வடசென்னை சட்டமன்ற தொகுதிகள் வெற்றி யாருக்கு ? தேர்தல் களம் 2026 ! 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

வடசென்னை 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பில் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுகவை  சுமார் 3 இலட்சத்து 40ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

கலாநிதி வீராசாமி
கலாநிதி வீராசாமி

2025 ANGUSAM Book MAY 16 – 31 – இணையத்தில் படிக்க….

கலாநிதி வீராசாமி   திமுக           4,96,485

ராயபுரம் மனோ    அதிமுக          1,57,761

பால்கனகராஜ்         பாஜக             1,13,085

அமுதினி                     நாதக              95,786

திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர் (தனி), ராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் கள நிலவரம் பற்றிய விாிவான கருத்து கணிப்புகள்.

திருவெற்றியூர்

2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருவெற்றியூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவைச் சார்ந்த கே.பி. சங்கர் வெற்றிபெற்றுள்ளார். 1980இல் அதிமுக கூட்டணியில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் குமரிஅனந்தன் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். 2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டார்.

2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்திமுக கூட்டணி  பெற்ற வாக்குகள் 88 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 50 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 38ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 48 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

கே.பி. சங்கர்
கே.பி. சங்கர்

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திருவெற்றியூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் கலாநிதி வீராசாமி சுமார் 91ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக  33ஆயிரம் வாக்குகளையும் பாஜக 19 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளது. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 52 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 39ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.  இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 22ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 38 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 39ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், இந்த வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது திருவெற்றியூர் தொகுதியில் திமுக 3ஆவது முறையாக வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இராதாகிருஷ்ணன் நகர்

2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், இராதாகிருஷ்ணன் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவைச் சார்ந்த எபினேசர் வெற்றிபெற்றுள்ளார். 2016 இடைத்தேர்தல் மற்றும் 2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் சார்பில் ஜெ.ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். 2017இல் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் இத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

எபினேசர்
எபினேசர்

2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி  பெற்ற வாக்குகள் 95 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 53 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 42ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தலா 20 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இராதாகிருஷ்ணன் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் கலாநிதி வீராசாமி சுமார் 81ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக  36ஆயிரம் வாக்குகளையும், பாஜக 17 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளது. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 53 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 28ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.  இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 19ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 42 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 28ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது இராதாகிருஷ்ணன் தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பெரம்பூர்

இரயில்பெட்டி தொழிற்சாலையால் தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாக பெரம்பூர் உள்ளது. 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பெரம்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவைச் சார்ந்த ஆர்.டி.சேகர் வெற்றிபெற்றுள்ளார். 2016இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சார்ந்த பி.வெற்றிவேல் வெற்றி பெற்றார். இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து 2019இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் இத் தொகுதியில் திமுக வேட்பாளராக ஆர்.டி. சேகர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஆர்.டி.சேகர்
ஆர்.டி.சேகர்

Apply for Admission

2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி  பெற்ற வாக்குகள் 1இலட்சத்து 5 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 50 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 55ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சியைச் சார்ந்த என்.ஆர். தனபாலன் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் சுமார் 19ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இராதாகிருஷ்ணன் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் கலாநிதி வீராசாமி சுமார் 94ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக  27ஆயிரம் வாக்குகளையும், பாஜக 22 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளது. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 49 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 45 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.  இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 20ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 55 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 49ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது பெரம்பூர் தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கொளத்தூர்

கொளத்தூர் தொகுதி வில்லிவாக்கம் தொகுதி சீரமைக்கப்பட்டு, புதிய பகுதிகளை இணைத்து இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் தற்போதைய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2011, 2016, 2021 என மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதிராஜராம் அவர்களைத் தோற்கடித்துள்ளார்.

2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி  பெற்ற வாக்குகள் 1இலட்சத்து 5 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 35 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 70ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியை 11ஆயிரம் வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் 14ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன.

முதல்வர். மு.க.ஸ்டாலின்
முதல்வர். மு.க.ஸ்டாலின்

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இராதாகிருஷ்ணன் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் கலாநிதி வீராசாமி சுமார் 95ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக  18ஆயிரம் வாக்குகளையும், பாஜக 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 43 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 52 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.  இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 13ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 70 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 52ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டால் 4ஆவது முறையாக வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

திரு.வி.க.நகர் (தனி)

எம்பூர், பெரம்பூர், புரசைவாக்கம் என புதிய பகுதிகளை இணைத்து இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திரு.வி.க.நகர் தொகுதியில் திமுக கூட்டணியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டவர் பி.சிவகுமார் (எ) தாயகம் கவி. இவர் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாக வேட்பாளர் பி.எல் கல்யாணியைத் தோற்கடித்துள்ளார்.

2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி  பெற்ற வாக்குகள் 81 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 35 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 55ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த மருத்துவர் இளவஞ்சி 10ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். இவர் அண்மையில் தமிழர் வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யம் 9ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

பி.சிவகுமார் (எ) தாயகம் கவி
பி.சிவகுமார் (எ) தாயகம் கவி

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இராதாகிருஷ்ணன் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் கலாநிதி வீராசாமி சுமார் 72ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக  17ஆயிரம் வாக்குகளையும், பாஜக 15 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 40 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.  இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 10ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 55 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 40ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது திரு.வி.க.நகர் தொகுதியில் திமுக போட்டியிட்டால் தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இராயபுரம்

இராயபுரம் தொகுதியில் 1991, 2001, 2006, 2011, 2016 ஆகிய 5 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்டு 4 முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர், முன்னாள் சட்டமன்ற அவைத்தலைவர், முன்னாள் அமைச்சர் து. ஜெயக்குமார். 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், இராயபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் திமுகவின் சார்பில் போட்டியிட்டவர் இரா.மூர்த்தி. இவர் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட து. ஜெயக்குமாரைத்  தோற்கடித்துள்ளார். 1980இல் இராயபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் தோல்வி அடைந்துள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

2021இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி  பெற்ற வாக்குகள் 64 ஆயிரம். அதிமுக+பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 36 ஆயிரம். அதிமுகவை விட திமுக சுமார் 28ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 7ஆயிரம் வாக்குகளையும். மக்கள் நீதி மய்யம் 9ஆயிரம் வாக்குகளையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இராதாகிருஷ்ணன் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் கலாநிதி வீராசாமி சுமார் 60ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுக  24ஆயிரம் வாக்குகளையும், பாஜக 12 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. அதிமுக+பாஜக இணைந்து சுமார் 36 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளன. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சுமார் 28 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது.  இத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி 8ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட 28 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக+பாஜக இணைந்து வாங்கிய வாக்குகளை விட 28ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கான எதிர்ப்பு மனநிலை, தமிழக வெற்றிக் கழகம் என்று வாக்குகள் பிரிந்தாலும், கடந்த தேர்தல்களின் வாக்கு வித்தியாசங்களை வைத்து பார்க்கும்போது இராயபுரம் தொகுதியில் திமுக போட்டியிட்டால் தொடர்ந்து 2ஆவது முறையாக வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த சந்திப்பில் தென்சென்னை மக்களவைக்கு உட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளில் யாருக்குத் தேர்தல் களம் ஆதரவாக உள்ளது என்பதைப் பார்ப்போம்.

 

—   அங்குசம் அரசியல்.

உலக தரத்தில் உங்கள் சமையல் அறை - நேஷனல் மாடூலர் கிச்சன்...

Leave A Reply

Your email address will not be published.