளைஞ்சி கொடுக்கிற அதிகாரிய வச்சி விவகாரத்தை கொண்டு போகனும்ங்கிற முடிவுக்கு வந்துட்டாங்க.” னு விசாரணை அதிகாரிய பத்தி நல்லா தெரிஞ்ச சோர்ஸ் சொல்ற தகவல் தலை சுத்த வக்கிது.

விசாரணை அதிகாரிய மாத்தனும்னு கம்பெனி ஆசப்பட்டது. நீதியரசர் பரதசக்ரவர்த்திதான் விசாரணை அதிகாரிக்கு ஆதரவா இருந்தாரு. இப்போ, அந்த வேலைய பைசா செலவு இல்லாம, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சிலரை வைத்தே மூவ்கள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்.

பார்ப்போம் என்னதான் நடக்குதுனு?

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

1 Comment
  1. ரவி says

    Neomax வழக்கில்
    அங்குசம் நீ பொத்திகிட்டு இரு நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் மக்களிடையே குழப்பத்தை உருவாக்காத

Leave A Reply

Your email address will not be published.