நியோமேக்ஸ் வழக்கு சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மாற்றமா ? நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன ? டி.எஸ்.பி. மனிஷா விளக்கம் !

நியோமேக்ஸ் வழக்கு சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மாற்றப்போவதாக, நீதிபதி கருத்தை தெரிவித்திருப்பதை போல ஊடகங்களில் செய்தி வெளியாகிருப்பது முற்றிலும் தவறு ... உண்மையில் நீதிமன்ற விசாரணையில் என்ன நடந்தது?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் வழக்கு விசாரணையில் உண்மையில் நடந்தது என்ன? டி.எஸ்.பி. மனிஷா விளக்கம் !

பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்து, நியோமேக்ஸ் வழக்கு சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மாற்றப்போவதாக, நீதிபதி கருத்தை தெரிவித்திருப்பதை போல ஊடகங்களில் செய்தி வெளியாகிருப்பது முற்றிலும் தவறு என்று மறுத்தும்; உண்மையில் நீதிமன்ற விசாரணையில் என்ன நடந்தது? என்பது குறித்தும் விளக்கம் அளித்திருக்கிறார், நியோமேக்ஸ் வழக்கின் விசாரணை அதிகாரியும், சிறப்பு டி.எஸ்.பி.யுமான மனிஷா.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

நியோமேக்ஸ் வழக்கை விசாரித்து வரும் மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றம், நியோமேக்ஸ் தரப்பில்  டான்பிட் 5அ சட்டவிதியின்படி முதலீட்டாளர்களுக்கு நிலமாகவோ, பணமாகவோ திருப்பித் தர தயாராக இருப்பதாகவும் முன்வைக்கப்பட்ட வாதத்தின் அடிப்படையில், நிலமா? பணமா? என்ற முதலீட்டாளர்களின் விருப்பத்தை அறிந்துகொள்ளும் வகையில் அட்வகேட் கமிஷனார்களை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து, 10 அட்வகேட் கமிஷனார்கள் நியமிக்கப்பட்டு, 1004 புகார்தாரர்களிடமிருந்து அவர்களின் விருப்பங்களும் கேட்டறியப்பட்டிருக்கின்றன.

நியோமேக்ஸ் மனுமேளாஇந்நிலையில், அட்வகேட் கமிஷனார்களை நியமிக்கும் அதிகாரம் சிறப்பு நீதிமன்றத்திற்கு இல்லை என்றும்; மேற்படி உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் முதலீட்டாளர்கள் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இதோடு, நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒன்றாக இணைத்து விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தண்டபாணி அட்வகேட் கமிஷனார்கள் நியமிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்திருந்தார்.

மேலும், இவ்வழக்கின் விசாரணையின்பொழுது, ” பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையர்களை நியமனம் செய்தது தவறு. முதன்முறையாக இந்த வழக்கில் வழக்கறிஞர் ஆணையர்களை நியமித்திருப்பது வினோதமாக உள்ளது.

மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பித்துவிட நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை நீதிமன்றம் எடுக்கும். பாதிக்கப்பட்டவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து செய்ய நீதிமன்றம் அனுமதிக்காது.” என்றும்; ” நிதி நிறுவன மோசடிகளைத் தடுக்க உள்துறை செயலகத்துக்கும், பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறைக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வகுக்கும் நேரம் வந்துவிட்டது.

1000 கோடிக்கு மேலான நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமிக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிடப்படும்” என்பதாகவும் கருத்தை தெரிவித்ததாக முன்னணி ஊடகங்களில் செய்தியும் வெளியாகியிருந்தது.

நியோமேக்ஸ் சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. மனிஷா
நியோமேக்ஸ் சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. மனிஷா

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு டி.எஸ்.பி. மனிஷா அளித்துள்ள விளக்கத்தில், ”மார்ச் 14 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், பிணையை ரத்து செய்யக்கோரி கோர்ட் எண்: 6 இல் நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. இதற்கு முன்னதாக 71.5 கோடி மதிப்பிலான நியோமேக்ஸ் சொத்துக்களை அட்டாட்ச்மென்ட் செய்ய 28 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார்கள். இந்த அவகாசத்திற்குள் 11.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை மட்டுமே அட்டாட்ச் செய்ய முடிந்தது. இதனை பரிசீலித்த நீதிபதி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்த இடத்தில்தான் ஊடகங்கள் நீதிபதியின் கருத்தை தவறாக வெளியிட்டிருக்கிறார்கள். சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

விசாரணை அதிகாரியான என்னிடம் எத்தனை இடங்களை அடையாளம் கண்டிருக்கிறீர்கள் என்பதாக கேட்டார். 21 கோடி மதிப்பிலான, 19 ப்ராஜெக்டுகளை அடையாளம் கண்டிருப்பதாக பதிலளித்திருந்தேன். ஆனாலும், கைவசம் 3300 ஆவணங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் பரிசீலித்தால், இன்னும் அதிகமான சொத்துக்களை அடையாளம் காண முடியும் என்பதாகவும் பதிலளித்திருந்தேன்.

இதையும் படிங்க:

நியோமேக்ஸ் சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. மனிஷா பிரத்யேக நேர்காணல்!

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆமாம் அதற்கான ஆள் பலமோ, வருவாய்த்துறை ஆவணங்களை அட்டாட்ச் செய்வதற்குரிய பலம் நம்மிடம் இல்லை. இதிலிருந்துதான், 1000 கோடிக்கு அதிகமான மோசடிகளை உடைய வழக்குகளை கையாளுவதற்கு ஏற்ற வகையில் உள்துறை செயலகத்திற்கும், பதிவுத்துறைக்கும் டைரக்சன் வழங்கலாம் என்றிருக்கிறேன். அதனை மார்ச் 21 அன்று வெளியிடுகிறேன். ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து 1000 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றிருப்பதாக கருதும் வழக்குகளில் குறிப்பாக அட்டாட்ச்மெண்ட் வழிமுறைகளை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க ஆணையிடுவதாகத்தான் கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தைத்தான் நியோமேக்ஸ் வழக்கை மீண்டும் ஒரு சிறப்பு அதிகாரியை வைத்து விசாரிக்கப் போவதாகவும்; சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கப்போவதாகவும் ஊடகங்களில் தவறான செய்தி வெளியாகியிருக்கிறது. இது தவறான தகவல். மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அட்டாட்ச்மெண்ட் செய்யும் பணியை எளிதாகவும் விரைந்தும் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் வழங்கப்பட்ட  ஒரு ஆலோசனையாகத்தான் அந்த கருத்தை தெரிவித்திருந்தார்கள்.” என்பதாக விளக்கம் அளித்திருக்கிறார், சிறப்பு டி.எஸ்.பி. மனிஷா.

  • அங்குசம் புலனாய்வுக்குழு.

 

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.