நியோமேக்ஸ் சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. மனிஷா பிரத்யேக நேர்காணல்!
நியோமேக்ஸ் சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. மனிஷா பிரத்யேக நேர்காணல்!
நியோமேக்ஸ் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிவிடுவேன். விசாரணை அதிகாரிகள் பயன்படுத்தும் செல்போன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கும்” என்றெல்லாம் உயர்நீதிமன்ற நீதிபதி கடுமை காட்டிய நிலையில், நியோமேக்ஸ் வழக்கில் தனிக்கவனம் கொடுப்பதற்கென்றே சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும், மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு சிறப்பு டி.எஸ்.பி. மனிஷா அவர்களிடம் அங்குசம் இதழ் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தோம்.
நீதிபதி கடுமைகாட்டும் அளவுக்கு என்னதான் நடந்தது ?
நீதிபதி திட்டினார் என்பது கொஞ்சம் ”ஸ்பைசி”யாக இருப்ப தால் எல்லோரது கவனத்தையும் பெற்றுவிட்டது. நியோமேக்ஸ் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி கௌதமி என்பவர் தொடுத்த வழக்கு அது. இதற்கு முன்னர் விசாரணை அதிகாரி களாக இருந்தவர்கள் புகார்தாரர்கள் கோரிக் கை மீது கவனம் கொடுக்கப்படவில்லை என்பதற்காக தொடுக்கப்பட்ட வழக்கு. தற்போது, நியோமேக்ஸ் விவகாரத்தை மட்டுமே கையாள்வதற்கென்று தனி டி.எஸ்.பி.யை சென்னையிலிருந்து அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்ற தகவல்கூட நீதிபதிக்கு முறையாக போய்ச்சேராததன் காரணமாக நிகழ்ந்த ஒன்று. அரசு வழக்குரைஞர் எடுத்து சொன்னதையடுத்து நீதிபதி ஏற்றுக்கொண்டார். கௌதமியிடமும் நாங்கள் பேசிட்டோம்.
நியோமேக்ஸால் ஏஜெண்ட் சிவக்குமார் தற்கொலை செய்திருக்கிறார். இந்த விசயத்தை நீங்களே சீரியசாக பார்க்கவில்லையே?
அதற்கான காரணத்தை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் இங்கு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இதற்கு முன்னர் என்ன நடந்தது என்பது பற்றி தெரியாது. கண்டிப்பாக, அவரது மனைவி ஜெனித்தா அளித்த புகாரை படித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களைத் தேடிப்போக வேண்டும் என்பது சரிதான். பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக எங்களை வந்து பார்க்கலாமே. எனக்கு தெரிஞ்சு இது ரொம்பவே மாஸிவான கேஸ். என் வேலை என்பதற்காக என் டீமையும் நான் ரொம்ப கஷ்டபடுத்திட கூடாது. விடுமுறை நாட்களில்கூட எங்களது அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. என்னுடைய போலீசு பணியில், இது லேண்ட் மார்க் கேஸ். என்னோட பெஸ்ட்ட நான் ஹானஸ்டா பன்னிட்டு இருக்கேன்.
இப்போதும்கூட, முன்னணி இயக்குநர்களை ஏன் இன்னும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறாரே?
கமலக்கண்ணனை யார் கைது செய்தது சொல்லுங்கள். இந்த வழக்கில் ஏ1 முதல் ஏ5 வரை கம்பெனிகள். டெக்னிக்கலா ஏ6 கமலக்கண்ணன். உண்மையில், ஏ1 கமலக்கண்ணன்தான். ஊடகங்களில் இதுவே பெரிய அளவில் செய்தி ஆகவில்லையே. எங்க ளுக்கு வந்த எல்லா பெட்டி சனிலும் கமலக்கண்ணன் பெயர் இருக்கிறது. அந்த கமலக்கண்ணனையே கைது செய்திருக்கிறோம். ஆனாலும், பெரிய அளவில் யாரும் புகார் கொடுக்க வரவில்லையே.
போலீசார் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதாக எடுத்துக் கொள்ளலாமா?
எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்வதைவிட, இன்னமும் கம்பெனியை நம்புற மக்கள் இருக்காங்கனுதான் சொல்லனும். ஆயிரக்கணக்கான ஏஜெண்டுனு கமலக்கண்ணனே சொல்கிறார். அப்போ பாதிக்கப்பட்டவங்க எத்தனை பேர் இருப்பார்கள்? சிவகங்கை பக்கமெல்லாம் தெருவுக்கு நாலு ஏஜெண்டு இருக்கிறார்கள். எஃப்.ஐ.ஆர். போட்டதற்கு பிறகு, ஒரே ஒரு முறைதான் நான் ஜூம் மீட்டிங் நடத்தினேன். ஒரே ஒரு முறைதான் ஆடியோ ரெக்கார்டிங் போட்டேன். மற்றவை எல்லாமே, என்பெயரை பயன்படுத்தி கீழே இருக்கிற ஏஜெண்டுகள் மக்களை அடக்குவதற்காக போட்டுக்கொண்டார்கள். நான் சொல்லவே கிடையாது என்கிறார், கமலக்கண்ணன். என்னை கைது செய்துவிட்டீர்கள். இனி பாருங்கள் எவ்வளவு கம்ப்ளையிண்ட் வரும் என்று வேறு சொன்னார். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்களிடம் 569 பேர் வந்திருக்கிறார்கள். 83 வயதை கடந்தவர்கள்கூட தனிப்பட்ட முறையில் என்னை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கே நம்பிக்கை இருக்கும்போது, மற்றவர்கள் ஏன் தயங்க வேண்டும்? மக்கள்தான் முழுமையாக சப்போர்ட் பண்ணனும்.
வீடியோ லிங்:
– வே.தினகரன், ஷாகுல், படங்கள்: ஆனந்த்.
[…] நியோமேக்ஸ் சிறப்பு விசாரணை அதிகாரி ட… […]