ஃபெஸ்டம்பர்: நினைவில் நிலைக்கும் ஒரு திருவிழா!
செப்டம்பர் மாதக் காற்று திருச்சிராப்பள்ளியின் மீது மென்மையாய் வருட, என்.ஐ.டி திருச்சி வளாகம் தன் வழக்கமான அமைதியைக் கலைத்து ஒரு கலைத் திருவிழாவிற்கு மெல்லத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்கிறது. மூன்றாம் வாரத்தின் தொடக்கத்தோடு, இசையும் ஒளியும் இளமையும் ஒருசேரக் கைகோர்க்க, அந்தத் கல்விக்கூடம் ஒரு புதிய பரிமாணத்தில் மெய்சிலிர்க்கிறது-அதுவே நம் ஃபெஸ்டெம்பர் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து, ஏறத்தாழ பதினெட்டாயிரம் மாணவர்கள் வருகை தருகிறார்கள். அந்த மூன்று நாட்களுக்கு, இந்த நிறுவனம் ஒரு கல்லூரி வளாகமாக இல்லாமல், தானாக உருவாகிய ஒரு சிறிய, துடிப்பான தேசமாகவே மாறிவிடுகிறது. இதுதான் ஃபெஸ்டம்பர், “A Fest To Remember” (நினைவில் நிலைக்கும் திருவிழா). இருப்பினும், மாணவர்கள் இதை அன்புடன் “Fest In September” (செப்டம்பரில் ஒரு விழா) என்றும் தவறாகப் படித்து மகிழ்ந்துள்ளனர். ஃபெஸ்டம்பர், இப்போது தனது 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, ஆனால் அது ஒருமுறை கூட தன் வருகையை மக்களுக்கு உணர்த்தத் தவறியதில்லை.
1975-ஆம் ஆண்டில், இதற்கென எந்தவொரு சொந்த நிதியும், நிச்சயத் தன்மையும் இல்லாமல் ஒரு வியக்கத்தக்க வகையில் இது தொடங்கியது; வெறும் மனஉறுதியும், ஒரு விழாவைத் தன்னம்பிக்கையால் மட்டுமே உருவாக்க முடியும் என்று நம்பிய மாணவர்களின் அசாத்தியத் துணிச்சலும் மட்டுமே அப்போது இருந்தது இந்தியாவின் பிரம்மாண்டமான கலாச்சார விழாக்களில் ஒன்றாக உருவெடுத்த இந்த விழாவின் தொடக்கம், ஒரு வியப்பாகவே அமைந்தது. ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, அந்த மனஉறுதி ஒரு பரம்பரைச் சொத்தாக ஆழமடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை நன்கு அறிந்த புதிய கரங்களுக்கு அது கைமாறுகிறது.
வளாகத்தின் பாதையெங்கும், சிறிய நகரங்களைப் போல கடைகள் அமைகின்றன; சூடான ரோல்கள் முதல் குளிர்பானங்கள் வரை, கரும்புச் சாறு முதல் குழம்பி வரை, அனைத்து உணவு வகைகளும் CEESAT பகுதியில் கிடைக்கும். அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கும் விற்பனை நிலையங்கள் மக்கள் ஆசையுடன் வாங்க நினைக்கும் பொருட்களைக் காட்சிப்படுத்தி, சேமித்து வைத்திருக்க வேண்டிய தொகையைக் கவரப் போட்டியிடுகின்றன. அவற்றின் வழியே நடந்து செல்லும்போது, நேரத்தையும் பணத்தையும் மறப்பது எளிது; அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் இருப்பது அதைவிட எளிது. வழிே
இந்த விழா போட்டிகளைத் தாண்டி, சிறப்புச் சொற்பொழிவுகளையும் நடத்துகிறது. ‘கார்பே டயம்’ (Carpe Diem), ‘வோக்ஸ் பாப்லி’ (Vox Populi), ‘டாக்ஸ் பை தி ஃபயர்லைட்’ (Talks by The Firelight), மற்றும் ‘ஆட் மெலியோரா’ (Ad Meliora) ஆகிய நிகழ்வுகளில், நடிகர்கள் துருவ் விக்ரம், அடா சர்மா முதல் ‘மனி ஹெய்ஸ்ட் தொடரின் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ, பாடகர் சித் ஸ்ரீராம், கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் மற்றும் சதுரங்க ரோட்ஸ் மற்றும் சதுரங்கச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வரை பலதரப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இது மாலை 6மணிக்கு ஒரு ஆடை அணிவகுப்பை பார்த்துவிட்டு, இரவு 8 மணிக்கு ஒரு கிராண்ட்மாஸ்டரிடம் வாழ்க்கைக்கான ஆலோசனையைப் பெறக்கூடிய ஒரு அரிய நிகழ்வாகவும் திகழ்கிறது.
ஒரே வளாகத்தில் பதினெட்டாயிரம் மாணவர்கள் ஒன்று கூடுவது என்பது உண்மையில் எப்படிப்பட்ட உணர்வைத் தரும் என்பதை எண்களால் மட்டும் முழுமையாக விவரிக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து பங்கேற்பாளர்கள் வருகை தருகின்றனர். விடுதியின் ஒவ்வொரு அங்குலத்தையும் நிரப்பி, பகிரப்பட்ட அறைகளிலும், தரைகளிலும் தங்கி, மாநிலங்கள் கடந்து வந்து அந்த சில நாட்களைக் கழிக்கிறார்கள். அந்த நாட்கள் அவர்களை முற்றிலும் சோர்வடையச் செய்தாலும், அதைத் தவறவிடாமல் இருந்ததை எண்ணி மகிழ்ச்சியடையவும் வைக்கும்.
