சில்லரை நடிகரின் அடாவடி! கடுப்பான பிஆர்ஓ.!
தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்.வி.எண்டெர்டெய்ன்மெண்ட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்து விரைவில் ரிலீஸ் ஆகும் படம் பாரிஸ் கஃபே (Paris cafe). இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசியவர்கள்…
படத்தின் தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன்
“இது பட்ஜெட் படம் ஆனா ஒரு ஸ்ட்ராங் மெசேஜ் இருக்கு. நம்ம சமுதாயத்தில் நடக்குற முக்கியமான விஷயம் பத்தி பேசுற படம். குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இந்தப் படத்தில் இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. படத்தின் இயக்குனர் என்னுடைய கணவர் 20 வருடமா முயற்சி செய்கிறார் . ஆனா சூழ்நிலை அவரை இயக்குநராக விடல அந்த சூழ்நிலை நான்தான். இந்தப் படத்துக்காகநிறைய புக் படிச்சு ரிசர்ச் பண்ணி இருக்காரு. என்னுடைய கணவரை நினைத்தால் எனக்கு பெருமையா இருக்கு”.

சிறப்பு விருந்தினர் இயக்குனர் மித்ரன் ஜவகர்
“ஒரு டைரக்டருக்கு மனைவி புரொடியூசரா கிடைக்கிறது பெரிய அதிர்ஷ்டம், குரு சோமசுந்தரம் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர், இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்”.

படத்தில் நடித்த குரு சோமசுந்தரம், அனுமோல் உட்பட அனைவரும் ‘பாரிஸ் கஃபே’ படத்தைப் பற்றியும் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் பற்றியும் சுருக்கமாக பேசி கமுக்கமாக அமர்ந்துவிட்டனர். ஆனால் விஜய் விஷ்வா என்ற உப்புமா நடிகரின் மண்டைக்கர்வப் பேச்சு தான் மீடியாக்களையும் படத்தின் பிஆர்ஓ ரியாஸ் அகமதுவையும் படு டென்ஷனாக்கிவிட்டது. “சின்ன படங்களை ரிலீஸ் பண்ணுவதற்கு ரொம்ப சிரமமா இருக்கு.
அதனால முதல்வர் விஜய்ணா தமிழ்நாடு அரசு சார்பில் ஓடிடி பிளாட்ஃபார்ம் தொடங்கணும்( எப்பேர்ப்பட்ட தற்குறி பாருங்க) அப்ப தான் சினிமா நல்லாயிருக்கும்” என அரை லூசு மாதிரி பேசியவர்….. திடீர்னு “கர்நாடக வனத்துறையினர் மூன்று தமிழர்களை சுட்டுக் கொன்றதை இங்கே இருக்கும் போலிப் போராளிகள் கண்டிக்கவும் இல்லை, கண்டுக்கவும் இல்லை” என டைரக்டர் பா.இரஞ்சித்தை வம்பிழுத்த உடனே மேடையின் அருகே நின்ற பிஆர்ஓ ரியாஸ் அகமது, “ஹலோ…. படத்தைப் பற்றி மட்டும் பேசுங்க. சம்பந்தமில்லாம அரசியல் பேசாதீங்க” என கண்டித்தார்.

ஆனாலும் அந்த சில்லரை நடிகரோ…. “நான் அமெரிக்கா போயிருந்தேன். அங்கே சாதி இல்லை, ஜப்பான் போயிருந்தேன் அங்கே சாதி இல்லை. ஆனால் இங்கே தான் இருக்கு. நான் அப்படித்தான் பேசுவேன் ” என சண்டியர்த்தனம் பண்ண ஆரம்பித்ததும் மேலும் டென்ஷனான ரியாஸ் மேடையில் ஏறி அந்த நடிகனின் கையைப் பிடித்து கீழே இறங்கச் சொல்ல, டைரக்டர் சராஜ் சீலனும் “கீழே இறங்குய்யா” என வலுக்கட்டாயமாக அந்த சில்லரை நடிகனை கீழே இறங்கச் சொன்னார்.
இந்த மாதிரி சில்லரைகளை வச்சு படம் எடுக்குற ஆளுகளை என்ன செய்றது?
தொழில்நுட்பக் குழு
ஒளிப்பதிவு – சதீஷ் ஜி.
இசை – கே. கிருஷ்ணகுமார்
படத்தொகுப்பு – வி.ஜே. சாபு ஜோசப்
கலை இயக்கம் – தாமு,
பி.ஆர்.ஓ – ரியாஸ் அஹ்மத், பாரஸ் ரியாஸ்
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.