அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பாண்டிராஜின் 12-ஆவது படம் ‘பரிமளா & கோ’ பிரஸ்மீட் நியூஸ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சுபாஷ்கரனின்  லைக்கா தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருக்கும் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், இப்போது சுபாஷ்கரனின் ஆசியுடன் தனியாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். ‘பரிமளா & கோ’ என்ற  முதல் தயாரிப்பை இயக்குனர் பாண்டிராஜின் ‘பசங்க’ புரொடக்‌ஷன்ஸுடன் இணைந்து  தயாரித்துள்ளார். ‘தலைவன் –தலைவி’க்கு அடுத்து பாண்டிராஜின் 12-ஆம் படமாக  விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘பரிமளா & கோ’வில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகிபாபு, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பூர்ணிமா ரவி, ஆதித்யா [ மிஷ்கின் தம்பி], சென்றாயன், அனந்திகா, காயத்ரி,  டான்ஸ் மாஸ்டர் சாண்டி, சஞ்சீவி, ஹர்ஷத், ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : ஜார்ஜ் வில்லியம்ஸ், இசை : ஃபாக்ஸென், எடிட்டிங் : பிரதீப் ராகவ், பி.ஆர்.ஓ : சதீஷ் [ எய்ம்]

Parimala & Co movie‘பரிமாளா & கோ’வின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து பிரஸ்மீட்டும் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

“இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்தப் படம் மிகவும் பெருமைக்குரிய படம். பாண்டிராஜ் சார் படத்தில் நடித்தது ரொம்பவும் சந்தோஷம். இப்படிப்பட்ட படம் தான் இப்போதைய தேவை. தயாரிப்பாளர் தமிழ்க்குமரன் தாரள மனசுக்காரர்” இப்படிப் பேசினார்கள் சாண்டி, சென்றாயன், ஹர்ஷத், சஞ்சீவி, ஆகியோர்.

“ஜெயராம் சார், ஊர்வசி மேடம் போன்ற ஜாம்பவான்களுடன் நடித்தது வாழ்க்கையில் மறக்கவே முடியாதது. இதற்காக பாண்டிராஜ் சாருக்கு நன்றி” இப்படிப் பேசியவர்கள் காயத்ரி, அனந்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பூர்ணிமா ரவி.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தமிழ்க்குமரன், “படத்தின் முழுப்பொறுப்பையும் பாண்டிராஜிடம் ஒப்படைத்துவிட்டேன். இதன் வெற்றிக்கான முக்கியக் காரணம் அவர் தான். படு ஸ்பீடாக படத்தை முடித்ததைப் பார்த்து பிரமித்துவிட்டேன். இப்படி உழைக்கும் இயக்குனரைப் பார்ப்பது கடினம். இந்தப் படத்தில் நானும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ளேன். மிகவும் அழகான படைப்பாக வந்துள்ள இந்த பரிமளா & கோவிற்கு மீடியாக்களின் ஆதரவை வேண்டுகிறேன்”.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மிஷ்கின், “பாண்டிராஜ் மிகவும் அன்பான மனிதன். அவரின் பலமே மொழி தான். மனிதர்களை மட்டும் பார்க்காமல் அவர்களின் மொழியையும் பார்க்கக் கூடியவர் பாண்டிராஜ். இருபது வருசங்களாக ஒரு இயக்குனர் தொடர்ந்து சினிமாவில் இருக்கிறார் என்றால் அவரிடம் அசாதாரண திறமை இருக்க வேண்டும். அந்த திறமை பாண்டிராஜிடம் இருக்கு. அதற்கடுத்து ஜெயராம் சார், ஊர்வசி அம்மா போன்ற ஆளுமைகளுடன் நான் இருப்பதும் மகிழ்ச்சியே”.

ஊர்வசி, “பசங்க படத்திலிருந்து பாண்டிராஜை கவனித்து வருகிறேன். அவருக்குள் சிறந்த எழுத்தாளர் இருக்கிறார். கதை தான் ஹீரோ என்பது சில கதைகளைக் கேட்டாலே தெரிந்துவிடும். இந்த பரிமளா& கோவிலும் கதை தான் என்பது ஹீரோ எனத்  தெரிந்து உடனே ஒத்துக்கொண்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு  ஜெயராமும் நானும் சேர்ந்து நடித்துள்ளோம்.  இந்தப் படத்தில் பாண்டிராஜுக்கு பக்கபலமாக எல்லா டிபார்ட்மெண்டுகளிலும் இருந்தவர் அசோசியேட் டைரக்டர் திவ்யா தான். நல்ல உழைப்பாளிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு”.

Parimala & Co movieஜெயராம், “இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ திரைக்கதை தான். இதில் நடந்த எல்லா விஷயங்களும் பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. மக்களிடம் இப்படத்தைக் கொண்டு சேர்க்க வேண்டியது மீடியாக்களின் கைகளில் தான் உள்ளது”.

“பாண்டிராஜ், “மூன்று வருடத்திற்கு முன்பே தயாரான கதை இது. இதை தமிழ்க்குமரன் சாரிடம் சொன்ன போது அவர் ரசித்து சிரித்தவிதமே எனக்கு நம்பிக்கை கொடுத்தது. ஜெயராம் சாரும் ஊர்வசி மேடமும் இந்தக் கதைக்குள் வந்ததுமே பாதி வெற்றி கிடைத்துவிட்டது. சுபாஷ்கரன் சார் எங்களுக்கு லண்டனில் மிகப்பெரிய விருந்து கொடுத்தார். மக்களுக்கும் இந்தப்படம் நல்ல விருந்தாக இருக்கணும் என வாழ்த்தினார். மீடியாக்களும் வாழ்த்தணும்”.

 —  ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.