மன வருத்தத்தை தந்தால் அதற்காக வருந்துகிறேன் – ஆசிரியர் வீரமணி ஐயாவுக்கு பகிரங்க கடிதம்

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆசிரியர் வீரமணி ஐயாவுக்கு பகிரங்க கடிதம் – எழுத்தாளர்  –  ஜெயதேவன்
மதிப்பிற்குரிய ஆசிரியர் ஐயா கி வீரமணி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். பெரியாரின் துணைவியார் மணியம்மை அவர்கள் மறைவுக்குப் பிறகு பெரியாரின் நிறுவனங்களை தாங்கள் செம்மையாக நிர்வகித்து வருவதற்கு தமிழ் சமூகத்தின் சார்பாக மிக்க நன்றி.‌ அதேபோல பெரியாரின் நூல்களினை தங்கள் அறக்கட்டளை மூலம் இதுவரை வெளியிட்டு வந்ததற்கும் மிக்க நன்றி
எழுத்தாளர் சுந்தர ராமசாமி
எழுத்தாளர் சுந்தர ராமசாமி
இந்த இடத்தில் ஒன்றினைக் குறிப்பிட வேண்டும். கலைஞர் காலத்தில் காலச்சுவடு நிறுவன ஆசிரியர் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் நூல்களை அரசுடைமை ஆக்கி உத்தரவிட்டார் கலைஞர் . ஆனால் தற்போதைய காலச்சுவடு ஆசிரியர் திரு . கண்ணன் அவர்கள் மிகக் கடுமையாக எதிர்வினை புரிந்தார்.‌” எங்கள் தந்தையார் நூல்கள் நன்றாகவே விற்பனை ஆகின்றன. ஆகவே அவற்றை நாட்டுடைமை ஆக்குவதன் மூலம் தாங்கள் அதனை பொதுமைக்குக்குக் கொண்டு வருவதை நாங்கள் விரும்பவில்லை.‌ எங்கள் தந்தையார் நூல்களினைப் பொருத்தவரை எங்களுக்கு விற்பனைக்கான களம் எங்களிடம் இருக்கிறது. ஆகவே அரசு தரும் நாட்டுடைமைக்கான நிதி எங்களுக்குத் தேவையில்லை எங்கள் தந்தையாரின் நூல்களின் காப்புமையை பொதுவாக்க நாங்கள் அனுமதிக்க முடியாது ” என்று பகிரங்கமாக பத்திரிகைகள் மூலம் அறிவிப்பு செய்தார். கலைஞரும் அதை ஏற்று சுந்தர ராமசாமி நூல்களை அரசுடைமை ஆக்குவதை நிறுத்தி வைத்தார்.
காலச்சுவடு கண்ணன்
காலச்சுவடு கண்ணன்

Sri Kumaran Mini HAll Trichy

அதேபோல தனது 50 ஆண்டுகால நண்பரான கண்ணதாசன் நூல்களை அரசுடைமை ஆக்கி அதை அன்று அறிவிப்பு செய்தார் கலைஞர்.‌ கவிஞரின் நூல்கள் பரவலாக போய் சேர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கலைஞர் செய்த அறிவிப்பு அது.
ஆனால் அதற்கு மிகக் கடுமையான எதிர்வினை புரிந்து விட்டார் காந்தி கண்ணதாசன்
“எங்கள் தந்தையார் நூல்களிலினை எங்களுக்கு விற்கத் தெரியும். எங்கள் தந்தையார் நூல்கள் நிறைய மக்கள் சார்பாக வாங்கப்படுகின்றன.‌ ஆகவே எங்கள் தந்தையார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவது மூலமாக எங்களுக்குள்ள ஒரு சொத்துரிமையை பறிப்பது போல இருக்கிறது.
அரசு அவ்வாறு செய்வது எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆகவே இதற்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம்” என்று பகிரங்கமாக அறிக்கை கொடுத்தார் காந்தி கண்ணதாசன்.
காந்தி கண்ணதாசன்
காந்தி கண்ணதாசன்
இது கலைஞர் அவர்களை மிகவும் பாதித்து விட்டது.‌ மறுநாள் கலைஞர் அவர்கள் பகிரங்கமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ” எனது நண்பன் மகன் என் முதுகில் குத்திவிட்டான். என் நண்பன் மகன் என்பதால்த்தான் ஒரு கோடி ரூபாயை பப்பாசிக்கு எனது சொந்த பணத்தை நிதியாக தந்து நல்ல எழுத்தாளருக்கு விருது தர ஏற்பாடு செய்தேன் .‌எனது நண்பர் மகன் மீதுள்ள நம்பிக்கை காரணமாகத்தான் இதை செய்தேன். ஆனால் அவருடைய அறிக்கை என் முதுகில் குத்தி காயம் செய்துவிட்டது. எனது நண்பரின் நூல்கள் பரவலாக போய் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இதனை செய்தேன். அதை காந்தி கண்ணதாசன் அவர்கள் தவறாக நினைத்து விட்டார் .ஆகவே அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்” என்று கண்ணதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்குவது நிறுத்தி வைத்து விட்டார். இது நடந்து முடிந்த வரலாறு

