அங்குசம் பார்வையில் ‘தருணம்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘தருணம்’

  தயாரிப்பு : ’ஸென் ஸ்டுடியோஸ்’ புகழ் & ஈடன். டைரக்‌ஷன் : அரவிந்த் ஸ்ரீனிவாசன். நடிகர்—நடிகைகள் : கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பன், பாலசரவணன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி, விமல். ஒளிப்பதிவு : ராஜா பட்டார்சார்ஜி, பாடல்கள் இசை : தர்புகா சிவா, பின்னணி இசை : அஷ்வின் ஹேமந்த், பாடல்கள் : மதன்கார்க்கி, ஆர்ட் டைரக்டர் : வர்ணாலயா ஜெகதீசன், ஸ்டண்ட் : டான் அசோக், டான்ஸ் மாஸ்டர் : பாபி ஆண்டனி, காஸ்ட்யூம் டிசைனர் : நேஹா ஸ்ரீஹரி. பி.ஆர்.ஓ.: சதீஷ் & சிவா [ எய்ம் ]

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

சி.ஆர்.பி.எஃப் [ செண்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் ]-ல் வேலை பார்க்கும் போது, நக்சலைட் ஆபரேஷனில் தனது நண்பனை பலி கொடுக்கிறார் கிஷன் தாஸ். அவனின் சாவுக்கு கிஷன் தாஸ் தான் காரணம் என நினைத்து சஸ்பெண்ட் பண்ணுகிறது டிபார்ட்மெண்ட். சண்டையில் பட்ட குண்டு காயத்துடன் மனக்காயத்துடனும் வீட்டில் இருக்கிறார் கிஷன் தாஸ். இந்த நிலையில் காதலியின் பெற்றோர் தரும் நெருக்கடியால், காதலை பிரேக்கப் பண்ணுகிறார். ஆனால் அதே காதலியின் திருமணத்திற்குச் செல்லும் தருணத்தில் ஸ்ம்ருதி வெங்கட்டை சந்திக்கிறார்.

ஸ்ம்ருதியின் வீட்டிற்குச் செல்கிறார். அங்கே ஸ்ம்ருதியின் பெற்றோர் [ விமல்—ஸ்ரீஜாரவி ]  கிஷன் தாஸ் தான் நாங்கள் உனக்குப் பார்த்த மாப்பிள்ளை  என சொன்னதும் உற்சாகமாகிறார் ஸ்ம்ருதி. ஆனால் பக்கத்துவீட்டு  [ இந்த இடம் நமக்கு பெருங்குழப்பத்தை படத்தின் பின்பாதியில் ஏற்படுத்துகிறது] கீதா கைலாசத்தின் மகன் ராஜ் அய்யப்பன் ஸ்ம்ருதியை ஒன்சைடாக லவ் பண்ணுவதால், கிஷன் தாஸைப் பார்த்தாலே வெறுக்கிறார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்த தருணத்தில் ஒரு நாள், ஸ்ம்ருதி தனியாக வீட்டில் இருக்கும் போது அத்துமீறுகிறார் ராஜ் அய்யப்பன். அப்போது நடக்கும் மோதலில் இறந்துவிடுகிறார் ராஜ் அய்யப்பன். அந்த தருணம் பார்த்து, ஸ்ம்ருதியின் வீட்டிற்கு கிஷன் தாஸ் வருகிறார். அதன் பின் நடக்கும் லவ் &  க்ரைம் ஆட்டம் தான் இந்த ‘தருணம்’.

இந்த லவ் –க்ரைம் ஜானரில் இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணியவைக்கும் டீஸண்ட் டிஜிட்டல் அக்யூஸ்டுகளின் கதையையும் கனெக்ட் பண்ணியிருக்கார் டைரக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். வழக்கமாக தமிழ் சினிமாவில் வீட்டிற்குள் ஒரு கொலை நடந்த பின் ஒரு பரபரப்பு, படபடப்பு, பயம், போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் இதெல்லாம் இருக்கும். ஆனால் இந்த ‘தருணத்தில்’ அந்த ஃபார்முலாவை உடைத்திருக்கிறார் டைரக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.

தனது வீட்டிற்குள் ராஜ் அய்யப்பன் செத்ததால், சில சீன்களில் மட்டும் ஸ்ம்ருதி வெங்கட் படபடபுடனும் பயத்துடனும் இருக்கிறார். ஆனால் ஹீரோ கிஷன் தாஸோ, தான் ஒரு சி.ஆர்.பி.எஃப். ஆபீசர் என்பதால் கொஞ்சமும் பதட்டமில்லாமல், பாடியை டிஸ்போஸ் பண்ண எடுக்கும் ஆக்‌ஷன் எல்லாமே அலட்டம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அதுவே ஸ்கிரீன்ப்ளேவை ஸ்லோவாக்குகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை தரும் வரவு கிஷன் தாஸ். கொஞ்சம் வெயிட்டான உடல்வாகோ, தொந்தி—தொப்பையோ இல்லாமல் ஸ்லிம்மாக இருக்கிறார் கிஷன் தாஸ். நடிப்பும் நன்றாகவே வந்திருக்கிறது. “நாம லவ் பண்ணும் போது காதலி நல்லாருக்கணும்னு நினைக்கிறோம். அதே மாதிரி தான் பிரேக்கப் ஆனாலும் நல்லா இருக்கணும்ணு நினைக்கணும்” என ஸ்ம்ருதியிடம் ஸ்மார்ட்டாக சொல்லும் சீனில் பளிச்சிடுகிறார்கள் டைரக்டர் அரவிந்த ஸ்ரீனிவாசனும் கிஷன் தாஸும். இந்த பாஸிட்டிவ் சிந்தனை தான் படத்தின் சிறந்த தருணம். அதே போல் ஸ்ட்ண்ட் சீக்வென்ஸிலும் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார் கிஷன் தாஸ்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்ம்ருதி வெங்கட், பார்க்க கும்முன்னு இருக்கிறார், பளிச்சுன்னு இருக்கிறார், நன்றாக நடித்தும் இருக்கிறார்.   பாலசரவணன் இருக்கும் இடம் கலகலப்பு இருக்குமிடம்.

”வானமும் வானமும் நீ.. பூமியும் பூமியும் பூமியும் நீ… “ மதன் கார்க்கியின் வரிகளுக்கு தர்புகா சிவாவின் இசை மிகவும் இதம். என்ன ஒண்ணு அந்தப் பாடலை க்ளைமாக்ஸில் ஸ்கோரல் போடும் போது போட்டுவிட்டார்கள்.

கீதா கைலாசம் வீடும் ஸ்ம்ருதி வெங்கட் வீடும் ஒரே அபார்ட்மெண்டில் ஒரே ஃப்ளோரில் தான் இருக்கு. ஆனா கீதா கைலாசம் மகன் ராஜ் அய்யப்பன் அதே அபார்ட்மெண்டுக்கு காரில் வந்ததா சொல்றீகளே டைரக்டர்? அதெப்படின்னு நமக்குப் புரியல.  இதான் நாம ஆரம்பத்துல சொன்ன பெருங்குழப்பம்.

கேமராமேன் ராஜா பட்டாசார்ஜியும் பேக்ரவுண்ட் ஸ்கோர் அஷ்வின் ஹேமந்தும் பல தருணங்களில் நன்றாகவே உழைத்திருக்கிறார்கள்.

‘தருணம்’ தரம் குறைவு என சொல்லிவிட முடியாது.

–மதுரை மாறன்

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.