அங்குசம் சேனலில் இணைய

நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் ! அங்குசத்தில் வெளியான முதல் கட்டுரை – வீடியோ !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

நியோமேக்ஸ் மோசடி தொடர்பாக, மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் 25.06.2023 தேதியிட்டு, குற்ற எண்: 3/2023 U/s. 406, 420, r/w 34 IPC & 5 Of TNPID Act படி வழக்குப் பதிவு செய்த நாள் தொடங்கி இன்று வரையில், இந்த மாபெரும் மோசடி தொடர்பாக பல்வேறு பிரத்யேகமான தகவல்களை கொண்ட புலனாய்வு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது அங்குசம் இதழ்.

இந்த மோசடி குறித்து, அங்குசம் மாதமிருமுறை அச்சு இதழில், (ஜூலை 1 – 15, 2023 ) முதன் முதலாக, ” 5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் !” என்ற தலைப்பில் செய்தி கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையில், இந்த மோசடியின் முழுப்பரிமாணத்தையும் விளக்கியிருந்தோம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த மோசடி அம்பலமான தொடக்க காலத்தில், ஏதோ கொரோனா கால ஊரடங்கு பிரச்சினை காரணமாகத்தான் நியோமேக்ஸ் தடுமாற்றத்தை சந்தித்ததை போலவும், மற்றபடி அந்நிறுவனம் 14 ஆண்டுகளாக நல்ல முறையில் இயங்கி வந்த நிறுவனம் என்றும் சப்பைக் கட்டு கட்டினார்கள் சிலர்.

நியோமேக்ஸ் கூட்டம்
நியோமேக்ஸ் கூட்டம்

ஆனால், அந்நிறுவனம் தொடங்கப்பட்ட காலம் தொட்டே, உறுப்பினர்களிடமிருந்து முதலீட்டை பெறும் நடைமுறையிலிருந்தே எந்தெந்த வகையில் எல்லாம் விதிமீறல்களையும், சட்ட விரோத வழிமுறைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது என்பதையும்; எவ்வாறெல்லாம் மூளைச்சலைவை செய்யப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பது பற்றியும் விலாவரியாக முதல் கட்டுரையிலேயே பதிவு செய்திருக்கிறது, அங்குசம்.

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு, அங்குசம் முன்வைத்த குற்றச்சாட்டுகளும், நியோமேக்ஸ் மோசடி குறித்த அங்குசம் இதழின் நிலைப்பாடுகளும் இன்றளவும் எவ்வாறு மிகச்சரியாக எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன என்பதை, தற்போதைய வழக்கின் நிலையிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

நியோமேக்ஸ் மோசடி குறித்த, தெளிவான புரிதலை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கிலிருந்து, அங்குசம் இதழில் வெளியான முதல் கட்டுரையின் ஒலி-ஒளி ஆக்கம் இங்கே மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.

–              அங்குசம் புலனாய்வுக் குழு.

கட்டுரையை எழுத்து வடிவில் வாசிக்க :

5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் !

5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் !

காணொளிப்பதிவாக காண 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.