அதிமுக ஓட்டை யாராலும் பிரிக்க முடியாது ! – பழ.கருப்பையா பேட்டி

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் சரவணனும் அதிமுகவைச் சேர்ந்த பழ.கருப்பையாவும் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

இந்த தேர்தல் ஒரு மாறுதலை எதிர்நோக்கி இருக்கிறது. அதிமுக -திமுக இடையே தான் போட்டி என்றாலும் திமுகவுக்கும் டெல்லிக்கு நடக்கும் தேர்தல் என திமுகவினர் கூறுகிறார்கள். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி நம்பிக்கையோடு உள்ளார். அதிமுகவை அடிமை கட்சி என்று சொன்னாலும், பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி 28 இடங்கள் தான் ஒதுக்கியுள்ளார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

திமுகவினர் தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும் திசை திருப்ப முயல்கிறார்கள். மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோ. தளபதி சட்ட விரோதமாக கல்குவாரி நடத்துகிறார். மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதற்கு தான் பதவி 8000 ரூபாய் கூப்பனை ஆட்சி வருவதற்கு முன்பாகவே போலி கூப்பன்கள் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஈரான்-அமெரிக்க போர் நடந்த போதும் பெட்ரோல் விலையை ஏற்றி வைத்திருந்தார். மோடி. திமுகதான் பாஜகவை  பூதம் பூதம் என்று சொல்கிறார்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்து நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். ஆனால் நீட்  தேர்வு வந்து விட்டது என்றாலும் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக கையாண்டுள்ளார்.  ஒரு குற்றவாளியாளியை அமைச்சராக்க வேண்டும் என்பது ஜனநாயக நாட்டில் எங்கும் நடைபெற்றதில்லை.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அதிமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என விஜய்யிடம் கூறினேன்.  முதலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவை வீழ்த்துங்கள் பிறகு அதிமுகவை எதிர்த்து ஆட்சியை பிடிங்கள் என்றேன். அதிமுக ஓட்டை யாராலும் பிரிக்க முடியாது. எம்.ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு EPS அதிமுகவை கட்டிக்காத்து வருகிறார். தமிழ்நாட்டில் மூளை இல்லாதவர்கள் 2பேர் உள்ளார்கள்.

ஒன்று உதயநிதி மற்றொன்று விஜய் இவர்களுக்கு காலையில் செய்தித்தாள் படிக்கும் பழக்கமே கிடையாது. அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்ததால் தான் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பின்பு விஜயும் அதிமுக உடன் கூட்டணி வைத்திருக்கலாம்  என்று உணர்வார் என்றார்.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.