ஃபெஸ்டம்பரின் கட்டமைப்பு இசை, நடனம், ஃபேஷன், கலை, கேமிங், நாடகம், இலக்கியக் கலைகள், புகைப்படம் எடுத்தல் போன்ற ஒன்பது குழுக்களின் தோள்களில் தாங்கி நிற்கிறது. இவை ஒவ்வொன்றும் மாணவர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தும் திறமைகளுக்கான மேடையாகும். கல்லூரியினர் பங்கேற்பதற்காக மட்டும் இல்லாமல் வெற்றி அடையும் இலக்குடன் வருகின்றனர். பதினாறு லட்சத்திற்கும் அதிகமான பரிசுத் தொகைக்காகவும், தனக்கென ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட ‘ஃபெஸ்டம்பர் சுழற்கோப்பைக்காகவும் போட்டியிடுகின்றனர். இதன் 1978 விழாவின் பதிப்பில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டு இசைநிகழ்ச்சி நடத்திய பிறகு ‘இளையராஜா டிரோஃபி’ என்று அழைக்கப்பட்டது ஒரு பெரிய வரலாற்றுச் சிறப்பின் தொடக்கமாகும்.
இரவில் 5,000க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய பொன் விழா மண்டபத்திற்குள் தான் ஃபெஸ்டம்பரின் உண்மையான சுவாரஸ்யம் கூடுகிறது. ஒரே கூரையின் கீழ் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்று கூடுகிறார்கள்;அன்றைய போட்டிகளும் சொற்பொழிவுகளும் ஒதுக்கி வைக்கப்பட்டு, அறிவிக்கப்படவிருக்கும் ஒரு பெயர், இசைக்கப்படவிருக்கும் முதல் இசைக்கருவியின் நாதம் ஆகியவற்றுக்கான கூட்டு எதிர்பார்ப்பு அது.
இத்தனை ஆண்டுகளில், அந்த மேடை ஓர் அசாதாரணமான கலைஞர்களின் பாரம்பரியத்திற்குச் சொந்தமானது. தன் பெயரால் கோப்பை அமைக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜாவே, தம்மை கௌரவித்த இந்த விழாவில் மீண்டும் இசைநிகழ்ச்சி நடத்திப் பெருமை சேர்த்தார். பென்னி தயாள் மற்றும் அமித் திரிவேதி ஆகியோர் தங்களது தனித்துவமான ஆற்றலை இந்த அரங்கிற்கு கொண்டு வந்தனர். அதேபோல சுனிதி சவுகான், ஜோனிதா காந்தி, கார்த்திக், நீதி மோகன், விஜய் இயேசுதாஸ், ராஜேஷ் வைத்யா மற்றும் டிஜே பாப்பா பாப்பா பலூஷி ஆகியோருடன் ‘மசாலா காபி’ ‘மசாலா காபி’ மற்றும் ‘மங்காஸ் தி மேங்கோ மேன்’ போன்ற’ இசைக் குழுக்களும் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு பெயரும் ஒரு கலைஞரைக் குறிக்கிறது; அவர்கள் மீண்டும் ஒருமுறை இந்த குறிப்பிட்ட இடத்தை ஒரு இரவுக்குத் தங்களுடையதாக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள், மேலும் பார்வையாளர்கள் அதை நேரில் காண நாடு முழுவதிலுமிருந்து மீண்டும் கடந்து வரத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
குழுக்கள், கடைகள் மற்றும் பரிசுத் தொகைகளுக்கு அப்பால் ஃபெஸ்டம்பர் உண்மையில் என்ன என்பதன் தெளிவான வெளிப்பாடு : ஒவ்வொரு பதிப்பிலும் மேடையில் தோன்றும் பெயர்கள் மாறினாலும், அதே எதிர்பார்ப்புடன் கூடிய இரவுகள் அமைவதும், ஒளியிலும் ஒலியிலும் கூட்டாகத் தன்னை மறந்து கரைவதும் ஒரு வழக்கமாக நடைபெறுகிறது. இது வெறும் போட்டி மட்டுமல்ல, ஒவ்வொரு செப்டம்பரிலும் 51 ஆண்டு பழமையான அடித்தளத்தில் புதிதாகக் கட்டியெழுப்பப்படும் ஒரு மாபெரும் சங்கமம் ஆகும்.
கடைசி இசை நிகழ்ச்சி முடிந்து கூட்டம் மெதுவாகப் பிரியத் தொடங்கும் போது, வளாகம் மீண்டும் அமைதியாகும்: அது ஆரம்பத்தில் இருந்த காத்திருக்கும் அமைதி அல்ல, மாறாக மிகவும் கனமான, அன்பான, பெயரிட முடியாத ஒரு அமைதி. பேருந்துகள் மாணவர்களை அவரவர் கல்லூரிகளுக்குத் திரும்ப அழைத்துச் செல்லும்; அவர்களுடன் சோர்வும், மறக்கமுடியாத நினைவுகளும் கூடவே செல்லும். என்.ஐ.டி திருச்சி மீண்டும் தனது சாதாரண வழக்கத்திற்குத் திரும்பும், வகுப்பறைகள் மீண்டும் நிரம்பும், பதாகைகள் மெதுவாக பழைய படி மாறும்.
இந்த உணர்ச்சிப் பெருக்கு நிரந்தரமானது அல்ல ஃபெஸ்டம்பர் ஒவ்வொரு ஆண்டும் உண்மையிலேயே முடிந்துவிடுவதில்லை. அது அடுத்த செப்டம்பர் தன்னை மீண்டும் அழைக்கும் வரை, பிரம்மாண்டமாகவும் பொறுமையாகவும் காத்திருக்கிறது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.