நியோமேக்ஸ் | நீதிமன்றம் வைத்த செக் ♟ வேகமெடுக்கும் வழக்கு !
நியோமேக்ஸ் | நீதிமன்றம் வைத்த செக் ♟ வேகமெடுக்கும் வழக்கு !
நியோமேக்ஸ் மோசடி வழக்கில், கோடை விடுமுறையை பயன்படுத்தி நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்களின் மதிப்பை நிர்ணயம் செய்துவிட வேண்டுமென்ற நோக்கில், மதிப்பீட்டுக்குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்திருந்தது. பல்வேறு காரணங்களால், நிலங்களை மதிப்பீடு செய்யும் பணி தொய்வடைந்தது.

இதில் முக்கியமான காரணம், நியோமேக்ஸ் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பை வழங்காததுதான். வழக்கின் ஆரம்பகாலம் முதலாகவே, தங்களிடம் 5 கோடி சதுர அடி நிலங்கள் தயார் நிலையில் இருப்பதாக சொல்லி வந்தவர்கள், அந்த நிலங்கள் எந்த மாவட்டத்தில், எந்த வருவாய் கிராமத்தில், எந்த சர்வே எண்ணில் அமைந்திருக்கிறது? அது வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டவையா, இல்லையா? டிடிசிபி, ரெரா அனுமதி பெற்றவையா? என்பது போன்ற விவரங்களை தரமறுத்தது.
இந்த பின்னணியிலிருந்துதான், நியோமேக்ஸ் நிறுவனம் நிலம் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் கட்டாயம் சமர்ப்பித்தாக வேண்டுமென்று அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தார். இனி, நீதிமன்றத்திடமிருந்து நியோமேக்ஸ் நிறுவனம் சாக்கு போக்கு சொல்லி, தப்பிக்க வாய்ப்பில்லாத வகையில் பல்வேறு அதிரடிகளை காட்டியிருக்கிறார் நீதியரசர் பரதசக்ரவர்த்தி. இதன் பின்னணியை அலசுகிறது, இந்த வீடியோ.