அங்குசம் பார்வையில் ‘பனிவிழும் இரவு’

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தலைப்பு கவித்துமா இருக்கு, படமும் ரசனையாத் தான் இருக்கும்னு நினைச்சு தியேட்டருக்குள்ள போனோம். இயற்கையின் அரசி[ ஏன் அரசன்னு சொல்லக்கூடாதா? தாரளமா சொல்லலாம்] கொடைக்கானலில் கதை ஆரம்பிச்சுது. அங்கே இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கண்ணீரும் கம்பலையுமாக வருகிறார் ஹீரோ அருண் கார்த்தி. ‘நானும் எனது உட்பியும் பங்களா ஒன்றில் தங்கியிருந்தோம். நேத்து ராத்திரி யாரோ சிலர் வந்து என்னோட உட்பியை அடிச்சுத் தூக்கிட்டுப் போங்க. அவளைக் கண்டு பிடிச்சுக் கொடுங்க சார்”னு  இன்ஸ்பெக்டர் சேரன்ராஜிடம் தேம்பித் தேம்பி அழுகிறார்.

பனிவிழும் இரவுதனது போலீஸ் படையுடன் [ நாலு பேர் தான்] அந்த பங்களாவுக்குப் போய்…உள்ளே…வெளியேன்னு சல்லடை போட்டுப் பார்த்தும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. பரவாயில்லையே ஜில்லுன்னு இருக்கும் லொக்கேஷனில் ஹாட்டா ஆரம்பிக்குதே படம்னு நம்பி உட்கார்ந்தோம். அப்படியெல்லாம் எங்களை நம்புனா அதுக்கு நாங்க என்ன பண்றது?ன்னு சபதம் போட்டு படம் எடுத்திருப்பாயங்க போல.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

க்ரைம் சப்ஜெக்டை எவ்வளவு ஸ்பீடா கொண்டு போயிருக்கணும்? ஆனா டைரக்டர் செ.ரா.ராஜேஷோ ஆவணப்படம் மாதிரி எடுத்து நம்ம பொறுமையை ரொம்பவே டெஸ்ட் பண்ணிட்டாரு. அக்யூஸ்ட்கள் சரவண சக்தி உட்பட நாலஞ்சு பேரை ஸ்டேஷனுக்கு கூட்டி வந்து விசாரிக்கிறார் சேரன்ராஜ். “சரிடா உங்க மேல எந்தத் தப்பும் இல்ல, நீங்க நல்லவய்ங்கடா, போங்கடா”ன்னு அனுப்பி வைக்கிறாரு.

பனிவிழும் இரவுபடம் முடிய கால் மணி நேரம் இருக்கும் போது தான் மனநல மருத்துவராக வரும் கஜராஜ் மூலம், ”அந்தப் பையனுக்கு [ஹீரோ அருண் கார்த்தி] மெண்டல் டிப்ரெஷன் இருக்கு. அதுக்கு நான் தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கிறேன். அந்தப் பொண்ணு செத்துப் போய் நாலு வருசமாச்சு. அதனால் அவன் ஏ.ஐ.மூலமும் சாட்ஜிபிடி கூடவும் பேசிக்கிட்டு அந்தப் பொண்ணு உயிரோட இருப்பதா நம்பி, உங்ககிட்ட வந்துருக்கான்” என போலீசிடம் சொன்னதும் நமக்கு ‘ரொட்டேட் தி ஹெட்’ தான்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஹீரோ அருண் கார்த்திக்கும் நடிப்புக்கும் ரொம்ப தூரம் போல. பையன் திக்கித்திணறி நடிச்சு நம்மையும் திணற வைக்கிறாரு. ஹீரோயின் ஏனாக்‌ஷி கங்குலி, ஒல்லிக்குச்சி உடம்புல பார்க்கவே பரிதாபமா இருக்காரு. நடிப்பு அதைவிட பரிதாபமா இருக்கு.

தலைப்புல இருக்கும் கவித்துவம் படத்துல 1% கூட இல்லை.

அங்குசம் பார்வையில் ‘பனிவிழும் இரவு’ 30/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.