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மேலே குறிப்பிட்ட இருவரும் பொதுமக்கள் சொத்து அல்ல. அந்த இருவர் நூல்கள் கணிசமான ராயல்டியை குடும்பத்திற்கு தந்து வருகிறது. ஆகவே அவர்கள் அரசுடைமை ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் அர்த்தமுள்ளது. சரியானதும் கூட..
அண்ணா இறந்தபோது பெரியார் அஞ்சலி செலுத்திய படம்
அண்ணா இறந்தபோது பெரியார் அஞ்சலி செலுத்திய படம்
அன்புள்ள ஆசிரியர் அவர்களே
பெரியார் அப்படி தனி மனிதர் அல்ல .
பெரியார் பொது மனிதர்.
அவர் எழுதிய நூல்கள் பொதுச்சொத்து.‌ அவருடைய நூல்களை பொதுவுடமை ஆக்க வேண்டும் என்று நீங்களே அரசுக்கு பரிந்துரைக்க செய்திருக்க வேண்டும்.
தங்களுக்கு தங்கள் கட்சிக்கு தங்கள் நிறுவனங்களுக்கு அவற்றை நிர்வகிக்க நிறைய கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் வருவாய்க்கான வழிகளாக உள்ளன. பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்குவதால் உங்களுக்கு இழப்பு இல்லை.‌

Flats in Trichy for Sale

பெரியார் அவர்கள் நூல்களை நாட்டுடைமை ஆக்குவது மூலம் லட்சக்கணக்கான பேர் அவர்களின் எழுத்தை வாசிக்க கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது ஆகும் . எல்லா பதிப்பகமும் வேண்டும் போது வெளியிடுவதன் மூலம் பெரியார் எழுத்துக்கள் பரவலாக போகும்.‌ அதை நீங்கள் தடுப்பதன் மூலமாக பெரியாரின் கருத்துக்கள் பரவலாக போய் சேர்வதை தாங்கள் விரும்பவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நாட்டுடைமை ஆக்கப்பட்ட பல நல்ல எழுத்தாளர் நூல்கள் சீர் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் தந்து அந்த நூல்கள் பரவலாக செல்ல வழி செய்து வருகின்றது. அதுபோல ஒரு வாய்ப்பை பெரியாருக்கு நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்.

பெரியார்
பெரியார்
இயக்குனர் சீமான் அவர்கள்” பேசக் கூடிய ஆதாரங்களை எல்லாம் நீங்கள் வைத்துக் கொண்டால் நான் எந்த ஆதாரத்தை தருவேன்” என்று சொல்வது பொருள் உள்ளது. பல நூல்களில் பல கருத்துக்களை பெரியார் பேசி இருப்பார். அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும் பரவலாக மக்களுக்கு கிடைத்தால் தான் உண்மையான பெரியார் யார் என்பதை பொதுமக்கள் உணர்வார்கள். நீங்கள் மறைத்து வைப்பது மூலமாக பெரியாரை மறைத்து வைக்கிறீர்கள். பெரியாருக்கு அல்லது செய்கிறீர்கள். இந்த விதத்தில் சீமான் அவர்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.
எத்தனை காலம் தான் பெரியாருடைய கருத்துக்கள் நூல்கள் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்காமல் நீங்களே தடையாக இருப்பீர்கள். பெரியார் நூல்களை நாட்டுடமை ஆக்குவதன் மூலம் உங்களுக்கு பொருளாதார ரீதியாக பெரிய இழப்பு இல்லை. உங்கள் நிறுவனங்கள் தானாக இயங்கும். ஆகவே நாட்டுடமை ஆக்குவதற்கு நீங்கள் ஆவணச் செய்ய வேண்டும் அரசு உங்கள் அரசு தான்.
கலைஞர் - பொியார் - அண்ணா
கலைஞர் – பொியார் – அண்ணா
வரும் காலங்களிலாவது நீங்கள் பெரியார் நூல்களை அரசு உடமை ஆக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.. பெரியார் நூல்களை விட பன்மடங்கு வருமானம் பெரியார் அறக்கட்டளைக்கு வருகிறது. ஆகவே இது ஒரு பொருட்டே அல்ல அறிவு செல்வங்கள் அனைவருக்கும் பொதுவானது .அவற்றை நீங்கள் வெளிய விட மறுப்பது நல்லது அல்ல பெரியாருக்கு செய்யும் ஒரு வித துரோகம் ஆகும். ஆகவே இதுதான் சந்தர்ப்பம்.
இதனை பெரியார் மீது கொண்ட மதிப்பின் காரணமாகவே இந்த விண்ணப்பத்தை தங்களுக்கு வைக்கிறேன். எத்தனையோ நூல்களை வாங்கும் நான் கூட இன்னும் பெரியாரின் ஒரு நூல் கூட வாங்க வாய்ப்பில்லை.‌ தங்கச் சுரங்கத்தினை பாதுகாப்பது போல நீங்கள் பொது வெளியில் இருந்து பெரியார் கருத்துக்களை மறைத்து வைத்துக் கொள்கிறீர்கள் ஆகவே அவற்றை பொதுவாக்குங்கள் அதுதான் வருங்கால தலைமுறைக்கு நீங்கள் செய்யும் நல்ல சேவை..
இந்தக் கருத்து தங்களுக்கு மன வருத்தத்தை தந்தால் அதற்காக வருந்துகிறேன்
அன்புடன்
ஒரு ஏழை வாசகன் நன்றி

 

முகநூலில் எழுத்தாளர்  –  ஜெயதேவன்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

1 Comment
  1. பாஸ்கரன் says

    மடியில் கனம்

Leave A Reply

Your email address will not be published.