கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி செயலாளர் ! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி  கிராமத்தைச் சேர்ந்த  புகார்தாரர்  கார்திகேயன்  தனது அக்கா கணவர் அருண்குமார், என்பவருக்காக பனையக்குறிச்சி கிராமம், கிருஷ்ணா கார்டன், ARK நகரில் கட்டிவந்த வீட்டிற்கு, வீட்டுவரி நிர்ணயம் செய்த தரக்கோரி பனையக்குறிச்சி பஞ்சாயத்து செயலாளர் மாரியப்பனை அனுகியபோது, ரூ.25,000/- லஞ்சம் கேட்டு, புகார் தாரர் கார்த்திகேயன் வேண்டுகோளுக்கிணங்க ரூ.15,000/-ஆக குறைத்து கேட்டுள்ளார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தாரர் கார்திகேயன் 23.06.2026ந்தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 23.06.2026 துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சக்திவேல் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது பனையக்குறிச்சி பஞ்சாயத்து செயலாளர் மாரியப்பன் லஞ்சப்பணம் ரூ.15,000/-ஐ கார்த்திகேயனிடமிருந்து கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.